திட்ட விவரம்

அடுத்து என்ன: மாணவர் பதிப்புமாதிரி

What's Next: Student Edition

7 ல் 4 நாள்

சர்வ





தேவனின் முக்கிய குணாதிசயங்களை குறிப்பிட மூன்று சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை "எல்லாம்" என்ற அர்த்தம் உடைய சர்வ என்று துவங்குகின்றன. தேவன் சர்வஞானி, சர்வவல்லவர், சர்வவியாபி.





தேவன் சர்வஞானி என்றால், எல்லாவற்றையும் அறிந்தவர் என்று அர்த்தம். உங்கள் எண்ணங்கள், நோக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். உங்கள் தேவைகள் என்னவென்று உங்களை விட நன்றாக அறிந்திருக்கிறார். அவரால் புரிந்துக்கொள்ள முடியாதது, அவர் அறியாதது எதுவும் இல்லை. தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.





தேவனின் சர்வவல்லமை அவரால் எல்லாம் செய்ய சக்தி உள்ளது என்ற உண்மையை குறிக்கிறது. தேவனை விட பெரியதோ உயர்ந்ததோ எதுவும் இல்லை. அவரால் கையாள முடியாதது எதுவும் இல்லை. இந்த உலகத்தின் அனைத்து பிரச்சனைகளிலிருந்து நீங்கள் உங்களில் காணும் போராட்டங்கள் வரை எதையும் கையாள தேவன் பெலனுள்ளவராக இருக்கிறார். நீங்கள் சந்திக்கும் எதையும் விட தேவன் பெரியவர் என்று அறியுங்கள். உங்களால் கையாள முடியாதது போல் உணர்ந்தால், கையாள கூடிய சர்வவல்ல தேவன் இருக்கிறார் என்று அறியுங்கள்.





தேவன் சர்வவியாபி அல்லது எங்கும் நிறைந்தவர். அவர் இல்லாத இடம் எதுவும் இல்லை. அவர் எப்போதும் எல்லா இடத்திலும் இருக்கிறார். அவர் பிரசன்னம் அடைய முடியாத இடம் எதுவும் இல்லை. நீங்கள் தனிமையாக உணரும் நேரத்தில் தேவன் உங்களுடன் இருக்கிறார் என்று அறியுங்கள்.
நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

What's Next: Student Edition

தேவன் யாரென்றும் அவர் உங்களை யாராக இருக்க படைத்திருக்கிறார் என்றும் இந்த 7 நாள் அடிப்படை திட்டத்தில் நீங்கள் தேவ வார்த்தையை திறப்பதன் மூலம் கண்டறியவிருக்கிறீர்கள்.

இந்த திட்டத்தை வழங்கும் LifeChurch.tv க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்