அமைதியில் அமர்ந்திருத்தல்: ஏழு நாட்கள் தேவனுடைய வாக்குத்தத்திற்குள் காத்திருத்தல்மாதிரி

நாள் 6
அமைதியாக அமர்ந்திருத்தல்: திட்ட பறிமுதல்
பழைய ஏற்பாட்டிலே, சாமுவேல் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் வராததால் சவுல் காரியங்களை தனது கரத்தில் எடுத்துக் கொள்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். தேவனுக்காக காத்திருப்பதிற்கு பதிலாக முடிவைத் தனது கரங்களில் எடுத்து தேவனுக்கு கீழ்ப்படியாமல் அவருடைய மொத்த ராஜ்யத்தையும் இழந்து விடுகிறார்.
தேவனுடைய வழிநடத்தல்கள் சில நேரங்களில் கடினமாக இருக்கலாம் ஏனெனில் அந்தப் பாதையின் வழியாக நடப்பதற்கு நாம் தனியே விடப்பட்டது போல தோன்றலாம் ஆனால் இது போன்ற சமயங்களில் அவர் நமது கீழ்ப்படிதலையும் உண்மையையும் சோதித்துப் பார்க்கிறார். எந்தப் பக்கம் செல்வது என்று புரியாமல் நாற்சந்திகளில் நின்று தேவனுடைய சத்தத்திற்காக காத்திருக்கும்போது, வலது புறம் இடது புறம் சாயாமல் தேவ சத்தம் கேட்கும் வரை அதே இடத்தில் அந்த அமைதியில் தரித்திருப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். நாம் சவுலின் வாழ்க்கையில் பார்ப்பது போல, இது மிகவும் முக்கியமானது! தேவனுடைய வழிநடத்துதல் இல்லாமல் நாம் நகர்வது என்பது நமக்கான வாக்குத்தத்தை பறிமுதல் செய்வது போன்றது. இது நமக்கான நோக்கத்தை விட்டு வெளியே சுற்றி திரிந்து நமது வாழ்வின் பல வருடங்களை வீணாக்க செய்துவிடும்.
சவுல் ஒரு தலைவன், பலர் அவருடைய வழி நடத்துதலுக்காக காத்திருந்தனர்; அவருடைய தவறு அநேகரை தவறான வழியில் இழுத்துச் செல்லும். தோழர்கள் மற்றும் மற்றவருடைய அழுத்தத்தை நமது வாழ்வில் அனுமதிப்பது நம்மை தவறான வழிக்கு தள்ளிவிடும். மற்றவருடைய வார்த்தையை கேட்டு தேவனுக்காக காத்திருக்காமல் இருப்பது நமது பாதையில் தேவனை தொலைக்கச் செய்து விடும்.
தேவன் நாம் உயர்தரமான வாழ்வை வாழ வேண்டும் என்று விரும்புகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் தேவன் நமக்காக திட்டமிட்ட வாழ்வை நாம் வாழ்வதை உறுதிப்படுத்த தேவன் நமக்கு வாக்குத்தத்தங்களை கொடுக்கிறார், மற்றோரை மாற்றும் ஒரு வாழ்க்கை மேலும் நமக்கு ஆசீர்வாதமான ஒரு வாழ்க்கை இதுவே தேவன் நமக்காக திட்டமிட்டது. ஆனால் நாம் மற்றோருடைய வழிநடத்துதலை பின்பற்றும்போது நமக்காக தேவன் வைத்திருப்பதை இழந்து போகிறோம்.
ஆம், நம்மால் தேவனைக் கேட்க முடியாத அல்லது தேவனிடமிருந்து உடனடியான பதில் கிடையாத சில சமயங்களும் உண்டு, அதற்காக மற்றவர்களுடைய வழிநடத்துதலின்படியோ அல்லது உங்கள் சுய முடிவைக் கொண்டோ உங்களுக்காக தேவன் வைத்திருக்கும் நல்ல திட்டத்தை இழந்து விடாதீர்கள். நீங்கள் உண்மையுள்ளவர் என்று நிரூபியுங்கள், தனது மேய்யப்பனுடைய சத்தத்தை மாத்திரமே கேட்கும் ஆடாக இருங்கள். ஒருவேளை நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்திற்காக காத்திருக்கக்கூடாதபடி உங்களை சுற்றிலும் இருக்கும் சத்தம் மிகவும் அதிகமாக இருக்கிறது என்றால் காத்திருக்க ஒரு "அமைதியான இடத்தை" தேர்ந்தெடுங்கள், அப்போது தேவன் தமக்கு சித்தமான நேரத்தில் பேசுவது நமக்கு கேட்கும். தேவனிடம் ஒரு உறுதி மொழி எடுங்கள் அவரது சத்தம் கேட்காமல் எங்கேயும் நகரமாட்டேன் என்று.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

சில நேரங்களில் தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தம் இருக்கும், ஆனால் நம்முடைய வாழ்க்கைக்கும் அந்த வாக்குத்தத்துக்கும் சம்பந்தமே இராது. அல்லது நம் வாழ்வில் முச்சந்தியில் வந்து நின்றிருப்போம், எந்தப்பக்கம் செல்வது என்ற கேள்விக்கான பதிலை தேவன் பேச காத்துக்கொண்டிருப்போம், ஆனால் நமக்கு கேட்பது அவரது மௌனம் மாத்திரம். இந்த 7 நாள் தியானம் தேவன் மௌனமாய் இருக்கும்போது நாம் எப்படி அவரது சித்தப்படி செயல்படுவது என்று போதிக்கிறது.
More