திட்ட விவரம்

அடுத்து என்ன: மாணவர் பதிப்புமாதிரி

What's Next: Student Edition

7 ல் 6 நாள்

குற்ற உணர்வும் பாவ உணர்வும்





நீங்கள் தேவனுக்காக வாழ துவங்கவிருப்பதால், தவறாக சிலவற்றை செய்ததும் ஒரு விதமாக உணர்வதை நீங்கள் ஒருவேளை கவனிப்பீர்கள். உங்கள் ஆவி சரி எது தவறு எது என்றும், நல்லது எது கெட்டது எது என்றும் அதிக உணர்வடைகிறது. எந்த உணர்வுகள் தேவனிடத்திலிருந்து வருகிறது என்றும் எவை தேவனிடத்திலிருந்து வரவில்லை என்றும் அறிவது முக்கியம்.





இன்றைக்கு நீங்கள் வாசித்த வசனங்களில், மக்கள் பல விதமாக தேவனுக்கு பதிலளித்தனர். ஆதாம் ஏவாள் பாவம் செய்த பின், அவர்கள் தேவனிடத்திலிருந்து மறைந்துக் கொண்டனர். தங்களை அவரிடமிருந்து பிரித்துக் கொண்டனர். தாவீது பாவம் செய்த பின், அவர் தேவனிடம் சென்று, தேவனை ஆராதித்து, அவரிடம் அழுதார். ஆதாம் ஏவாள் குற்ற உணர்வு அடைந்தார்கள். தாவீது பாவ உணர்வு அடைந்தார்.





குற்ற உணர்வுக்கும் பாவ உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் அது தான். நீங்கள் செய்ய கூடாது என்று அறிந்த ஒரு தவறை செய்த பின், குற்ற உணர்வு உங்களை தேவனிடமிருந்து மறைய முயற்சிக்கவும் அவரிடமிருந்து பிரிக்கவும் செய்யும். "நான் நல்லவன் அல்ல", "நான் எப்போதும் தவறு செய்துக்கொண்டே இருக்கிறேன்" அல்லது "தேவனுக்கு இது வெறுப்பாக இருக்கும்" போன்ற காரியங்களை நீங்கள் சொல்வீர்கள். ஆனால் பாவ உணர்வு வித்தியாசமானது. நீங்கள் தவறு செய்யும் போது, பாவ உணர்வு உங்களை தேவனிடம் நெருங்க செய்யும்.





குற்ற உணர்வு தேவனிடமிருந்து வருவது அல்ல. அவரிடமிருந்து நீங்கள் பிரிக்கப்பட அவர் விரும்புவதில்லை. நீங்கள் தவறு செய்தபின் உணர்வடைய வேண்டும் என்றும் அதன் மூலம் அவரிடம் நெருங்கி சேர வேண்டும் என்றும் விரும்புகிறார்.
நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

What's Next: Student Edition

தேவன் யாரென்றும் அவர் உங்களை யாராக இருக்க படைத்திருக்கிறார் என்றும் இந்த 7 நாள் அடிப்படை திட்டத்தில் நீங்கள் தேவ வார்த்தையை திறப்பதன் மூலம் கண்டறியவிருக்கிறீர்கள்.

இந்த திட்டத்தை வழங்கும் LifeChurch.tv க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்