நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

இன்றைக்கு நீதிமொழிகள் 18:21 ஆம் வசனத்தின் பின்பகுதி ” ஜீவனின் வல்லமை நிறைந்த வார்த்தைகளில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” என்ற பகுதியை தியானிப்போம்.
ஜீவனின் வல்லமை நிறைந்த வார்த்தைகளில் ”பிரியப்படுபவர்களாக” மாறுவது எப்படி?
நீங்கள் பேசும் போது “என்னுடைய பிரச்சினை எவ்வளவு பெரிசு உனக்கு தெரியுமா? என்று பேசலாம் அல்லது “ எனது தேவன் எவ்வளவு பெரியவர் என்று பேசலாம். தெரிந்தெடுப்பு உங்களுடையது. உங்களுக்குரிய வாக்குதத்தங்களை நீங்கள் அறிக்கையிடும்போது உங்கள் சூழ்நிலைகளில் மாற்றத்தைக் காண்பீர்கள்.
வார்த்தைகளை அறிக்கைசெய்ததில் சிறந்த முன்மாதிரி நமது ஆண்டவர் இயேசு. பிசாசானவன் வனாந்திரத்தில் சோதித்த போது, அவர் பிசாசானவனுடன் விவாதம் செய்யவில்லை அல்லது தன் சொந்த கருத்தினைச்சொல்லவில்லை. அவர் “என்றும் எழுதியிருக்கிறதே” என்று ”வேதாகம வாக்கியங்களைத் தான்” ஒவ்வொரு சோதனையிலும் சொன்னார். இவ்வண்ணமே சந்தேகம் உள்ளே நுழைய முயற்சிக்கும் போது சொல்லவேண்டியது.... ”விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று எழுதியிருக்கிறதே.”. வியாதிப்படும் வேளையில் “அவருடைய தழும்புகளால் குணமானேன் என்று எழுதியிருக்கிறதே”. பொருளாதார நெருக்கடியில் “ கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” என்று சொல்லியிருக்கிறதே. இது தான் நாவின் அதிகாரத்தில் பிரியப்படுதல். விசுவாசத்துடன் உச்சரிக்கப்படும் தேவனுடய வார்த்தைக்கு முன்னால் சத்துருவால் நிற்கமுடியாது. சிலர் சொல்லுவார்கள் ” நான் தேவனுடைய வாக்குதத்தங்களை அறிக்கையிடத்தான் செய்கிறேன்; ஆனால், ஒன்னும் நடக்க மாட்டேங்குது”. இதற்கு சாவி ”விடாமுயற்சி”. எபிரேயர் 10:23 ல் பரிசுத்த வேதாகமம் “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே” என்கிறது. ஒரு நாளில் கர்த்தருடைய வாக்குதத்தம் அடுத்த நாளில் நமது சந்தேகம் என இப்படியா இருக்கிறது என சோதித்து <பாருங்க> நாவில் இருந்து பிறக்கும் வார்த்தைகள் விதை போன்றவை. அதன் அறுவடையைக் காண காலம் செல்லும். நீங்கள் அறிக்கையிடுவதில் ”உறுதியாக” இருக்க வேண்டும்.
- இதினால் தான் பரிசுத்த வேதாகமம் நாம் கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருக்க வேண்டும் என்கின்றது. அது ஏதோ வாசித்தேன் என்பது இல்லை...... பேச வேண்டும் / அறிக்கையிட வேண்டும் / நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக தேவனுடைய வார்த்தை மாற வேண்டும். நீதிமொழிகள் 18:20 ஐக் கவனியுங்க:அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்.அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். இந்த வசனம் வாயின் பலன் உதடுகளின் விளைவு குறித்து திட்டவட்டமாய் நமக்கு கற்றுத்தருகின்றது.
நீங்கள் அதிகமதிகமாய் வேதாகமத்தின் வார்த்தைகளை அறிக்கையிடும் போது உங்கள் விசுவாசம் பெருகும். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால் – நாம் ஜீவ வாத்தைகளில் பிரியப்படுகின்றவர்களாகிறோம் அதினால், ஜீவவார்த்தையின் கனியை புசிப்பீர்கள். ”தேவனுடைய வாக்கு என்னை கைவிடாது” என்ற நிச்சயத்திற்குள் வரும் போது உங்கள் முன் மூடி இருந்த கதவுகள் திறக்கும். உங்கள் பெலவீனத்தை தெய்வீகபெலன் நிரப்பும். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். கவலைப்பட்டு வந்த இடம் - தேவ சமாதானம் “ஷாலோம்” ஆம் நிரம்பும்.
நாம் பிரியப்பட வேண்டிய பரிசுத்த வேதாகம வார்த்தைகள் சிலவற்றை இங்கு தருகின்றேன்..... மேலும் பல முத்துக்கள் வேதாகமத்தில் பதிந்திருக்கின்றன. தேடி உங்களுடையதாக்கிக் <கொள்ளுங்க>
1.என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு:- பிலிப்பியர் 4:13
2. நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகியகர்த்தர்என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார். 1நாளாகமம் 28:20
3.இழந்தவைகளை திருப்பிக்கொள்ள : உபாகமம் 30:3-13 ஐ கவனமாக அறிக்கையிடுங்கள்.
- உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.
2.இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார்.
- உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகியகர்த்தர்உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்......
4.கர்த்தர்உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.
- நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.
- நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல; நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;
நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.
நம்மை குறித்து எழுதிதரப்பட்டிருக்கின்ற பரிசுத்த வேதாகம்த்தின்
ஜீவ வார்த்தைகளை வாயினால் அறிக்கையிட்டு (அதில் பிரியமாயிருந்து – நீதிமொழிகள் 18:21) அதின் கனிகளை வாழ்வில் பெற்று அனுபவிக்கலாமா?”
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. நீங்கள் உங்கள் வாயினால் அறிக்கையிடும்- அதிகாரப்பூர்வமான அறிவிப்பு [DECLARATION]- உங்கள் வாழ்க்கைக்குள் -ஆசீர்வாதங்களையோ அல்லது சாபங்களையோ - அதின் கனியாக கொண்டுவரும் வல்லமை இருக்கின்றது என்பதே இதன் அர்த்தம். ”என்னாலஎல்லாம் முடியாது”, ”நான் இதிலபாஸ் ஆக மாட்டேன்னு ”எத்தனை தடவை” உங்களுக்கு நீங்களே சொல்லி இருப்பீங்க!... இது-விசுவாசம் பேசும் பேச்சு இல்ல.அது உங்களுக்கு என்று தேவன் வைத்திருக்கும் திட்டத்தை, நோக்கத்தை முறியடிக்க சத்துரு கொண்டு வரும் சோதனைக்காரனின் பேச்சு....என்று அறிந்து கொள்ளுங்கள்.... மனம் தளராதிருங்க...............இன்றிலிருந்து நீங்கள் உங்களைப்பத்தி –“நீங்க பேசும் பேச்சை [SELF FULFILLING PROPHECIESஐ] மாற்றப் போறீங்க....”நான் ஆசீர்வாதம் பெற்றவன்.... எனக்கு தேவனுடைய தயவு இருக்கின்றது” நான் ....வாலாகமல் தலைஆவேன்...கீழாகாமல் மேலாவேன் .. ... நன்மையும் கிருபையும் என்னை தொடரும். ”நா”வின் அதிகாரத்தால் பிறக்கும் வார்த்தைகளில்- பிரியப்படுவதால்”... என் வாழ்க்கை எப்படி மாறும் என்பதே இத்தொடர்..
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

வனாந்தர அதிசயம்

மேடைகள் vs தூண்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருடைய கணக்கு
