திட்ட விவரம்

அடுத்து என்ன: மாணவர் பதிப்புமாதிரி

What's Next: Student Edition

7 ல் 2 நாள்

தேவனின் அடையாளம்





வானம், பூமி, மற்றும் பூமியில் உள்ள அனைத்தும், மற்ற எல்லாவற்றையும் படைத்தவர் தேவன். எல்லாம் அவராலும் அவருக்காகவும் படைக்கப்பட்டன. ஆனால் அதில் அதிசயம் என்னவென்றால் இந்த பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள அனைத்தையும் படைத்த அந்த பெரிய படைப்பாளராகிய தேவனுக்கு உங்கள் தலையிலுள்ள ஒவ்வொரு முடியையும் கூட தெரியும். தேவன் அன்பாக இருக்கிறார். அவர் உங்களை அறிந்திருக்கிறார், ஆழமாகவும் நெருக்கமாகவும் உங்களை நேசிக்கிறார், உங்களுடன் உறவுக் கொள்ள விரும்புகிறார். அது முகநூலின் படைப்பாளராகிய மார்க் ஜுக்கர்பர்க், முகநூல் கணக்கு கொண்ட ஒவ்வொருவரிடமும் நல்ல நண்பராகவும் இருந்து அவர்களை பற்றி அனைத்தையும் அறிந்திருப்பதை போன்றது. சரி, சரி, அப்படி ஒப்பிட கூட முடியாது. ஆனால் உங்களுக்கு புரிகிறது அல்லவா? தேவன் அனைத்தையும் படைத்தார், ஆனால் உங்களை தனிப்பட்ட விதத்தில் அறியவும் விரும்புகிறார். எனவே தேவனுடன் உங்கள் உறவை கட்டத் துவங்குங்கள். வேதம் வாசிப்பதன் மூலமும் ஜெபத்தில் நேரம் செலவிடுவதன் மூலமும் அவரை அறிந்துக் கொள்ளுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

What's Next: Student Edition

தேவன் யாரென்றும் அவர் உங்களை யாராக இருக்க படைத்திருக்கிறார் என்றும் இந்த 7 நாள் அடிப்படை திட்டத்தில் நீங்கள் தேவ வார்த்தையை திறப்பதன் மூலம் கண்டறியவிருக்கிறீர்கள்.

இந்த திட்டத்தை வழங்கும் LifeChurch.tv க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்