திட்ட விவரம்

அமைதியில் அமர்ந்திருத்தல்: ஏழு நாட்கள் தேவனுடைய வாக்குத்தத்திற்குள் காத்திருத்தல்மாதிரி

Sitting in the Still: 7 Days to Waiting Inside of God’s Promise

7 ல் 2 நாள்

நாள் 2

அமைதியான சூழலில் அமர்ந்திருத்தல்: தேவன் ஒன்றுமே சொல்லாத போது என்ன செய்வது.

சில நாட்களில் தேவன் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன், அடுத்த கட்ட ஆலோசனைக்காக காத்துக் கொண்டிருப்பேன் ஆனால் தேவனிடம் இருந்து வெகு காலம் எதிர்பார்த்த பதில் வராது. அதேபோல சில நேரங்களில் தேவன் எனக்கு ஒரு வாக்குத்தத்தம் தந்திருப்பார், அதை நான் உள்வாங்கிக் கொள்ளும் முன்னமே அது எனது வாழ்வில் நிறைவேறி இருக்கும். இப்படிப்பட்ட நேரங்களுக்கும் ஒரு காரணம் உண்டு அதேபோல தேவன் அளித்த வாக்குத்தத்தம் என் வாழ்வில் நிறைவேறுவதற்கு வருடங்கள் பல ஆனதற்கும் காரணம் உண்டு.


எனது இளமைக் காலத்தில் தனிமையாக உணர்ந்தது நினைவிருக்கிறது. மிகவும் தனிமை, என் பார்வைக்கு எட்டியவரை ஏற்ற துணையே இல்லை. பல வருடங்களுக்கு முன்பே திருமணம் எனக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது, எனவே அந்த வாக்கை நான் என்னோடு தூக்கித் திரிந்தேன். எனக்கான தேன திட்டத்தை ஒருபோதும் சந்தேகித்ததேயில்லை, ஆனால் அதைத் தேடி ஒவ்வொரு கல்லையும் புரட்டினேன். ஆனால் சில நேரங்களில் எனக்கான தேவத்திட்டத்தை தவறவிட்டுவிடுவேனோ என அஞ்சினேன். இவர் எனக்கானவர் அல்ல என்று உணர்ந்து நான் யாரையாவது வேண்டாம் என  விரைவாக நிராகரித்தால், எனக்கான தேவமனிதனை தவறவிட்டுவிடுவேனோ என பயந்தேன். நான் தேவனை தவறவிட விரும்பவில்லை, எனவே அவரது அமைதியில் தேட ஆரம்பித்தேன்.


தேவன் அமைதியாயிருக்கையில், "தேவனுக்கு உதவுவதாக" நினைத்து நான் தெரிந்தெடுத்த பல தெரிவுகள் எனக்கான தேவனின் வாக்குத்தத்தத்தை காலம் தாழ்த்தியது என்பது உறுதி. எனது தெரிவுகள் இந்த பயணத்தில் தேவன் திட்டமிட்டிருந்ததைக் காட்டிலும் அதிகமான மன வேதனைகளை தந்தன. சாராளைப் போல, நானும் தேவனுக்கு எனது உதவி தேவை என நினைத்தேன். எனக்காக தேவன் வைத்திருந்த "அமைதியான இடங்களை" அனுபவிக்காமல், காரியத்தை துரிதப்படுத்த நான் தேவனுக்கு உதவி செய்ய முயற்சித்தேன்.


பின் திரும்பி பார்த்தால், அந்த "அமைதியான காலங்கள்" இப்போது நான் இருக்கும் நிலைக்கு என்னை தயார்படுத்தின். அந்த அமைதியான காலங்கள் விசுவாசம் மற்றும் விடாமுயற்சியை கற்றுத்தந்தது மேலும் இப்போது நான் இருக்கும் நிலைக்கு கடக்க வேண்டியவற்றை கடக்கச் செய்தது. இப்போது எனக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது, இதுதான் தேவன் எனக்கு நிர்ணயித்த இடம் என என்னுடைய இருதயத்தில் நான் உணர்கிறேன்.


தேவன் உங்கள் இருதயத்தில் வாக்குத்தத்தை வைப்பதற்கும் அது உங்கள் வாழ்வில் நடப்பதற்குமான இடைப்பட்ட காலங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்? காத்திருங்கள். தயாராகுங்கள். பொறுத்திருங்கள். உங்களுக்குள்ளும் உங்கள் மூலமாகவும் தேவன் கிரியை செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும். உங்கள் முன்னிருக்கும் இலக்கை அடைய உங்களுக்கு என்ன தேவை என்பது கர்த்தருக்கு தெரியும், நான் விசுவாசிக்கிறேன் அதற்காக தேவன் உங்கள் "அமைதியான சூழ்நிலையில்" உங்களை உருவாக்குகிறார். தேவன் நம்மை மறந்துவிட்டார் என்று நாம் நினைக்கிற வேளையில் அவர் மிக முக்கியமான வேலைகளை அந்த "அமைதியான காலங்களில்" செய்து கொண்டிருக்கிறார்.


நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Sitting in the Still: 7 Days to Waiting Inside of God’s Promise

சில நேரங்களில் தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தம் இருக்கும், ஆனால் நம்முடைய வாழ்க்கைக்கும் அந்த வாக்குத்தத்துக்கும் சம்பந்தமே இராது. அல்லது நம் வாழ்வில் முச்சந்தியில் வந்து நின்றிருப்போம், எந்தப்பக்கம் செல்வது என்ற கேள்விக...

More

இந்த தியான திட்டத்தை வழங்கியமைக்காக ஜெஸிக்கா ஹெர்ட்ரிக் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: https://jessicahardrick.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்