1 சாமுவேல் 17:45-47

1 சாமுவேல் 17:45-47 TAOVBSI

அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 சாமுவேல் 17:45-47

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன் 1 சாமுவேல் 17:45-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்

3 நாட்களில்

நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. நீங்கள் உங்கள் வாயினால் அறிக்கையிடும்- அதிகாரப்பூர்வமான அறிவிப்பு [DECLARATION]- உங்கள் வாழ்க்கைக்குள் -ஆசீர்வாதங்களையோ அல்லது சாபங்களையோ - அதின் கனியாக கொண்டுவரும் வல்லமை இருக்கின்றது என்பதே இதன் அர்த்தம். ”என்னாலஎல்லாம் முடியாது”, ”நான் இதிலபாஸ் ஆக மாட்டேன்னு ”எத்தனை தடவை” உங்களுக்கு நீங்களே சொல்லி இருப்பீங்க!... இது-விசுவாசம் பேசும் பேச்சு இல்ல.அது உங்களுக்கு என்று தேவன் வைத்திருக்கும் திட்டத்தை, நோக்கத்தை முறியடிக்க சத்துரு கொண்டு வரும் சோதனைக்காரனின் பேச்சு....என்று அறிந்து கொள்ளுங்கள்.... மனம் தளராதிருங்க...............இன்றிலிருந்து நீங்கள் உங்களைப்பத்தி –“நீங்க பேசும் பேச்சை [SELF FULFILLING PROPHECIESஐ] மாற்றப் போறீங்க....”நான் ஆசீர்வாதம் பெற்றவன்.... எனக்கு தேவனுடைய தயவு இருக்கின்றது” நான் ....வாலாகமல் தலைஆவேன்...கீழாகாமல் மேலாவேன் .. ... நன்மையும் கிருபையும் என்னை தொடரும். ”நா”வின் அதிகாரத்தால் பிறக்கும் வார்த்தைகளில்- பிரியப்படுவதால்”... என் வாழ்க்கை எப்படி மாறும் என்பதே இத்தொடர்..