YouVersion Logo
Search Icon

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!Sample

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!

DAY 1 OF 6

“நம்மிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!”

“அவனிடத்தில் ஜெபம் ஒன்றுமில்லை” என்கிற வழக்குச்சொல்லின் அர்த்தம், வெற்றி பெறவே முடியாத ஒரு சூழலில் சிக்கியிருக்கும் ஒரு நபரைப் பற்றிப் பேசுவதாகும். கடைசி நொடியின் மணியடிக்கும்போது, மூன்றுமதிப்பெண் பெறும் அபூர்வ ஷாட் ஒன்றை மறுமுனையிலிருந்து அடித்து வெற்றிபெற்றுவிடும் முனைப்போடு முயற்சியெடுக்கும்போது, விளயாட்டுச் செய்தி வாசிப்பவர், “ஒரு ஜெபத்தை இப்போதுதான் செய்திருக்கிறார்” என்று அந்தத் தருணத்தை வர்ணிப்பார்.

கஷ்டம் வரும்போது அதைத்தீர்க்க எல்லா முயற்சிகளும் செய்து வெற்றிபெறாமல்   கடைசியில் வேறுவழியின்றி எடுக்கும் முயற்சியாகத் தேவன் ஜெபவாழ்வைக் கருதவில்லை.   உண்மை என்னவென்றால், ஜெபமே கிறிஸ்தவவாழ்வின் மையமாக இருக்க விரும்புகிறார்; தேவைகள் உள்ள   வேளைகளில் அதுவே நாம் எடுக்கும் முதல் ஆயுதமாக, கடைசி ஆயுதமாக அல்ல, இருக்க வேண்டும்.   நமக்குக் குறைகளும் தேவைகளும் உள்ள நாட்களில் மட்டுமல்ல, நிறைவும்   திருப்தியும் உள்ள நாட்களிலும், எல்லா நாட்களிலும்   நாள்முழுவதும் நாம் அவரிடம் பேசுவதைக்கேட்க தேவன் ஆவலாக உள்ளார். மேலும், நாம் ஜெபத்தில்   தரித்திருந்து அவரோடு இடைவிடாத இணைப்பில் இருக்கும்போது அநேக வழிகளில் அவரது   அன்பை வெளிப்படுத்த விரும்புகிறார். 

ஜெபமே நமது வாழ்விலும், சூழலிலும் சாதகமான மாற்றத்தைக்   கொண்டுவரும் சாவியாகவும், தேவனோடு நாம் நடக்கும்   பயணத்தில் முன்னேறிச்செல்ல அடிப்படையகவும் இருக்கிறது. 

“நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது”-யாக்கோபு 5:16

Scripture

Day 2

About this Plan

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!

வல்லமையான, பதில்பெறும் ஜெப வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நமது வாழ்விலும், சூழலிலும் சாதகமான மாறுதலுக்கான வழியைத் திறக்கும் சாவியே ஜெபம் – தனிநபராகத் தேவனோடு கொண்டுள்ள உறவு. இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த   உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide   to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

More