மேடைகள் vs தூண்கள்மாதிரி

நீங்கள் மக்களைப் பிரியப்படுத்துபவரா அல்லது தேவனைத் துதிப்பவரா?
சிறப்பாக செயல்படவில்லை என்கிற ஒரு மதிப்பாய்வை நீங்கள் எப்போதாவது பெற்றிருக்கிறீர்களா? நான் பெற்றிருக்கிறேன்! ஒருமுறை நான் ஒருபோதும் செய்யாத காரியங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டேன் - ஸ்தாபனத்தின் பொருளாதார நெருக்கடியினால், நான் தானாக முன்வந்து வெளியேற வேண்டும் என்று அவர்கள் விரும்புவதைப்போல உணர்ந்தேன். அந்தத் திட்டம் நிறைவேறவில்லை, ஆனால் அது அடுத்த நாளுக்கான பேசுபொருளாக மாறிவிட்டது. 🙃
வேலைக்கான செயல்திறனில் மதிப்பிடப்படுவது என்பது பெரும்பாலும் விரும்பத்தகாதது, ஆனால் அது நம் சமூகத்தில் வழக்கமாக நடக்கிற ஒன்றாகிவிட்டது. தெய்வீக சுபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை விட வெற்றி பெற வேண்டிய அவசியம் மிகவும் நம்மை நெருக்குவதாகத் தோன்றுகிறது.
இது ஒரு மேடைக்கான அவசியத்தை நாடும் சமூகத்தில் வாழ்வதன் விளைவு. எல்லாவற்றிற்கும் மேலாக சரிபார்த்தலை நாம் விரும்புகிறோம், அதன் மூலம், மற்றவர்களை விட நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கிறோம்; இவ்வாறு நாம் மேடைகளை உருவாக்குகிறோம்.
இந்தப் போராட்டம் புதிதான ஒன்றல்ல - ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளிடமிருந்து இது தொடங்கியது:
"நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." (ஆதியாகமம் 3:5-6 TAOVBSI)
கனியை சாப்பிட்டுவிட்டாலே, அவர்கள் ஆண்டவரைப் போலாகி, அவருடைய நிலைக்கு சமமாக உயர்த்தப்படலாம்.
உயர்வு என்பது சுதந்திரத்துக்கு சமம் என்ற பொய்யை நம்புவதில்தான் பிரச்சனை தொடங்குகிறது. உண்மையில், கவனத்தைப் பெறுவதற்காகவும் தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவும் ஓடுவது உங்களைப் பொதுவாக கண்ணியில் சிக்க வைத்துவிடும், ஏனெனில் நீங்கள் உருவாக்கும் மேடைகளே உங்களை அழிக்கவும் கட்டுப்படுத்தவும் தொடங்கிவிடுகின்றன.
இதன் விளைவாக, ஆண்டவரைப் போல மாறுவதற்கு பதிலாக, ஆதாமும் ஏவாளும் ஆண்டவரிடமிருந்து பிரியும் நிலை ஏற்பட்டுவிட்டது. (ஆதியாகமம் 3:23 TAOVBSI).
என் விஷயத்தில், நிலைமையை சரிசெய்ய எல்லாவற்றையும் முயற்சித்த பிறகு, இறுதியாக எனக்கு மிகவும் தொந்தரவாக இருந்த ஒரு வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டேன்; அதன் பிறகுதான் அது என்னை எந்த அளவுக்கு சோர்ந்துபோகச் செய்திருந்தது என்பதை நான் உணர்ந்தேன்.
கடின உழைப்பு சிறந்ததுதான், ஆனால் அது செயலின் பலன்களை சார்ந்ததாக மட்டுமே இருக்கும்போது, அது சிறந்ததாக இருப்பதில்லை! ஆண்டவர் நம்மை இளைப்பாறுகிற மற்றும் அவரை ஆராதிக்கிற வாழ்க்கையை வாழ அழைத்திருக்கிறார் - மனிதனுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அல்ல, ஆண்டவரைத் துதிக்கும்படியாக அழைத்திருக்கிறார்:
"நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்." (கொலோசெயர் 3:23-24 TAOVBSI)
அரங்கேற்றம் மக்களுக்கானது; ஆராதனை ஆண்டவருக்கானது.
இந்த வார தியானத்தை ஒரு ஜெபத்துடன் முடிப்போம்:
“பரலோகப் பிதாவே, உம்மில் உண்மையான சுதந்திரம் கிடைத்ததற்கு நன்றி. உமது ராஜ்யத்தில் என்னை தூணாக மாற்றுவீராக. நிலைத்து நிற்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக உம்மைத் தேடவும் எனக்கு உதவும். எனக்கு ஒரு மேடை கொடுக்கப்படும்போது, அதை நன்றாகப் பயன்படுத்த எனக்கு ஞானம் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.
இந்த திட்டத்தைப் பற்றி

மேடைகளைச் சார்ந்து சுற்றும் இந்த உலகில், சமூக ஊடகங்கள் நாம் மற்றவர்களையும் நம்மையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன. ஆனால் வேதாகமம் இதற்கும் மேலான சிறந்த ஒன்றை வழங்குகிறது: மேடைகளின் பின்னால் ஓடுவதற்குப் பதிலாக, நாம் நிலையான தூண்களாக மாற வேண்டும் என்பதே.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-Platforms-vs-Pillars
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

மேடைகள் vs தூண்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ஆண்டவருடைய கணக்கு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

வனாந்தர அதிசயம்
