உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

Devotions for Lent from Holy Bible: Mosaic

46 ல் 13 நாள்

சார்ந்திருத்தல்

எமது இன்றைய கலாச்சாரம் சுயாதீன வாழ்க்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாம் அறியாததல்லவே. அமெரிக்க 'லோன் ரேஞ்சர்' , ஹீரோ என்பதற்கு ஒரு அடையாளம். ஆயினும், அந்த ஹீரோவான 'லோன் ரேஞ்சரே' துயரத்தின் எல்லைக்கு செல்ல அதிக நாட்கள் தேவையில்லை. என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று நினைக்கும் இன்றய கலாச்சாரத்தால் கூட , 'செயுங்- ஹுய் சோ'வின் (2007 ஆம் ஆண்டு நடந்த வெர்ஜினியா படுகொலை குற்றவாளி) மரணம் அவர் தனிமைப்படுத்தப்பட்ட படியால் உண்டான மன உளைச்சலால் உருவானது என்று இலகுவாக கூற முடியும்.

ஆரம்பத்திலிருந்தே, நமது ஆதிப்பிதாவான ஆதாமின் தனிமையுடன் நம் ஒவ்வொருவரும் இலகுவாக நம்மை தொடர்புபடுத்திக்கொள்ளலாம்.ஆதாமின் வாழ்க்கையில் ஏவாள் உருவாக்கப்பட்டமையும், ஆரம்பத்திலிருந்தே கடவுள் மனிதனுடன் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறவும், மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும், மற்றவர்களுடன் நல்ல ஒரு உறவை ஏற்படுத்தி வாழ உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதற்கு சான்றாகும்.

உறவென்பது, ஒரு மனிதனின் சுயாதீனத்தை பலியாக்காது. மாறாக, உறவென்பது, எமது குறைவுகளை நிவிர்த்தியாக்க கிடைத்த ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.எமது பலவீனமான சூழ்நிலைகளில், இன்னொருவரின் உதவியும், இன்னொருவரில் சார்ந்து வாழ்வதின் முக்கியத்துவத்தையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த திட்டத்தைப் பற்றி

Devotions for Lent from Holy Bible: Mosaic

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்

More

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்