பயத்தை விட விசுவாசம்மாதிரி

பயத்தை விட விசுவாசம்

26 ல் 15 நாள்

யோசேப்பிற்கு மரியாளை விட்டு விலகுவதற்கு போதுமான காரணங்கள் இருந்தன. அவனுடைய பார்வையில், இது துரோகம் போல இருந்தது. தன்னுடன் நிச்சயதார்த்தம் ஆன பெண், தன் குழந்தையல்லாத குழந்தையை கருவில் சுமந்திருந்தாள். மத்தேயு 1:19-ல் சொல்லப்பட்டபடி, யோசேப்பு அவளிடம் அமைதியாக பிரிவதற்குத் தீர்மானித்திருந்தான் – இது அவளுடைய கண்ணியத்தையும் தன்னுடைய கண்ணியத்தையும் காப்பாற்றும் வழி. ஆனால் அந்த அமைதியை தேவன் உடைத்தார்.

இரவு நேர அமைதியில், ஒரு தூதன் வந்து சொன்னான்: “பயப்படாதே.” மரியாளின் கதை ஒரு அவமானம் அல்ல – அது ஒரு பரிசுத்தத் திட்டம். இதற்கு முன்பு யாரும் காணாத வகையில் தேவன் செயலில் இருந்தார். யோசேப்புக்கு ஒரு தேர்வு இருந்தது.

அவனுடைய முடிவு தைரியமானதும், சமுதாயத்திற்கு எதிரானதும். மரியாளை மனைவியாக ஏற்றுக்கொள்வது என்றால், பொதுமக்களின் தீர்ப்பை எதிர்கொள்வது, தனது நல்ல பெயரைக் களங்கப்படுத்தும் ஆபத்தை ஏற்றுக்கொள்வது, முழுமையாக விளக்க முடியாத சுமையை சுமப்பது என்பதாகும்.

அவனுடைய விசுவாசம் உள்ளார்ந்த நம்பிக்கையில் மட்டுமல்ல – அது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கான சூழ்நிலையிலும் தைரியமான கீழ்ப்படிதலாக இருந்தது. பயம் அவன் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்கவில்லை. மாறாக, செலவு அதிகமாக இருந்தாலும், அர்த்தம் புரியாதிருந்தாலும், தேவன் கேட்டபடி வாழத் தீர்மானித்தான்.

சில நேரங்களில் தேவனைப் பின்பற்றுவது என்பது, பிறர் என்ன நினைப்பார்கள் என்பதை விட்டுவிடுவதைக் குறிக்கும். அது நிம்மதியையும், நல்ல பெயரையும் தியாகம் செய்வதைக் குறிக்கலாம். யோசேப்பின் கதை நமக்கு நினைவூட்டுவது – விசுவாசம் என்பது நம்பிக்கை மட்டுமல்ல. அது செயல்படுத்தப்பட்ட நம்பிக்கை. அது தேவனுடைய வழியைத் தேர்ந்தெடுப்பது – செலவு இருந்தாலும் கூட.

சிந்தனை: தேவன் உங்களிடம் வசதியை விட கீழ்ப்படிதலைத் தேர்ந்தெடுக்கச் சொன்னது எப்பொழுது? பிறர் புரியாத நேரங்களில் தேவனைப் பின்பற்றுவது எப்படி இருக்கும்?

ஜெபம்: ஆண்டவரே, உலகின் சத்தத்தைக் கடந்து உமது சத்தத்தைக் கேட்கச் செய்க. செலவு இருந்தாலும் கூட உம்மைப் பின்பற்றும் வல்லமையைத் தாரும்.

ஆமென்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

பயத்தை விட விசுவாசம்

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife