திட்ட விவரம்

அமைதியில் அமர்ந்திருத்தல்: ஏழு நாட்கள் தேவனுடைய வாக்குத்தத்திற்குள் காத்திருத்தல்மாதிரி

Sitting in the Still: 7 Days to Waiting Inside of God’s Promise

7 ல் 7 நாள்

நாள் 7

அமைதியில் அமர்ந்திருத்தல்: வெளியேற அனுமதி

உங்களது "அமைதியான இடம்" சமாதானமான இடமாக இல்லாத போது என்ன செய்வது? விரும்பத்தகாத இடத்தில் நீங்கள் மாட்டிக்கொள்ளும்போது என்ன செய்வது? திருமணத்தில் பிரச்சனையோ, விரும்பத்தகாத வேலையோ, வேண்டாத நட்போ பிள்ளைகளினால் போரட்டமோ, சபையாரால் வேதனைகளோ. இவை அனைத்தும் நாம் கடந்து செல்லும் சோதனைகள் மற்றும் தேவன் நம்மை இருக்க வைக்கும் சோதனைகள்.


நம்மில் பலர் சோதனைகளை அனுபவிக்கிறோம், உடனடியாக அந்த சோதனையில் இருந்து தப்பிக்க விரும்புகிறோம். ஆனால், தேவன் நாம் வெளியேற அனுமதிப்பதில்லை. சோதனைகளே எனினும் அந்த சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க வெளியேற நமக்கு அதிகாரம் இல்லை. நாம் ஜெபித்து தேவ பதிலுக்காக, வழிநடத்தலுக்காக காத்திருக்க வேண்டும். தேவன் பதில் அளிக்கவில்லை எனில் அது நாம் வெளியேறுவதற்கான அனுமதி அல்ல.


நாம் அனைவருமே சௌகரியம் இல்லாமல் இருப்பதை வெறுக்கிறோம் மேலும் சிறு சங்கடம் வந்த உடனே தேவன் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த சங்கடமான இடங்களில் தேவன் இல்லை என்று கருதுகிறோம். ஆனால் தேவனை கண்டடைய அதுவே சிறந்த இடம். நானும் சௌகரியம் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டு தேவனை முழு இருதயத்தோடு தேடி கண்டடைந்த தருணங்கள் உண்டு. சபையை விட்டோ, உறவை விட்டோ, வேலையை விட்டோ வெளியேறுவதின் நிமித்தமாக நமது சோதனையை நாம் தடுக்க முடியும், ஆனால் அப்படி செய்வதின் மூலமாக நமக்கு முன்னாக இருக்கும் நமது நோக்கத்திற்கான கருவியை இழந்து விடுகிறோம்.


தேவன் உங்கள் வாழ்க்கையில் ஒரு வாக்குத்தத்தை தந்திருந்தால் அந்த வாக்குத்தத்தம் நிறைவேற உங்களுக்கு கருவிகள் தேவைப்படும் என்பதே நினைவில் கொள்ளுங்கள். துன்பங்கள் துயரங்கள் மற்றும் சோதனைகளில் நீங்கள் பொறுமையாக இருந்தால் மறுபுறம் வரும்போது முழுமை பெற்று வருவீர்கள். உங்கள் வாழ்க்கையில் தேவன் தந்த வாக்குத்தங்கள் நிறைவேற அந்தக் கருவியை உங்களுக்குள் பொருத்த தேவனுக்கு இடம் கொடுங்கள். தேவன் உங்களை வெளியேறச் சொல்லும் வரை அந்த அமைதியான சூழலில் அமர்ந்திருங்கள். இப்பொழுது சங்கடமான தருணங்களில் தேவனுடைய வழிநடத்ததற்காக காத்திருப்பீர்களானால் வேண்டுதலோடும் ஜெபங்களோடும் தேவனுக்கு உண்மையாக இருந்து காத்திருங்கள் அவர் ஏற்ற நேரத்தில் உங்களோடு பேசுவார்.


இத்திட்டத்தை முடிக்கும் இந்நேரத்தில், உங்களை தேவன் எந்தவிதமான "அமைதியான சூழலில்" வைத்திருந்தாலும் தேவனுடைய சத்தத்திற்காக காத்திருக்கவும் அமர்ந்திருக்கவும் உறுதிமொழி எடுங்கள். பயப்படாதீர்கள், அவருடைய சத்தம் இல்லாத மற்ற சத்தங்களுக்கு செவி சாய்க்காதிருங்கள். உங்களுடைய சுய புத்தி சார்ந்து விடாதீர்கள். ஏனெனில் அவர் சரியான நேரத்தில் உங்களோடு பேசுவார்.


வேதவசனங்கள்

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Sitting in the Still: 7 Days to Waiting Inside of God’s Promise

சில நேரங்களில் தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தம் இருக்கும், ஆனால் நம்முடைய வாழ்க்கைக்கும் அந்த வாக்குத்தத்துக்கும் சம்பந்தமே இராது. அல்லது நம் வாழ்வில் முச்சந்தியில் வந்து நின்றிருப்போம், எந்தப்பக்கம் செல்வது என்ற கேள்விக...

More

இந்த தியான திட்டத்தை வழங்கியமைக்காக ஜெஸிக்கா ஹெர்ட்ரிக் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: https://jessicahardrick.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்