மேடைகள் vs தூண்கள்மாதிரி

மேடைகள் vs தூண்கள்

7 ல் 1 நாள்

நான் நின்றுகொண்டிருக்கும் மேடை உடைந்து கீழே விழுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

ஒரு கலைஞனாக, நான் பல மேடைகளில் நிகழ்சிகளை நடத்தியிருக்கிறேன் - சில மேடைகள் உறுதியானதாக இருந்திருக்கின்றன. தொலைதூர கிராமங்களில், தற்காலிக மேடை தளங்கள் ஒரு பேரழிவு ஏற்பட இருப்பதைப்போல என்னை உணரச் செய்யும். மேடை இடிந்து கீழே விழுந்துவிட்டால், அதன்பின் வைரலாகும் வீடியோக்களைக் கற்பனை செய்யும்போது, அதுபோன்ற சமதளமற்ற மேடைகளில் குதிக்கவோ அல்லது நடனமாடவோ நான் பயப்படுவதுண்டு. 🤪

மேடைகள் என்பது அப்படித்தான் - அவை பயனுள்ள கருவிகள் ஆனால் உறுதியான அடித்தளங்கள் அல்ல.

தளம் என்ற மேடைகள் மூலம் இயங்கும் நமது உலகில், சமூக மற்றும் டிஜிட்டல் மேடைகள் நாம் மற்றவர்களையும் நம்மையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதை வடிவமைக்கின்றன. உதாரணமாக, சமூக ஊடகங்கள் இல்லாமல் நம் உலகத்தை கற்பனை செய்வது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகக் காணப்படுகிறது. மேடைகள் உங்களை வெளிக்கொண்டுவரவும், காண்பிக்கவும், மற்றவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவுகின்றன. இப்போதெல்லாம், மக்கள் செல்வாக்கு மிக்க நபர் என்ற அடையாளத்தில் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கின் வழியாக தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்!

சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் விசுவாசம், அன்பு மற்றும் மகிழ்ச்சியை உலகிற்குக் கொண்டுவருவதற்கும் மேடைகள் சிறந்த வழியாக இருக்கின்றன. ஆகவே நமக்கு மேடைகள் தேவைதான்! எங்கள் பெரும்பாலான வாசகர்கள் சமூக ஊடக தளங்கள் மூலம்தான் எங்களைக் கண்டுகொண்டனர். 🤗

இருப்பினும், அந்த அசையக் கூடிய மேடைகளைப் போலவே, தளங்களும் தற்காலிகமானவை மற்றும் உடையக்கூடியவை, அவை கட்டப்பட்ட வேகத்தைப் போலவே எளிதாகவும் விரைவாகவும் இடிக்கப்படலாம். அவை நீண்ட, உறுதியான மற்றும் நீடித்த அடித்தளத்தை வழங்காது.

வேதாகமம் சிறந்த ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத்தருகிறது: மேடைகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக நாமே தூண்களாக மாற வேண்டும் என்று கற்றுத் தருகிறது.

“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்." (வெளிப்படுத்தின விசேஷம் 3:12 TAOVBSI)

நீங்கள் ஒரு தூணைப் பற்றி நினைக்கும்போது, உங்கள் நினைவுக்கு வருவது எது? வலிமையா? நிலைத்தன்மையா? நீங்கள் ஒரு பட்டியலை உருவாக்குங்கள், ஏனென்றால் இந்த வாரம், மேடை என்றால் என்ன என்று ஆராய்வதற்குப் பதிலாக தூண் என்றால் என்ன என்பதை நாம் சேர்ந்து ஆராய்வோம்.

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

இந்த திட்டத்தைப் பற்றி

மேடைகள் vs தூண்கள்

மேடைகளைச் சார்ந்து சுற்றும் இந்த உலகில், சமூக ஊடகங்கள் நாம் மற்றவர்களையும் நம்மையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன. ஆனால் வேதாகமம் இதற்கும் மேலான சிறந்த ஒன்றை வழங்குகிறது: மேடைகளின் பின்னால் ஓடுவதற்குப் பதிலாக, நாம் நிலையான தூண்களாக மாற வேண்டும் என்பதே.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-Platforms-vs-Pillars
 

சம்பந்தப்பட்ட திட்டங்கள்