உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

Devotions for Lent from Holy Bible: Mosaic

46 ல் 16 நாள்

என் மேல் சாய்ந்திரு (கேரன் ஸ்லோன்) "என் மேல் சாய்ந்திரு". நம் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும், உங்களுக்கும் எனக்கும் கர்த்தர் இந்த அழைப்பை விடுக்கிறார்.
"கர்த்தரே, தயவு செய்து என்னை காப்பாற்றும்" என்று பதிலளிக்க நாம் விழையலாம்.
"சீக்கிரம் வாரும், ஆண்டவரே, உதவி செய்யும்." ஆனால், என் கவனம் என்னவோ தொடர்ந்து என் மீதே ஒட்டிக்கொள்கிறது. ஒன்று, நான் இதுவரை சாதித்தவைகளை பற்றிய சிந்தனையில் பீடிக்கப்பட்டிருக்கிறேன் அல்லது சாதிக்காமல் விட்டவைகளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் சூழ்நிலைகளானது, ஒன்று என் சொந்த திறன்களின் விளைவோ அல்லது என் சொந்த வரம்புகளின் குற்றமோ என்று நம்புகிறேன்.
என் வாழ்க்கை என்னைப்பற்றி மட்டுமே இருப்பதினால் என்னை படைத்தவரின் மீதுள்ள என் சார்பைக் குறித்து பார்வை உணர்வின்றி உள்ளேன். நித்தியபரனின் தோளின்மேல் சாய்ந்திருக்க அழைக்கும் குரலானது எனது திமிர் மற்றும் கவலையின் கூச்சல் சத்தத்தால் கேட்பதில்லை.பிறர் சார்ந்து வாழும்படியே கர்த்தர் நம்மை வடிவமைத்திருக்கிறார். இது இருமுகமான சார்பைக் கொண்டது - முதலாவது, நேரடியாக கர்த்தர்மீதும், இரண்டாவதாக, கர்த்தர் நம் வாழ்வில் புகுத்தும் மக்கள் மூலமாக கர்த்தர்மீதும். நமது வாழ்க்கை முறை உள்ளிணைப்பானதாக இருக்கவேண்டும், தனிமையானதாக அல்ல.இயேசு இவ்வுலகில் மனிதனாகவும் தேவனாகவும் வாழ்ந்ததினால் அவர் தம் பிதாவின் மேல் முற்றிலும் சார்ந்து முழுநிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்; ஆகிலும் அவர் மனிதர் மூலமாக பிதாவானவர் அனுப்பித் தந்த வழிவகைகள் மேலும் சார்ந்திருந்தார். மரியாள் மூலமாக மனித வாழ்வைக் கர்த்தர் இயேசுவுக்கு அமைத்தார், மரியாள் முதலில் இயேசுவைத் தனது சரீரத்துக்குள்ளாக சுமந்தாள், பின்னர் தன் கரங்களில் ஏந்தினாள். மரியாள் உட்கொண்ட ஊட்டம் தான் அவர் உட்கொண்ட முதலாம் ஊட்டச்சத்து. மனிதனின் ஆத்துமாவுக்குத் தேவையான மிக முக்கியமான தினசரி உணவை தயாரித்து தாயின் கடமைகளை மனதார செய்து அவரை திருப்திப்படுத்தினாள்.பருவமடைந்த இயேசுவோ, தாம் அழைக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்ற தம்மைச் சுற்றியிருந்த திரண்ட சமுதாயத்தை நம்பியிருந்தார். ஒரு பையன், ஐந்தாயிரம் பேருக்கு போஷிக்கத் தக்கதாக ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் அளித்தான். முழு சமாரியாவுக்கும் நற்செய்தி கூறி, அவர்களில் பலர் தம்மை விசுவாசிக்கும்படி செய்ய, இயேசு கிணற்றண்டை ஒரு ஸ்திரீயிடம் தண்ணீர் கேட்டார். கெத்சமனே தோட்டத்தில் தமக்கு மிகஅவசியமான நேரத்தில் அவர்கள் தூங்கிவிட்டாலும் கூட, கடுந்துயரில் அவதிப்பட்ட நேரத்தில் இயேசு பேதுரு, யாக்கோபு, யோவான் இம்மூவரின் துணையை நாடினார். இயேசு சிலுவையில் மரித்தவுடன் கடைசி முறையாக அவருடைய சரீரத்தை சுமக்கும்படி மரியாள் அங்கு யோவானுடனும் மற்ற ஸ்திரீகளுடனும் ஆவலாய் அங்கே காத்திருந்தாள். இயேசு தனது சீஷர்களிடம் இன்னொரு காரியத்தையும் எதிர்பார்த்தார் - தமது தாயாரை கவனிப்பதை (யோவான் 19:26-27). அவரது கல்லறை கூட அவரது தொண்டர்களுள் ஒருவரின் பரிசு தான் (மத்தேயு 27:59-60).

