உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!Sample

“ஆரோக்கியமான சமன்பாடுள்ள ஜெபத்திற்கு ஆறு திறவுகோல்கள் – பாகம் இரண்டு”
4. உங்களது தேவைகளையும், விருப்பங்களையும் தேவனுக்குத் தெரிவித்து, அவைகளைச் சந்திக்கும்படி வேண்டுங்கள் – “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்….”
அன்பான தகப்பன் தன் பிள்ளைமேல் கொண்டிருக்கும் மனதுருக்கத்துக்கு வேதம் ஒப்பிடுவதுபோல, உங்கள் மேலுள்ள தேவனுடைய அன்பு திரளானதும், முடிவற்றதும், நிபந்தனை அற்றதுமாகும். அவர் தன் பிள்ளை (நீங்கள்) பேசுவதைக் கேட்க ஆசைப்படுகிறார். உங்கள் வாழ்வைப்பற்றியும், உங்கள் தேவைகள், விருப்பங்களைப்பற்றியும் அவரிடம் தெரிவித்து அவைகளுக்கான பதில்களையும் அவரிடம் கேட்கும்படி ஆசிக்கிறார். அவரது அன்பு உங்களது எதிர்பார்ப்புக்கும் மேலாக உங்களை ஆசீர்வதிக்க அவரை நெருக்கி ஏவுகிறது.
5. உங்களுக்கெதிராகக் குற்றம் இழைத்தவர்களை நீங்கள் மன்னிக்கவேண்டும் என்பதை நினவில் கொண்டு, உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி தேவனிடம் வேண்டுங்கள் – “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்”
நமது பாவங்களுக்குத் தேவனிடம் மன்னிப்பு கேட்பது என்பது முதலில், நாம் செய்தது பாவம்தான் என்று நமக்கு நாமே ஒப்புக்கொண்டு பின்னர் தேவனிடம் அறிக்கை செய்வது.
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”- 1 யோவான் 1:9
தேவன் உங்களை மன்னித்து, உங்களைப் பாவங்களறச் சுத்திகரித்து விட்டார் என்று நீங்கள் உறுதியாய் நம்பலாம். அந்த மன்னிப்போடு குற்ற உணர்வு, வெட்கம், நியாயத்தீர்ப்பு இவற்றிலிருந்தும் விடுதலை பெற்று விட்டீர்கள்.
தேவன் நம்மை மன்னித்தது போல, நமக்கு விரோதமாகக் குற்றம் இழைத்தவர்களை நாம் மன்னிக்கவேண்டும் என்று தேவன் சொல்லுகிறார். தேவனிடம் நாம் பெற்றுக்கொள்கிற மன்னிப்பு நமக்கு விடுதலையைக் கொண்டுவருவது போன்றே, நாம் பிறருக்கு அளிக்கும் மன்னிப்பும் நமக்கு கசப்பிலிருந்தும், வைராக்கியத்திலிருந்தும், பழைய மனக்காயங்கள் தரும் வேதனைகளிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.
கிறிஸ்துவுக்குள் சுதந்திரமான வாழ்வை நாம் வாழ்வதற்கு மன்னிப்பு பெறுவதும், மன்னிப்பு அளிப்பதும் அஸ்திபாரம் ஆகும்.
6. தேவனுக்கேற்காத சூழ்நிலைகளிலிருந்தும், சோதனைகளிலிருந்தும் நாம் தப்புவிக்கப்படும்படி தேவ வழிகாட்டுதலுக்காக ஜெபியுங்கள் – “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்”
1 யோவான் 1:9-ல் காண்கிறபடி தேவன் நமது பாவங்களை மன்னித்து, நம்மை எல்லா அநீதியிலிருந்தும் சுத்திகரித்திருக்கிறார்; ஆனால், விழுந்துபோன உலகில் வாழ்வதால், நம்மை இன்னும் சோதனைகள் சூழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கர்த்தர் கற்பித்த ஜெபத்தின் இந்தப்பகுதி நாம் ஆண்டவரிடம் பெற்றுக்கொண்ட மன்னிப்பில் மயங்கி செயலிழந்து விடாமல், எதிர்காலத்தின் பாவங்களைத் தவிர்க்கவும் கவனமாயிருக்க வேண்டும் என்பதை எப்போதும் சிந்தையில் கொள்ளவேண்டும். தேவன் நம்மை மன்னித்ததினால் நமது ஆவிக்குரிய தண்டனையில் இருந்து தப்புவித்து விட்டாரேயொழிய, பாவத்தின் தீய விளைவுகளைத் தடுத்துவிட்டார் என்று நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. இந்தக்காரணத்துக்காகவே, சோதனைகளிலிருந்து நம்மைத் தப்புவிக்க தேவ உதவியை வேண்டுவது அவசியமாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும், எவ்வளவு நேரம் மகிழ்ச்சியோடு தேவனுக்குக் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு நேரம் ஜெபம் செய்யுங்கள். ஒவ்வொருநாளும் எவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டும் என்ற கால அளவைத் தேவன் நிர்ணயிக்கவில்லை. மேலும், ஜெபநேரம் முழுதும் “தூங்காமல்” விழித்திருப்பதும் ஒரு சவால்தான். சோர்ந்து போகாதிருங்கள்; உங்கள் நேரத்தை ஜெபத்தில் தேவனுக்கு ஒப்புவிக்கும்போது நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்!
Scripture
About this Plan

வல்லமையான, பதில்பெறும் ஜெப வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நமது வாழ்விலும், சூழலிலும் சாதகமான மாறுதலுக்கான வழியைத் திறக்கும் சாவியே ஜெபம் – தனிநபராகத் தேவனோடு கொண்டுள்ள உறவு. இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
Related Plans

Go Into All the World

Heart-Tongues

Spiritual Training: The Discipline of Fasting and Solitude

Over the Fence: Lessons From Ephesus

God's Great Story

The Joy

Seeing Disabilities Through God's Eyes: A 5-Day Devotional With Sandra Peoples

Acts 20 | Encouragement in Goodbyes

Adventure in Evangelism
