மேடைகள் vs தூண்கள்மாதிரி

சத்தம் மிகவும் அதிகம்! 😖
நான் மேடையில் இருக்கும்போது, என் குழுவினருடன் பேச முடியாத அளவுக்கு சத்தம் மிகவும் பலமாக இருக்கும் - பாடல் சத்தத்தால் நான் பேசுவதை அவர்களால் கேட்க முடியாது. எனவே, அடுத்த பாடலைத் தொடங்குவது அல்லது இசையின் தாளத்தை மாற்றுவது போன்ற விஷயங்களைத் தெரிவிக்க நாங்கள் சைகைகளை பயன்படுத்துகிறோம்.
மேடைகள் சத்தம் போடுகின்றன - நிஜத்தில் மட்டுமல்ல, உருவகத்தில் சொல்லும்போதுகூட அவை சத்தம்போடுகின்றன. உங்கள் கருத்துக்களைக் கூறவும், உங்களைப் பின்தொடர்பவர்களை சம்பாதிக்கவும், நீங்கள் சொல்வதை மற்றவர்கள் மீண்டும் பகிரவும் சமூக ஊடகங்கள் உங்களை ஊக்குவிக்கின்றன.
சில சமயங்களில், தங்களை விசுவாசிகள் என்று அழைத்துக்கொள்ளும் நபர்களிடமிருந்து வரும் கருத்துக்களை சமூக ஊடகங்களில் நாம் படிக்கும்போது, அவர்கள் உண்மையிலேயே ஆண்டவருடைய அன்பையும் கிருபையையும் புரிந்துகொண்டவர்கள்தானா என்று நம்மை சந்தேகத்துடன் யோசிக்க வைக்கிறது. 🤔
ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வைத்துக்கொண்டு, அதை எல்லா இடங்களிலும் ஒளிபரப்ப விரும்பும் உலகில் நாம் வாழ்கிறோம். ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 3:12 TAOVBSI லிருந்து நாம் கற்றுக்கொண்டபடி ஆண்டவர் நம்மை தூண்களாக இருப்பதற்காகவே அழைக்கிறார், மேடைகளாக இருப்பதற்காக அல்ல.
தூண்கள் அமைதிக்கு அடையாளம். மேடை எப்போதுமே சத்தம்போட விரும்புகிறது.
"தூண்கள், தான் என்னவாக மாறுகின்றன என்பதில் உறுதியாக இருக்கும். மேடைகள் சத்தம் போடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.” - ஃபில் டூலி
பேசுவதில் தவறில்லை – இயேசுவே காசுகாரர்களின் மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு, தேவாலயத்தை கள்ளர் குகையாக மாற்றிவிட்டீர்களே என்று சொல்லி அங்கிருந்த வியாபாரிகளை விரட்டியடித்தார் (மாற்கு 11:15-17 TAOVBSI).
எப்பொழுது அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் இயேசு அறிந்திருந்தார்.
“பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்." (மத்தேயு 27:12-14 TAOVBSI)
தேசாதிபதிக்கே பிரசங்கம் பண்ணும்படியான வாய்ப்பு இயேசுவுக்கு கிடைத்திருந்தது, ஆனாலும் அந்த மேடையைப் பயன்படுத்திக்கொள்ள அவர் முற்படவில்லை! 😳 தான் யார் என்பதை வெளிப்படுத்தாதிருக்க, அவர் ஒன்றும் பேசாமல் இருந்தார், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். நாமும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்:
"என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்." (யாக்கோபு 1:19 TAOVBSI)
மிகவும் வல்லமைவாய்ந்த வார்த்தைகள், கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்றிய ஒரு வாழ்க்கையிலிருந்து வருகின்றன. எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று, இன்று (மற்றும் தினமும்) உங்களுக்கு வழிகாட்டும்படி பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள்.
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
இந்த திட்டத்தைப் பற்றி

மேடைகளைச் சார்ந்து சுற்றும் இந்த உலகில், சமூக ஊடகங்கள் நாம் மற்றவர்களையும் நம்மையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன. ஆனால் வேதாகமம் இதற்கும் மேலான சிறந்த ஒன்றை வழங்குகிறது: மேடைகளின் பின்னால் ஓடுவதற்குப் பதிலாக, நாம் நிலையான தூண்களாக மாற வேண்டும் என்பதே.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-Platforms-vs-Pillars
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருடைய கணக்கு

வனாந்தர அதிசயம்

மேடைகள் vs தூண்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
