ஜெபம் மெய்யாகும் போதுமாதிரி

நாள் ஒன்று
ஜெபத்தின் நற்செய்தியை கேளுங்கள்
என் வாழ்க்கையில் ஜெபம் என்பதை நான் திரும்பிப் பார்க்கும்போது, அது பெரும்பாலும் கடமையாக தன்னிச்சையான செயலாக மாறிவிட்டது. நான் நன்றாக ஜெபிக்க வேண்டும் அதுவே தேவன் என்னிடமிருந்து விரும்புவது என்று ஏதோ ஓரிடத்திலிருந்து நான் நம்பத் தொடங்கி விட்டேன். எனவே நான் தோல்வியடையும் போதோ – அல்லது படுக்கையில் என் மனம் அலைபாயும் போதோ அல்லது நான் தூங்கும்போதோ – என்னையே நினைத்து நான் வெட்குகிறேன், இதற்கு மேலும் நன்றாக ஜெபிக்க முடியாததற்காக குற்ற உணர்வடைகிறேன்.
நாம் போராடும் இவ்விடத்தில் தான் ஜெபத்தை பற்றி நற்செய்தியை கண்டடைய வேண்டும். இதனைப் பவுல் ரோமர் 8:26 இல் சொல்லுகிறார்: “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்." நாம் இன்னபடி ஜெபிக்க வேண்டும் என்று அறியாதிருக்கிறோம். இதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். தேவன் உங்களைப் பற்றி நினைக்கும் போது, ஜெபிக்க கூடிய உங்கள் தன்மையைப் பற்றி நினைக்கும் போது, எப்படி ஜெபிப்பது என்று உங்களுக்கு தெரியாது என்பதனை தேவன் அறிந்து, புரிந்து, அதனை அங்கீகரிக்கிறார்.
ஆனால் அதனை அங்கேயே விட்டு விடுவோமெனில் அது நம்மை மனச்சோர்வுக்கு உள்ளாக்கும். நமக்கு எப்படி ஜெபிப்பது என்பது தெரியாது என்பதை தேவன் அறிவது உற்சாகமூட்டுவதாக தான் இருக்கிறது. தேவன் அதனை அறிந்து,புரிந்து கொள்கிறார் என்னும் உண்மையில் நான் ஆறுதல் அடைகிறேன். ஆனால் தேவன் அதை புரிந்து கொள்வதோடு நிறுத்தி விடவில்லை. அதனை மாற்ற தேவன் ஒரு காரியம் செய்திருக்கிறார்! எபிரேயர் 4:14-16ல், எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதிருக்கிற இயேசு கிறிஸ்துவில் – நம்முடைய பலவீனங்களை புரிந்து கொண்டு நமக்காக பரிந்து பேசும் பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது – மேலும் வானங்களின் வழியாக பரலோகிற்கு சென்றுமிருக்கிறார். நமது பிரதான ஆசாரியர் தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார், “ஆத்துமாவின் நங்கூரமாக” “திரைக்குள் திரைக்குள்” சென்றிருக்கிறார் (எபி. 6:19). இதனாலே நாம் “கிருபா சம்தண்டையில் சேரும் தைரியத்தை பெற்றிருக்கிறோம்” (எபி. 4:16).
நம் எவ்வளவு நன்றாக ஜெபிக்கிறோம் என்பதில் இல்லை நம்முடைய தைரியம். நமது நம்பிக்கையானது நமது செயல் திறனிலோ, நமது அறிவுத்திறனிலோ அல்லது நமது நற்குணத்தினையோ அடித்தளமாக கொண்டதில்லை. இயேசு சாதித்ததினால் நம்மால் தேவனண்டை கிட்டி சேர முடிகிறது. இது இவ்வளவு நற்செய்தியாக இருப்பதற்குக் காரணம், நமது நற்குணமோ, விவேகமோ, பக்தியின் மூலமாக தேவ பிரசன்னத்தை அடையாமல், கிறிஸ்துவால் நாம் தேவனின் முன்னிலையில் பரிசுத்தமாக வர முடியும். கிறிஸ்து நமக்காக அனைத்தையும் செய்து முடித்தார்.நம்முடைய நன்மையினால் அல்ல, நாம் பாவிகளாயிருக்கையிலேயே அவர் நமக்காக மரித்தார், நம்மை இரட்சித்தார் (ரோமர். 5:8).
ஆகவே, நீங்கள் ஜெபிக்கும்போது, ஜெபத்தில் நீங்கள் “சரியாக ஜெபிக்கவில்லை” என்பதைப் போல உணரும்போது என்ன செய்கிறீர்கள் என்பதை சற்று நிதானித்துக் கவனியுங்கள். நீங்கள் விரக்தியடைகிறீர்களா? உங்கள் பற்களை கடித்து கடினமாக முயற்சி செய்வதாக அல்லது தற்போதை விட சிறந்து விளங்குவதாக தேவனிடம் வாக்குறுதிகளை அளித்து,மீண்டும் தோல்வியடைகிறீர்களா? உங்களுக்கு ஜெபிக்கத் தெரியாது என்று தேவனுக்குத் தெரியும் என்ற சத்தியத்தில் நீங்கள் ஓய்வெடுக்க முடியாததால் நீங்கள் ஜெபத்தில் அவமானத்தை அனுபவிக்கிறீர்களா? ஜெபத்தில் உங்கள் தோல்விகளை தேவனிடம் எடுத்துச் சொன்னால், உங்களுக்கு ஜெபிக்கத் தெரியாததை அறிந்தவரும், அதற்கு ஆவன செய்தவருமான தேவனைத் தேடினால் உங்கள் ஜெபங்கள் எப்படி மாறும்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஜெபம் சில நேரங்களில் தனிமையாகத் தோன்றலாம். பெரும்பாலும், ஜெப நேரத்தில் நான் என் இதயத்தையும் ஆத்துமாவையும் அமைதிப்படுத்த முயற்சிக்கிறேன், என் மனம் எல்லா இடங்களுக்கும் ஓடுகிறது. சில நேரங்களில் நான் தூங்கிவிடுவேன். சில சமயங்களில் என் பிரார்த்தனைகள் உச்சவரம்பிலிருந்து குதிப்பது போல் உணர்கிறேன். அப்படியிருப்பினும், இந்த நேரங்களில் தான் தேவன் நற்செய்தியை வழங்குகிறார் என்பதை நாம் அடிக்கடி உணராமல் போகிறோம் ஜெபத்தைப் பற்றிய நற்செய்தியைக். அறிந்து கொள்ளும்படி சிறிது நேரம் செலவிடுவோம்.
More
