என் இறைவனே! செவிசாய்த்துக் கேட்பீராக! உமது கண்களைத் திறந்து பாழாய்க் கிடக்கும் உமது பெயர் தரிக்கப்பட்ட பட்டணத்தின் அழிவைப் பார்த்திடுவீராக! இந்த மன்றாடுதலை எங்கள் நீதியின் பொருட்டு நாங்கள் கேட்காமல், உமது பெரிய இரக்கத்தை முன்வைத்தே கேட்கிறோம். ஆண்டவரே, கேட்பீராக; ஆண்டவரே, மன்னித்திடுவீராக! ஆண்டவரே கவனித்துக் கேட்டுச் செயலாற்றிடுவீராக! உமது பட்டணம் உமது பெயரைத் தரித்துள்ளது, உமது மக்களும் உமது பெயரைத் தரித்துள்ளனர். ஆதலால் என் இறைவனே, உமது பொருட்டு தாமதிக்காது செயற்படுவீராக!” என்றேன்.