ஆனாலும் மூன்று நாட்களுக்கு மேல் இயேசு அந்தக் கல்லறையில் தங்கவில்லை. ஏனென்றால், தம்மை சாவிலிருந்து உயிர்த்தெழச் செய்த ஒருவர் மேல் மட்டுமே இந்த எல்லாரிலும் மேலாக அவர் சார்ந்திருந்தார்.விடுதலையில் சார்புத்தன்மையும் அடங்கும். தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய நம்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. நாம் இனி அவமானத்திலோ சுயதிருப்தியிலோ நம்மையே மறைத்துக் கொள்ளவேண்டியதில்லை. நீங்களும் நானும் தொடர்ச்சியாக சந்திக்கும் துக்கமான நிகழ்வுகளிலும் மகிழ்ச்சியான நிகழ்வுகளிலும் கூட, "கர்த்தாவே, தயவு கூர்ந்து என்னை விடுவியும்!" என ஜெபித்து நம் பிதாவாகிய தேவன் மீதுசார்ந்து கொள்ளலாம். "தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்." (சங்கீதம் 70:1)

நாம் கர்த்தர் மீது சாய்ந்து சார்ந்து கொள்ளுகிறோம், நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் மீதும் சார்ந்திருக்கிறோம், விசுவாசத்தில் நமக்கு முன்சென்றிருக்கும் பரிசுத்தவான்கள் மேலும் சார்ந்திருக்கிறோம். அறுநூறு வருஷங்களுக்கு முன்னர், ஜான் காசியன் என்ற ஐரோப்பிய கிறிஸ்தவர் ஒருவர், தாம் மத்திய கிழக்கு பாலைவனத்தில் வசிக்கும் துறவிகளுடன் கலந்துரையாடல்களின் தொகுப்பை பிரசுரித்துள்ளார். முதியவரான ஈசாக்கு என்ற துறவி இளம் வயதில் ஜான் தம்மை துறவிமடத்தில் சந்தித்தபோது சங்கீதம் 70லிருந்து இந்த ஜெபத்தை பகிர்ந்திருந்தார். ஜானின் புத்தகமும் ஈசாக்கின் ஜெபமும் உலகெங்கிலும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒருதாக்கத்தை ஏற்படுத்தியது. எந்த அளவிற்கென்றால், இன்றும்கூட ஜெபநேரங்களை ஜான் காசியனிடம் ஈசாக்கு குறிப்பிட்ட வேதபகுதியைக் கொண்டு துவங்குகிறார்கள். நான் கூட அமர்ந்திருந்து என் அழைப்பைக் கேட்கக் காத்திருக்கும் போது, இதே ஜெபவழக்கத்தைக் கைக்கொள்கிறேன், என் நன்றியின் ஒரு பகுதி, ஜான் காசியனுக்கும், ஈசாக்குக்கும், அவரது மற்ற துறவி கூட்டாளி்களுக்கும் சாரும்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Devotions for Lent from Holy Bible: Mosaic

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்

More

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்