நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

நாம் பேசும் வாத்தைகள் விதை போன்றவை. விதை முளைத்து பயிர்விடும் என்பதை பார்த்து விட்டு நான் விதைப்பேன் என்பது இயற்கையின் நியதி இல்லை. நீங்கள் விசுவாசிப்பதற்கு முன் கண்களால் பார்க்க வேண்டும் என்பதும் இது போன்றதே.
நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மீது தேவனுடைய சத்தியத்தைப் பேசிவரும் போது, உங்கள் சார்பில் செயல்படும்படிக்கு தேவனுடைய வல்லமையை விடுவிக்கின்றீர்கள். நீங்கள் ஜீவனையா அல்லது மரணத்தையா; நீங்கள் பேசுவது விசுவாசமா அல்லது பயமா; ஆசீர்வாதமா அல்லது சாபமா? நீங்கள் அவருடைய வாக்குதத்தங்களை அறிக்கையிடும் போது உங்கள் சூழ்நிலையின் மீது பரலோகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துகிறீர்கள்.
அதினால், மலைகள் அசையும்; திறவா கதவுகள் திறக்கும்; . தேவதயவு உங்களைப் பின்தொடரும். நீங்கள் ஒரு மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது.
ஜனங்கள் தாங்கள் தங்களைக்குறித்து பேசும் வார்த்தைகள் -அவர்களைக்குறித்து தேவன் வைத்திருக்கும் திட்டம் அல்லது நோக்கம் [DESTINY] ஐப் பாதிக்கின்றது என்பதை அறியாது இருக்கின்றார்கள். அவர்கள் சாதாரணமாக பேசுவதை கவனியுங்கள்:-
“ எனக்கு எதுவும் ஆகிவரமாட்டேங்குது” , ”எனக்கு அதிர்ஷ்டமே இல்லப்பா”
இப்படி அனேகம்... இதை கூறும் போது அவர்கள் நான் ஓர் உண்மையைத்தானே சொல்கின்றேன் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் வாழ்க்கையில் ஒரு முட்டுக்கட்டையைப் போட்டுக் கொண்டு இருக்கின்றனர். உங்களைபத்தி நீங்க பேசற வார்த்தைகள் உங்களை ஒருசுழற்சிக்குள் தள்ளிவிடுகின்றன.
நேர்மறை சிந்தனை அல்லது நேர்மறைப் பேச்சு என்பதற்கு இதில் தொடர்பு இல்லை.....
இதன் அர்த்தம்:
என்னைக்குறித்து தேவனுடைய வார்த்தை என்னச் சொல்லுகின்றதோ அத்துடன் என் வாழ்க்கையை நேர்கோட்டில் வைத்துக் கொள்வது;
வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், நீங்கள் விசுவாச வார்த்தைகளை அறிக்கைகளைச் செய்யும் போது, வாழ்வின் மெய்மை என்ன என்பதை மறுக்கவில்லை. ஆனால்,
தேவனுடைய வாக்குதத்தங்களின் மேலான சத்தியத்தை உங்கள் வாழ்க்கைக்குள் வாழ அனுமதிக்கின்றீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. நீங்கள் உங்கள் வாயினால் அறிக்கையிடும்- அதிகாரப்பூர்வமான அறிவிப்பு [DECLARATION]- உங்கள் வாழ்க்கைக்குள் -ஆசீர்வாதங்களையோ அல்லது சாபங்களையோ - அதின் கனியாக கொண்டுவரும் வல்லமை இருக்கின்றது என்பதே இதன் அர்த்தம். ”என்னாலஎல்லாம் முடியாது”, ”நான் இதிலபாஸ் ஆக மாட்டேன்னு ”எத்தனை தடவை” உங்களுக்கு நீங்களே சொல்லி இருப்பீங்க!... இது-விசுவாசம் பேசும் பேச்சு இல்ல.அது உங்களுக்கு என்று தேவன் வைத்திருக்கும் திட்டத்தை, நோக்கத்தை முறியடிக்க சத்துரு கொண்டு வரும் சோதனைக்காரனின் பேச்சு....என்று அறிந்து கொள்ளுங்கள்.... மனம் தளராதிருங்க...............இன்றிலிருந்து நீங்கள் உங்களைப்பத்தி –“நீங்க பேசும் பேச்சை [SELF FULFILLING PROPHECIESஐ] மாற்றப் போறீங்க....”நான் ஆசீர்வாதம் பெற்றவன்.... எனக்கு தேவனுடைய தயவு இருக்கின்றது” நான் ....வாலாகமல் தலைஆவேன்...கீழாகாமல் மேலாவேன் .. ... நன்மையும் கிருபையும் என்னை தொடரும். ”நா”வின் அதிகாரத்தால் பிறக்கும் வார்த்தைகளில்- பிரியப்படுவதால்”... என் வாழ்க்கை எப்படி மாறும் என்பதே இத்தொடர்..
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

மேடைகள் vs தூண்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

வனாந்தர அதிசயம்

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருடைய கணக்கு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
