நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்

4 ல் 3 நாள்

"பேசும் வார்த்தைகளின் வல்லமை"யை பரிசுத்த வேதாகமத்தின் மிகச்சிறந்த உதாரணமாக தாவீது கோலியாத்தை சந்தித்த வேளையில் காண்கிறோம். தாவீது கோலியாத்தை சந்திக்க இருந்த நேரத்தில் அவனைச் சுற்றியிருந்த ”சேனை வீரர்கள், இராஜா உட்பட” அனைவரும் கலங்கி- பயத்தைப் பேசிக்கொண்டிருந்தனர்.சவுல் தாவீதை நோக்கி”நீ இந்த பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது” என்றான். ஆனால் தாவீதின் விசுவாச வார்த்தைகள் –”நான் போய் இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம் பன்ணுவேன்”, விருத்த சேதனமில்லாத இந்த பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல (நான் கொன்று போடுவேன்) இருப்பான்”, என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்” என்றான். தாவீது விசுவாசத்தை பேசினான் –”அவன் இந்த அரக்கன் மடிந்து விழுவான்” ”தேவன் தாமே ஏற்கெனவே என்னை தப்புவித்தவர் மீண்டும் என்னை தப்புவிப்பார்” என்னும் வார்த்தைகளை <கவனியுங்க>. அவன் யுத்தகளத்தில் இறங்கும் முன்னேயே அவனது வார்த்தைகளினால் யுத்தத்தில் ஜெயம் பெற்றிருந்தான் என்பதையும் அவன் அறிக்கையாக பேசின வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும் என்ற உறுதி அவன் பேச்சில் வெளிப்படுவதைக் <காணுங்க>.

  1. இன்றைக்கு நாம் பேசும் வார்த்தைகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டிய நேரம் இது. சூழ்நிலைகள் மிக மோசமானது போல காணப்பட்டாலும் ”உங்கள் வாழ்க்கையின் மீது ஆசீர்வாத்தைப் பேசுங்க”. ”நான் முற்றும் ஜெயம் கொள்பவன்” என்று சொல்லுங்க. கிறிஸ்துவுக்குள் நான் பெலவான் என்று அறிக்கையிடுங்க. எனக்கு கிறிஸ்துவின் சிந்தை இருக்குன்னு ஆணித்தரமாச் சொல்லுங்க, சங்கீதம் 139:14-16: நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன் என்று துதியுங்க.ஐயா, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது எனச் சொல்லுங்க. நான் உம்மால் ஜெநிக்கப்பட்டவன் ஐயா, எனக்கு இந்த சூழ்நிலையை மாத்திப்போடுங்க என்று பேசுங்க.

இவைகள் ஏதோ நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் என்று தயவுசெய்து எடுத்துக்கொள்ளாதிருங்க... உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் பரிசுத்த வேதாகமத்தின் சத்தியங்கள் இவை. சொல்லப்போனால்- அறிவியல் பல நூற்றாண்டுகளாக பரிசுத்த வேதாகமம் பேசும் இந்த சத்தியங்கள் உண்மை என்று உறுதிபடுத்தியிருக்கின்றது.

விசுவாசம் கண்முன் என்ன இருக்கின்றதோ அதனை அப்படியே பேசாது. தாவீதைப்போல் தேவன் சுந்தந்தரித்து வைத்திருக்கும் – கிறிஸ்து இயேசு நமக்காக “முடிந்தது” என்று சிலுவையில் கிரயம் செலுத்தி – சம்பாதித்து வைத்த/விளைந்த விளைவுகளை பேசும். இனி நாம் தாவீதைப்போல் விசுவாச வார்த்தைகளைப்பேச கற்றுக் கொள்ளலாம். ஜெயம் நமதே!

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்

நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. நீங்கள் உங்கள் வாயினால் அறிக்கையிடும்- அதிகாரப்பூர்வமான அறிவிப்பு [DECLARATION]- உங்கள் வாழ்க்கைக்குள் -ஆசீர்வாதங்களையோ அல்லது சாபங்களையோ - அதின் கனியாக கொண்டுவரும் வல்லமை இருக்கின்றது என்பதே இதன் அர்த்தம். ”என்னாலஎல்லாம் முடியாது”, ”நான் இதிலபாஸ் ஆக மாட்டேன்னு ”எத்தனை தடவை” உங்களுக்கு நீங்களே சொல்லி இருப்பீங்க!... இது-விசுவாசம் பேசும் பேச்சு இல்ல.அது உங்களுக்கு என்று தேவன் வைத்திருக்கும் திட்டத்தை, நோக்கத்தை முறியடிக்க சத்துரு கொண்டு வரும் சோதனைக்காரனின் பேச்சு....என்று அறிந்து கொள்ளுங்கள்.... மனம் தளராதிருங்க...............இன்றிலிருந்து நீங்கள் உங்களைப்பத்தி –“நீங்க பேசும் பேச்சை [SELF FULFILLING PROPHECIESஐ] மாற்றப் போறீங்க....”நான் ஆசீர்வாதம் பெற்றவன்.... எனக்கு தேவனுடைய தயவு இருக்கின்றது” நான் ....வாலாகமல் தலைஆவேன்...கீழாகாமல் மேலாவேன் .. ... நன்மையும் கிருபையும் என்னை தொடரும். ”நா”வின் அதிகாரத்தால் பிறக்கும் வார்த்தைகளில்- பிரியப்படுவதால்”... என் வாழ்க்கை எப்படி மாறும் என்பதே இத்தொடர்..

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d