ஜெபம் மெய்யாகும் போதுமாதிரி

Where Prayer Becomes Real

5 ல் 5 நாள்

நாள் ஐந்து

தேவன் உங்கள் அருகில் இருக்கிறார்

என்னுடைய பெரும்பாலான கிறிஸ்தவ வாழ்வில் நான் ஜெபத்தில் என்னோடு எந்த அளவு போராடுகிறேன் என்பதை உணராமல் இருந்தேன். என்னுடைய தராதரத்தின் படி நான் "சரியாக ஜெபிக்க" முடியாத போது இன்னும் கடினமாக முயற்சிக்கும்படி, இன்னும் நன்றாக ஜெபிக்கும்படி, தேவனிடத்தில் நான் உண்மையாக  இருக்கிறேன் என்று நிரூபிக்கும் படி நானே எனக்கு எதிராக திரும்பினேன். ஆனால் தேவன் எனக்காக என்ன செய்து இருக்கிறார் என்பதை அறியாமல் உண்மையான ஜெபத்தை உருவாக்கும்படி நான் என்னுடைய மாம்சத்தில் முயற்சித்துக் கொண்டிருந்தேன். என் ஆழ் மனதில் தேவன் என்னுடைய உண்மையான தன்மையை விரும்புகிறார் என்பதை நான் நம்பவில்லை.

சங்கீதம் 145:18 இல் நாம் இதற்கு மாறாக கேட்கிறோம்: “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.” நம்மில் அநேகர் நம்முடைய போராட்டங்களில், நம்முடைய பாவப் போராட்டத்தில், நம்முடைய சந்தோஷத்தில் தேவனை அழைக்கலாம் என்பதை மெது மெதுவாக கற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஜெபத்திற்குள் தேவனை அழைக்க நம்மில் பலர் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். நமது ஜெபத்தின்(ஜெபத் தோல்வியின்) நடுவில் தேவனை அறிவதை பார்க்கிலும், நாம் தேவனிடத்தில் வேண்டுகிறோம். நான் ஜெபத்தில் தூங்கி விழுந்த போது நான் விழித்திருக்காததற்காக மன்னிப்பு கேட்டேன் தேவனிடம் என்னுடைய சோர்வை பற்றி ஒருபோதும் பேசவில்லை. ஜெபத்தில் என் மனம்  அலைபாய்ந்து திரிந்தபோது, ​​இதை அவரிடம் கொண்டு வரும்படி தேவன் என்னை அழைப்பதாக கருதினேன்.

ஜெபம் என்பது நல்ல நபராக இருக்க வேண்டிய இடம் அல்ல, நேர்மையாக இருக்க வேண்டிய இடம் என்று எனக்கு முதலில் சொன்னது எனது வழிகாட்டி. அங்குதான் எனது ஜெபம் உயிர்பெற்றது, ஏனென்றால் தேவன் உண்மையில் என் ஆழ்ந்த ஆசைகள், என் போராட்டங்கள் மற்றும் அவருடனான எனது உறவில் நான் உணர்ந்த பதற்றத்தில் என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்பதை நான் கண்டுபிடித்தேன். வரம்பிற்கு அப்பாற்பட்டு, இவையெல்லாம் அவருடைய பிரசன்னத்தை அறிந்து கொள்ளவும், எனக்குத் தேவையான இடத்தில் அவருடைய கருணையைப் பெறுவதற்குமான அழைப்புகள். 

என்னுடைய ஜெபங்களில் பல உண்மையல்ல என்பதை உணர்ந்தேன், ஏனென்றால் நான் ஒரு விசுவாசமுள்ள கிறிஸ்தவர் எப்படி ஜெபிப்பார் என நினைத்தேனோ அதே போல ஜெபிக்க முயற்சித்தேன். எனவே எனது ஜெப வாழ்வு பாசாங்கு செய்யும் வாழ்வாக மாறியது, நான் நீண்ட காலமாக நடித்தால், இறுதியில் நான் அதில் சிறந்து விளங்குவேன் என்று நம்பினேன். ஆனால் அது எங்கும் என்னை இட்டுச் செல்லவில்லை. உண்மையில், அது நான் ஜெபிப்பதை நிறுத்த வழிவகுத்தது. அவருடைய அன்பை அறியவும், அவருடைய பிரசன்னத்தை உண்மையாக அறியவும் தேவனின் அழைப்பை நான் கண்டுபிடித்தபோது, ​​இந்த இடங்களில் அவர் என்னுடன் இருந்தார் என்பதன் அர்த்தம் என்ன என்பதை நான் கண்டுபிடித்தேன். ஆனால் மீண்டும் நினைவுப்படுத்துகிறேன், இவை உறுதிப்படுத்த வேண்டிய உண்மைகள் அல்ல, ஆனால் வாழ வேண்டிய உண்மைகள். 

நீங்கள் தேவனிடம் பேசாத ஜெபப் போராட்டங்கள் உள்ளதா? என்ன ஆசைகள் மற்றும் ஏக்கங்களை நீங்கள் அவருடைய முன்னிலையில் வைக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்? அவற்றை தேவனுடன் பகிர்வது எப்படி இருக்கும்? இந்த இடங்களில் தேவன் உங்களுடன் இருக்கிறார் என்று உங்களால் நம்ப முடிகிறதா அல்லது உங்கள் இதயத்தின் சில பகுதிகளை இன்னும் உங்களுக்காக  வைத்திருக்கிறீர்களா?

இந்த தியானத்தை வாசித்ததற்கு நன்றி. இந்த வார்த்தைகளால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இந்த உள்ளடக்கம் உங்களுக்கு பிடித்திருந்தால், எனது புத்தகத்தின் முதல் அத்தியாயத்திற்கான இலவச பிரதியை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். நீங்கள் அதை இங்கே பெறலாம் https://www.whereprayerbecomesreal.com/  

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Where Prayer Becomes Real

ஜெபம் சில நேரங்களில் தனிமையாகத் தோன்றலாம். பெரும்பாலும், ஜெப நேரத்தில் நான் என் இதயத்தையும் ஆத்துமாவையும் அமைதிப்படுத்த முயற்சிக்கிறேன், என் மனம் எல்லா இடங்களுக்கும் ஓடுகிறது. சில நேரங்களில் நான் தூங்கிவிடுவேன். சில சமயங்களில் என் பிரார்த்தனைகள் உச்சவரம்பிலிருந்து குதிப்பது போல் உணர்கிறேன். அப்படியிருப்பினும், இந்த நேரங்களில் தான் தேவன் நற்செய்தியை வழங்குகிறார் என்பதை நாம் அடிக்கடி உணராமல் போகிறோம் ஜெபத்தைப் பற்றிய நற்செய்தியைக். அறிந்து கொள்ளும்படி சிறிது நேரம் செலவிடுவோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியமைக்கு பேக்கர் பதிப்பகத்தாருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு: https://bakerbookhouse.com/products/235866/ஐ பார்வையிடுங்கள்

சம்பந்தப்பட்ட திட்டங்கள்