மேடைகள் vs தூண்கள்மாதிரி

மரத்தடி தூக்கமே நிம்மதியான தூக்கம் 😴🌴
நீங்கள் எப்போதாவது ஒரு மரத்தடியில் தூங்கியிருக்கிறீர்களா? அவை சிறந்த இன்பமான ஒரு தூக்கமாக இருக்கும்! நான் வளர்ந்துவந்த நாட்களில், மும்பையின் சலசலப்பான சத்தத்துக்கு விலகி, என் அம்மாவின் ஊராகிய ஒரு கிராமத்தில் என் விடுமுறையைக் கழிப்பதுண்டு. அங்கு என் வாழ்க்கை மிகவும் பரபரப்பானதாக இல்லாமல் மெதுவாக சென்றது, பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் மரத்தடியின் நிழலில் மெல்ல தூங்குவதற்காகவே நான் ஒரு மரத்தடிக்குச் செல்வேன். இது வெறும் வெளிப்புறக் காற்றா அல்லது மரம் வழங்கும் ஆக்ஸிஜனா என்பது எனக்குத் தெரியாது (நான் விஞ்ஞானி அல்ல), ஆனால் இதுவரை நான் வீட்டினுள் அறைக்குள் தூங்கிய எல்லா தூக்கத்தையும் விட, அங்கு அதிக புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பேன்.
மரங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு - அவை வலிமை, வளர்ச்சி மற்றும் ஆறுதல் போன்றவற்றின் சின்னங்களாகத் திகழ்கின்றன. வேதாகமம் நம்மை மரங்களுடன் ஒப்பிடுகிறதை சங்கீதம் 1:1-3 TAOVBSI வரையுள்ள வசனங்களில் நாம் காணலாம், இது ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நபரைப் பற்றி விவரிக்கிறது:
"அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." (சங்கீதம் 1:3 TAOVBSI)
மரங்கள் பெரிதாக வளர சில வருடங்கள் ஆகும்; இந்த நேரத்தில், அவை பல பருவங்களைக் கடந்து, ஆழமான வேர்களை ஊன்றி, மரத்தைச் சுற்றியுள்ளவர்களுக்கு பழங்கள், நிழல் மற்றும் ஆதரவை வழங்குகின்றன.
1 பேதுரு 2:5ல் பேதுரு பயன்படுத்தும் மற்றொரு சிறந்த சித்தரிப்பை இங்கே காணலாம்.
"ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்." (1 பேதுரு 2:5 TAOVBSI)
மேடைகள் vs தூண்கள் என்ற தலைப்பில் நாம் தியானித்த நேற்றைய செய்தி உங்களுக்கு நினைவிருக்கிறதா? மரங்கள், ஜீவனுள்ள கற்கள் மற்றும் தூண்கள் ஆகிய இவை அனைத்தும் ஒரே குணாதிசயத்தைக் கொண்டுள்ளன: அவை காலத்தால் அழியாமல் நின்று மற்றவர்களுக்கு ஆதரவளிக்கின்றன.
விரைவாகக் கட்டப்பட்டு, அதே வேகத்தில் இடிக்கப்படும் மேடைகளைப் போலல்லாமல் - தூண்கள் உறுதியாக நிற்கும், அவை தாங்கியிருந்த கட்டிடத்தின் மற்ற பகுதிகள் எல்லாம் இடிந்து விழுந்தாலும் கூட கடைசியில் நின்றுகொண்டிருக்கும் ஒரே பாகம் தூண்களாக மட்டுமே இருக்கும்.
மேடை என்பது நீங்கள் ஏறி நிற்க உதவும் ஒரு பொருள், ஆனால் தூண்கள் என்பது மற்றவர்களுக்கு ஆதரவாக நிற்கும் ஒன்றாக இருக்கிறது.
நாம் சேர்ந்து ஜெபிப்போம்:
“பரலோகப் பிதாவே, உமது ராஜ்யத்தில் என்னைத் தூணாக மாற்றும். ஒவ்வொரு பருவத்திலும் உறுதியாக நிற்கவும், உம்மில் ஆழமான வேர்களை ஊன்றவும், உமது அன்பு மற்றும் வலிமைக்கான தூணாக என்னைச் சுற்றியுள்ளவர்களை ஆதரிக்கவும் எனக்குக் கற்றுக் கொடுப்பீராக.”
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

மேடைகளைச் சார்ந்து சுற்றும் இந்த உலகில், சமூக ஊடகங்கள் நாம் மற்றவர்களையும் நம்மையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன. ஆனால் வேதாகமம் இதற்கும் மேலான சிறந்த ஒன்றை வழங்குகிறது: மேடைகளின் பின்னால் ஓடுவதற்குப் பதிலாக, நாம் நிலையான தூண்களாக மாற வேண்டும் என்பதே.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-Platforms-vs-Pillars
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

மேடைகள் vs தூண்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ஆண்டவருடைய கணக்கு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

வனாந்தர அதிசயம்
