பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு வாழுங்கள்: ஜான் பைப்பருடன் தியானங்கள்மாதிரி

Live By The Spirit: Devotions With John Piper

7 ல் 7 நாள்

பரிசுத்த ஆவியானவர் நம் சரீரத்தை எழுப்புகிறார்

அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். — ரோமர் 8:11

தேவன் நம் உடலின் ஆரோக்கியத்தை குறித்து மிகவும் கருசினை கொண்டவராக இருக்கிறார். அவருக்கு கருசனை இல்லாதிருந்தால், அதை கல்லறையில் அழுகிப்போக விட்டுவிட்டிருந்திருப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்வதே இல்லை. இல்லை, தேவன் உன்னை ஒரு சரீரத்தோடு சிருஷ்டித்தார், அவருடைய மகிமைக்காக சிருஷ்டித்தார்.

ஆகவே அவர் உன் சரீரம் எவ்வளவுதான் அழுகி, அமைப்பற்று, கெட்டு, வியாதிப்பட்டு இருந்தாலும் அவர் அதை அவர் ஆவியைக் கொண்டு எழுப்பப்போகிறார். அதை ஆரோக்கியமாக, அழகாக பெலனுள்ளதாக காணும்போது நான் "நீ இயற்கையின் முழு அழகையும் கொண்டு இருக்கிறாய், நீல வானம்போல், இருளின் நட்சத்திரங்களைப்போல், சூரியனின் கதிர்வீச்சைபோல், உன்னில் இயேசுவின் மகிமையை காண்கின்றேன்" என்று சொல்லுவேன். அவரே உன்னை உருவாக்கி, மீட்டு, எழுப்பி, என்றென்றைக்கும் மகிமைப்படுத்துகிறவர்.

மிக குறைவான பூமிக்கு ஒத்த வெகுமதி இருக்கும்போது யாரால் அன்பின் ஜீவியத்தை நடத்திக்கொண்டே இருக்கமுடியும்? திரும்பி அன்பு தரப்படாத இடத்தில் எந்த கணவன் மனைவியால் கொடுத்து கொண்டே இருக்கும் மன நிலையை கொண்டிருக்க முடியும்? எழுவது ஆண்டுகள் தனிமையாக இருந்த ஒரு நபரால் திருமணம் செய்துகொள்ள எங்கு பெலனைப்பெற்று கொள்ளமுடியும்? இயேசு எங்கு சிலுவையை சகித்து அவமானத்தை தாங்க பெலனை பெற்றுக்கொண்டார் (எபிரேயர் 12:2)?

எழுப்பப்படும்போது நமக்காக வைக்கப்பட்டிருக்கும் சந்தோசஷத்தின் நிமித்தம் நாம் கிறிஸ்துவிலே அனைத்தையும் சகிக்கிறோம். இயேசு அவருக்கு கீழ்ப்படிவதற்கு பூமியில் நிச்சயம் வெகுமதி உண்டு என்று வாக்களிக்கவில்லை. ரோமர் 8:11 இல் உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையினால் நமக்கு சந்தோஷம் வழிந்தோடுகிறது. நம்முடைய வாழ்க்கையின் மாறும் சூழ்நிலைகளினால் அல்ல. "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.”

தேவன் உன்னோடு இருக்கிறார், உனக்கு எதிராக அல்ல என்றும் அவர் அவருடைய ஆவியைக்கொண்டு உன் சாவுக்குரியசரீரத்திற்கு ஜீவனை கொடுப்பாரென்றும் நீ இந்த உலகில் விட்டுக்கொடுக்கும் நன்மைகள் அனைத்தும் நீதிமான்களின் உயிர்தெழுதலில் நூறு மடங்காய் திருப்பி கொடுக்க படும் (மாற்கு 10:28-30) என்றும் நீ உண்மையில் விசுவாசத்தால், அப்போது நீ அளிக்கப்பட்டிருக்கும் நல்லது செய்வதற்கு குறைவில்லாத தேக்கத்தை நீ கொண்டிருப்பாய்.

இன்னும் அறிந்துகொள்ள: http://www.desiringgod.org/messages/the-spirit-will-give-life-to-your-mortal-bodies

இந்த திட்டத்தைப் பற்றி

Live By The Spirit: Devotions With John Piper

பரிசுத்த ஆவியானவரை குறித்து ஜான் பைப்பரின் 7 வேதாகம தியானங்கள்

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக ஜான் பைப்பர் மற்றும் 'டெசிரிங் கோட்' அமைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம். இன்னும் தகவலுக்கு, http://www.desiringgod.org/என்ற இணையதளத்தை பார்வையிடவும்