அமைதியில் அமர்ந்திருத்தல்: ஏழு நாட்கள் தேவனுடைய வாக்குத்தத்திற்குள் காத்திருத்தல்மாதிரி

நாள் 4
அமைதியான இடத்தில் அமர்ந்திருத்தல்: அவர் சித்தம்
நாம் தேவ சித்தத்தை செய்தால் அது மிகவும் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால் தேவன் நமக்கு மிருதுவான பாதை ஒருபோதும் வாக்களிக்கவில்லை. ஆனால் அவர் நம்மோடு இருப்பதற்கும், அவருடைய சித்தத்திற்குள் நம்மை வைத்திருப்பதற்குமான வாக்குத்தத்தை தந்திருக்கிறார். நம் தேவப் பாதையில் பயணிக்கும் போது, எதிர்ப்புகளை கண்டு அணைந்து விடுகிறோம் ஏனெனில் தேவன் நமது விருப்பப்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சிறு தடங்கள் வந்த உடனே தேவ சத்தத்தையும், நமது வாழ்விற்கான அவருடைய சித்தத்தையும் சந்தேகிக்கிறோம்.
நாம் சில நேரங்களில் சங்கடங்களையும் அசௌகரியங்களை சந்திப்பதின் காரணம் நாம் குறித்த நேரத்தை தவற விட்டு விட்டோம் அல்லது அது தேவ சித்தம். நம் தேவ சத்தத்திற்கு கீழ்ப்படியும்போது, இந்த சின்ன வேகத்தடைகள், நாம் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கும்போதே நமக்கு போதிக்கிறது திடப்படுத்துகிறது; அந்த பாதுகாப்பான இடம் தேவ சித்தம்.
தேவ சித்தத்தில் இருத்தலைப் பற்றிய வேதாகம பகுதிகளில் ஒன்று, யோசேப்பும் மரியாளும் தேவகுமாரனை இவ்வுலகில் பெற்று எடுப்பதற்கான பயணம். தேவகுமாரனை பெற்றெடுக்க ஒரு இடத்தை அவர்கள் தேடும் வேலையில் இயேசுவை பெற்றெடுப்பதற்காக ஒரு சிறந்த இடத்தை தர வேண்டும் என்றே அவர்கள் ஜெபித்து இருப்பார்கள் அவருடைய ஜெபம் பதிலளிக்கப்படாதது போல தோன்றுகையில், தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தில் அவர் தங்களை கைவிட்டு விட்டதாக எண்ணி இருப்பார்களா என்று சந்தேகிக்கிறேன். அவர்கள் ஒரு நிமிடம் சந்தேகித்து இருக்கலாம்; நாமும் அதையே செய்திருப்போம். இருந்தாலும், யோசேப்பும் மரியாளும் தங்கள் விசுவாசத்தை தொடரந்தனர்; அவர்கள் பெற்ற வாக்குத்தத்தைப் போல சூழ்நிலை இல்லை என்பதற்காக அதனை விட்டு வெளியறவில்லை.
உங்கள் வாழ்க்கையில் நோக்கத்தை வழங்குவதற்கான தேவனுடைய வழக்கத்திற்கு மாறானதாக தோன்றும் வழியை நீங்கள் நடந்து கொண்டிருப்பீர்களானால், தொடர்ந்து ஜெபியுங்கள், "அமைதியான சூழலிலும்" விசுவாசத்தை விடாதிருங்கள். உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய நோக்கத்தைக் குறித்து சந்தேகிக்காதிருங்கள் விரக்தி அடையாதிருங்கள், ஏனெனில் அது அவருடைய சித்தமான நாளில் தெரியவரும், நமக்கு சித்தமானபடி அல்ல. உங்கள் "அமைதியான சூழலைக்" குறித்து ஜெபியுங்கள், தேவ சித்தப்படி மாத்திரமே அசைவதற்கு, நகர்வதற்கு உறுதிமொழி எடுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

சில நேரங்களில் தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தம் இருக்கும், ஆனால் நம்முடைய வாழ்க்கைக்கும் அந்த வாக்குத்தத்துக்கும் சம்பந்தமே இராது. அல்லது நம் வாழ்வில் முச்சந்தியில் வந்து நின்றிருப்போம், எந்தப்பக்கம் செல்வது என்ற கேள்விக்கான பதிலை தேவன் பேச காத்துக்கொண்டிருப்போம், ஆனால் நமக்கு கேட்பது அவரது மௌனம் மாத்திரம். இந்த 7 நாள் தியானம் தேவன் மௌனமாய் இருக்கும்போது நாம் எப்படி அவரது சித்தப்படி செயல்படுவது என்று போதிக்கிறது.
More