அமைதியில் அமர்ந்திருத்தல்: ஏழு நாட்கள் தேவனுடைய வாக்குத்தத்திற்குள் காத்திருத்தல்மாதிரி

Sitting in the Still: 7 Days to Waiting Inside of God’s Promise

7 ல் 5 நாள்

நாள் 5

அமைதியில் அமர்ந்திருத்தல்: சித்தத்திற்கு காத்திருத்தல்

16 இல் இருந்து 19 வயதிற்குள் தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டார், ஆனால் சட்ட பிரகாரமாக அவர் இஸ்ரவேலின்  ராஜாவாக ஆளுகை செய்வதற்கு 30 வயது ஆயிற்று.  23 லிருந்து 30 வயது வரை தாவீது சவுல் ராஜாவின் கோபத்தை மற்றும் அனேக கடின காலங்களை கடந்து வர வேண்டியது இருந்தது. ஆனால் அந்தக் காலத்திலே அவர் தேவனுக்கு உண்மையானவராக இருந்தார். தேவன் தனக்கு வாக்களித்த அவருடைய நோக்கத்திற்காக காத்திருந்தார்.

தேவ ராஜ்யத்தில் நாம் நாம் நினைப்பதெல்லாம் கிடைத்து விடாது, நாம் நினைக்கும் போதெல்லாம் கிடைத்து விடாது. நான் பூரணமாகும்படி அழைக்கப்பட்ட இந்த வாழ்விலே காத்திருத்தல் என்பது ஒரு முக்கியமான பகுதி. காத்திருத்தல் என்பது தேவ நோக்கத்திற்கு நம்மை தயார்படுத்துகிறது, விசுவாசத்தை பெலப்படுத்துகிறது, விடாமுயற்சியை போதிக்கிறது.

ஒரு இராஜாவாக இருந்து தேசத்தை திறம்பட வழிநடத்த தாவீதுக்கு சில திறமைகள், விடாமுயற்சி மற்றும் அறிவு தேவை என்பது தேவனுக்குத் தெரியும். இவைகளில் பெரும்பாலனவைகள் தாவீதுக்கு காத்திருத்தலின் காலங்களில் தேவன்  வழங்கினார் என விசுவாசிக்கிறேன்.

உங்கள் வாழ்க்கைக்காக கொடுக்கப்பட்டுள்ள நோக்கத்திற்காக நீங்கள் தயாராக வேண்டியிருக்கும். உங்கள் அழைப்பிலே நீங்கள் நடக்க தயாராக இருப்பதாக உணரும்போது, உங்கள் அழைப்பை தேவன் அறிவார் எனவே நம்பிக்கையை தேவன் மேல் வையுங்கள். தேவன் உங்களை ஏதோ ஒன்றிற்காக அழைத்து இருக்கிறார் ஆனால் ஏன் இன்னும் உங்களது நேரம் வரவில்லை என்று புரியாத போது, நினைவில் கொள்ளுங்கள் தேவன் தாவீதை பழக்கவித்ததை போல உங்களையும் பழக்கவித்து கொண்டிருக்கலாம். தேவ நோக்கத்தை முன்னிட்டு கீழ்ப்படியுங்கள், உண்மையாக இருங்கள், பொறுமையாக இருங்கள், ஜாக்கிரதை உள்ளவனாக அறியப்படுங்கள். நமக்காக நாம் கொண்டிருக்கும் திட்டத்தை விட தேவன் வைத்திருக்கும் திட்டம் மிகச்சிறந்தது. அந்தத் திட்டத்திற்கும் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்கும் உங்கள் இருதயத்தை அர்ப்பணித்து ஜெபியுங்கள்.

இந்த திட்டத்தைப் பற்றி

Sitting in the Still: 7 Days to Waiting Inside of God’s Promise

சில நேரங்களில் தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தம் இருக்கும், ஆனால் நம்முடைய வாழ்க்கைக்கும் அந்த வாக்குத்தத்துக்கும் சம்பந்தமே இராது. அல்லது நம் வாழ்வில் முச்சந்தியில் வந்து நின்றிருப்போம், எந்தப்பக்கம் செல்வது என்ற கேள்விக்கான பதிலை தேவன் பேச காத்துக்கொண்டிருப்போம், ஆனால் நமக்கு கேட்பது அவரது மௌனம் மாத்திரம். இந்த 7 நாள் தியானம் தேவன் மௌனமாய் இருக்கும்போது நாம் எப்படி அவரது சித்தப்படி செயல்படுவது என்று போதிக்கிறது.

More

இந்த தியான திட்டத்தை வழங்கியமைக்காக ஜெஸிக்கா ஹெர்ட்ரிக் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: https://jessicahardrick.com/