நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்

4 ல் 2 நாள்

நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்கள் வாழ்வில் பாலங்கள் கட்டுவதற்குப் பதிலாக மதில்சுவர்களை எழுப்பி வருகின்றன. நம்மை விடுவிப்பதற்குபதிலாக நம்மை சங்கிலி போல் கட்டி வைக்கின்றன.

நீதிமொழிகள் 18:20 -ஆங்கிலவேதாகம அர்த்தம்மரணத்தின் அல்லது ஜீவனின் வல்லமைநாவின் அதிகாரத்திலிருக்கும்; ”அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள் என்கின்றது.”. நாம் சொல்லும் வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையில் ஆசீர்வாதங்களை அல்லது சாபங்களைக் கொண்டுவரக்கூடும்.

”நானெல்லாம் இதில் வெற்றி பெற முடியாது”, ”அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்..பா” என்று எத்தனை முறை நீங்கள் வாயினால் அறிக்கை செய்திருப்பீர்கள் –இது விசுவாசத்தின் மொழி இல்லை. இது வெற்றி பெறும் ஜெய தொனி இல்லை- இது சத்துருவின் பேச்சு.

பரிசுத்த வேதாகமத்தில் – வாக்குத த்தம் செய்யப்பட்ட தேசத்தை வேவு பார்க்க 12 வேவுகாரர்கள் அனுப்பியதில்10 பேரின் ’வார்த்தை’ யைக் எண்ணாகமம் 13:31ல்கவனியுங்க, “ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க ‘நம்மாலே’ கூடாது. நாங்கள் எங்கள் பார்வைக்கு’வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம்’ ’அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள்’ என இப்படி துர்ச்செய்தியைப் பரம்பச்செய்தார்கள். அவர்கள் பயத்தை பேசினார்கள். அவர்களுக்கு முன்பாக இருக்கின்ற தடைகளை – அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. அவர்களுடைய வார்த்தைகள் அவர்களுடைய மனோபாவத்தைப் பிரதிபலித்தன.விளைவு :–அந்ததலைமுறையினர் அனைவரும்தேவனுடைய வாக்குதத்தத்தினை இழந்து போனார்கள்.

அதில் இருந்த யோசுவா மற்றும் காலேப் என்னும் இரண்டு வேவுகாரர்கள் பேசின வார்த்தைகளைக் கவனியுங்க.நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்லதேசம்.

......அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். எண்ணாகமம் 14:7,8. இதில் 9ஆம் வசனம் தான் முத்தாய்ப்பான வசனம்.... அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர்நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.

இவர்கள் மற்றவர்களைப் போல் பயத்தைப் பேசவில்லை என்பதை கவனிக்க வேண்டும். பலன்: அவர்கள் இருவரும் சொன்னபடியே வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தார்கள்.

அதில் காலேப்: “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம் என்றான் [எண்ணாகமம் 13:30] அத்துடன் நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான்” இவர்களுடைய வார்த்தைகள் –தேவனுடைய வல்லமையில் இருந்த அவர்களுடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பிரதிபலித்தன.

விளைவு : அந்த தலைமுறையினர் அனைவரிலும் அவர்கள் இருவர் மாத்திரமே வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்தை சுதந்தரித்தனர்.

என்னைக் குறித்து நான் என்ன சொல்கின்றேனோ அதுஎன் வாழ்வின் திசையை தீர்மானிக்கின்றது.நாம் பேசும் வார்த்தைகள் தான் - நம் எதிர்காலத்தை -, ”வாக்குதத்தம் செய்து தரப்பட்டவைகளைப் பெறுவோமா” என தீர்மானிக்கும்என்பதை-

இந்த வேதாகம பகுதியிலிருந்து நாம் அறிந்து கொண்டு நமது பழக்கம் ஆக்கலாமா?

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்

நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. நீங்கள் உங்கள் வாயினால் அறிக்கையிடும்- அதிகாரப்பூர்வமான அறிவிப்பு [DECLARATION]- உங்கள் வாழ்க்கைக்குள் -ஆசீர்வாதங்களையோ அல்லது சாபங்களையோ - அதின் கனியாக கொண்டுவரும் வல்லமை இருக்கின்றது என்பதே இதன் அர்த்தம். ”என்னாலஎல்லாம் முடியாது”, ”நான் இதிலபாஸ் ஆக மாட்டேன்னு ”எத்தனை தடவை” உங்களுக்கு நீங்களே சொல்லி இருப்பீங்க!... இது-விசுவாசம் பேசும் பேச்சு இல்ல.அது உங்களுக்கு என்று தேவன் வைத்திருக்கும் திட்டத்தை, நோக்கத்தை முறியடிக்க சத்துரு கொண்டு வரும் சோதனைக்காரனின் பேச்சு....என்று அறிந்து கொள்ளுங்கள்.... மனம் தளராதிருங்க...............இன்றிலிருந்து நீங்கள் உங்களைப்பத்தி –“நீங்க பேசும் பேச்சை [SELF FULFILLING PROPHECIESஐ] மாற்றப் போறீங்க....”நான் ஆசீர்வாதம் பெற்றவன்.... எனக்கு தேவனுடைய தயவு இருக்கின்றது” நான் ....வாலாகமல் தலைஆவேன்...கீழாகாமல் மேலாவேன் .. ... நன்மையும் கிருபையும் என்னை தொடரும். ”நா”வின் அதிகாரத்தால் பிறக்கும் வார்த்தைகளில்- பிரியப்படுவதால்”... என் வாழ்க்கை எப்படி மாறும் என்பதே இத்தொடர்..

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d