YouVersion Logo
Search Icon

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!Sample

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!

DAY 5 OF 6

“ஆரோக்கியமான சமன்பாடுள்ள ஜெபத்திற்கு ஆறு திறவுகோல்கள் – பாகம் ஒன்று”

1. (ஜெபத்தில்) யாரோடு   பேசுகிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் –   “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே...”

இயேசு நேரடியாக பிதாவிடம் வேண்டிக்கொள்ளச் சொன்ன போது, சிலர் ஆச்சரியப்பட்டிருக்கலாம். பழைய ஏற்பாடு முழுக்க, சாதாரணமான ஒரு மனிதன் தேவனுக்கு வேண்டுகோளைத் தெரிவிக்க ஒரேவழி, ஓர் ஆசாரியன் மூலமாகத்தான். நல்லவேளையாக, அவையெல்லாவற்றையும் மாற்ற இயேசு வந்தார். 

நமது பாவங்களை மூடுவதற்கு இயேசு   சிலுவையில் ஏறெடுத்த பூரணமான பலியினால் விசுவாசிகள் இப்போது பிதாவோடு   நேரடித்தொடர்பு கொண்டுள்ளார்கள். ஆகவேதான், நாம் பரலோகப்பிதாவிடம் ஜெபிக்கும் போது “இயேசுவின் நாமத்தில்”   ஜெபிக்கிறோம். ஆனாலும், ஜெபத்திற்கென்று   திட்டவட்டமான சூத்திரம் எதுவும்   கிடையாது. இயேசுவிடம் ஜெபித்தாலும், பிதாவை நோக்கி ஜெபிப்பது   போன்றதுதான். இப்போது உங்களுக்கும் தேவனுக்கும் இடையில் தொடர்புகொள்ள எந்தத்   தடையும் இல்லை என்பதுவே மிக முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய ஒரு சத்தியம். 

2. தேவன் உங்களுக்குச் செய்த எல்லா நன்மைகளையும்   நினைவில் கொண்டுவந்து உங்களது ஆராதனையையும், ஸ்தோத்திரங்களையும் ஏறெடுங்கள்.

உங்கள் ஜெபத்தின் ஒரு பகுதியை   ஸ்தோத்திரத்திலும், ஆராதனையிலும் கவனம் செலுத்த செலவழித்தால், உங்கள் மேல் உள்ள சுயகவனம் அகன்றுவிடும். தேவன் நமது தேவைகளையும், ஆசைகளையும் கேட்க ஆவலுள்ளவராக இருந்தாலும், அவர் நமக்குச் செய்தவற்றுக்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தவும், ஜெபம் என்பது “முழுவதும் நம்மைப் பற்றி” மட்டும் அல்ல என்று நாம் உணரவும்   வேண்டுமென்றும் அவர் விரும்புகிறார். உண்மையில், ஜெபம் முழுதும் “தேவனைப் பற்றியதுதான்”. தேவன் பரிபூரணத்தின் தேவன்   என்பதாலும், அன்பின் தேவன் என்பதாலும், துதியும் மகிமையும் அவருக்கு உரியதுதான். தேவன் உங்களுக்கு அளித்த   ஆசீர்வாதங்களை எண்ணிப்பார்ப்பதும், அவரோடு உறவுகொண்டிருப்பது   எவ்வளவு பெரிய சிலாக்கியம் என்பதை உணர்வதும் தேவனுக்கு நமது நன்றியையும், ஸ்தோத்திரத்தையும் ஏறெடுப்பதை எளிதாக்கும். உங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள   கவனத்தையும் எடுத்துவிட அது உதவும். 

3. தேவனது சபையிலும், உங்கள் வாழ்விலும் அவரது நோக்கம் முற்றிலும் நிறைவேற வேண்டுங்கள் – “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

நமது சிந்தையை கடந்தகாலப் பிரச்சினைகளை விட்டு விலக்கி, எதிர்காலத்தில் எதிர்பார்க்கும் அற்புதமான சாத்தியக்கூறுகளில்   செலுத்தும்போது, உயிரோட்டமுள்ள, பலனுள்ள ஜெபம் நம்மிலிருந்து வரும். தொடர்ந்து கடந்த காலத்தையே   யோசித்துக்கொண்டிருப்பது, எதிர்காலத்தின் நம்பிக்கையையும்   மட்டுப்படுத்தும். தேவனது பார்வையைக் கொள்ளுங்கள்; முந்திய சவால்களும், தோல்விகளும் உங்கள் சிந்தையை   ஆக்கிரமித்து உங்கள் சிந்திக்கும் திறனை மட்டுப்படுத்த விட்டுவிடாதிருங்கள்.   கிறிஸ்துவுக்குள் உங்கள் முழு சத்துவங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையைத்   தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’ உங்களது தரிசனங்களையும், கனவுகளையும் விரிவாக்க அவரிடம் உதவி கேளுங்கள். அவர் உங்கள் வாழ்விலும், சபைக்கும் வைத்திருக்கும் நோக்கத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என   ஆசைப்படுகிறார். 


Day 4Day 6

About this Plan

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!

வல்லமையான, பதில்பெறும் ஜெப வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நமது வாழ்விலும், சூழலிலும் சாதகமான மாறுதலுக்கான வழியைத் திறக்கும் சாவியே ஜெபம் – தனிநபராகத் தேவனோடு கொண்டுள்ள உறவு. இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த   உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide   to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

More