மேடைகள் vs தூண்கள்மாதிரி

உங்களைத் தொந்தரவு செய்வது எது??
உங்கள் மிகப்பெரிய விரக்தி என்ன - உண்மையில் உங்களைத் தொந்தரவு செய்யும் விஷயம் எது?
இயேசுவைப் பொறுத்தவரை, பரிசேயர்கள்தான் அவருக்குத் தொந்தரவாக இருந்தனர். அவரது கடுமையான விமர்சன வார்த்தைகள் பரிசேயர்களைக் குறிவைத்தே சொல்லப்பட்டன, ஏனெனில் அவர்கள்:
1. மக்கள் மீது அதிக பாரத்தை சுமத்தினர்
மக்களை நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளச் செய்ய, ஒருவாராலும் கடைப்பிடிக்க முடியாத சட்டங்களை ஏற்படுத்தி அவர்கள் மீது அதிக பாரங்களை சுமத்தினர்.
"சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்." (மத்தேயு 23:4 TAOVBSI)
இதற்கு எதிர்மாறாக, இயேசு தம்மைப் பற்றி இவ்வாறு சொன்னார், "என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது." (மத்தேயு 11:30 TAOVBSI)
2. மக்களின் கவனத்தைப்பெற ஆவலாய் இருந்தனர்
“தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்." (மத்தேயு 23:5-7 TAOVBSI)
ஆனால் இயேசுவோ தம் சீஷர்களுக்கு அதற்கு நேர் எதிராகக் கற்பித்தார்:
"அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும்வந்தார் என்றார்.” (மத்தேயு 20:25-28 TAOVBSI)
3. மற்றவர்களைத் தகுதியற்றவர்களாக உணர வைத்தனர்
“மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை." (மத்தேயு 23:13 TAOVBSI)
பரிசேயர்கள் தங்களுக்கு முன் நிற்கத் தகுதியற்றவர்கள் என்று கருதும் நபர்களின் நீண்ட பட்டியலை வைத்திருந்தனர்: வரி வசூலிப்பவர்கள், சமாரியர்கள், மதுபானப்பிரியர்கள், விபச்சாரக்காரர்கள் மற்றும் பலர். ஆனால், இயேசுவோ பாவிகளுக்காக வந்தவராய் இருந்தார் (1 தீமோத்தேயு 1:15 TAOVBSI). "நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" என்று அவர் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். (மாற்கு 16:15 TAOVBSI).
பரிசேயர்கள் இவ்வாறு நடந்துகொண்டனர்: சமுதாயத்தின் தூண்களாக இருப்பதற்காகவே இயேசு அவர்களை அழைத்தார்; அதற்குப் பதிலாக, பரிசேயர்கள் அதிகாரத்துக்காகவும் சுயநலத்திற்காகவும் தங்கள் மேடைகளைப் பயன்படுத்திக்கொண்டனர்.
ஒரு தளத்தை அல்லது மேடையை வைத்திருப்பது தவறல்ல - ஆனால் உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
இன்று சிறிது நேரம் ஒதுக்கி பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள்:
"ஆண்டவரே, தயவுசெய்து, எனது உள்ளார்ந்த நோக்கங்களை எனக்கு வெளிப்படுத்தும். நான் உண்மையிலேயே என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு தூணாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்க விரும்புகிறேனா? அல்லது மேடையை நாடு என்று சொல்லி எனக்குள் கவர்ந்திழுக்கும் மனதின் சத்தத்தை நான் கேட்கிறேனா? எனக்கு உதவி செய்வீராக, ஆமென்”
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
இந்த திட்டத்தைப் பற்றி

மேடைகளைச் சார்ந்து சுற்றும் இந்த உலகில், சமூக ஊடகங்கள் நாம் மற்றவர்களையும் நம்மையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன. ஆனால் வேதாகமம் இதற்கும் மேலான சிறந்த ஒன்றை வழங்குகிறது: மேடைகளின் பின்னால் ஓடுவதற்குப் பதிலாக, நாம் நிலையான தூண்களாக மாற வேண்டும் என்பதே.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-Platforms-vs-Pillars
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

மேடைகள் vs தூண்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ஆண்டவருடைய கணக்கு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

வனாந்தர அதிசயம்
