ஜெபம் மெய்யாகும் போதுமாதிரி

நாள் மூன்று
விசுவாசத்தில் ஜெபித்தல்
ஜெபத்தை பற்றி எல்லா சரியான காரியங்களை நாம் உறுதிப்படுத்தினாலும் இன்னும் ஜெபிக்க நாம் போராடலாம். கடவுள் இருக்கிறாரா என்று அதிசயிக்கிறோம், கதறி ஜெபக்கிறோம், மேலும் எப்படி விளக்குவது என்றறியாத ஜெப அனுபவங்கள் நமக்கு அநேகம் உள்ளன. இது போன்ற இடங்களில் என்ன செய்வது என்று வேதம் வழிகாட்டினால் நன்றாக இருக்கும். ஒருவேளை வேதம் வழி காட்டியிருக்கலாம்.
1 யோவான் 3:19-20ல், இம்மாதிரி போராட்டங்களில் என்ன செய்ய வேண்டும் என்று நம் ஆத்துமாவுக்கு யோவான் வழி காட்டுகிறார். நாம் "அவருக்கு முன்பாக" இருக்கிறோம் என்றும் அவரது பிரசன்னத்தில் நம் மனதை தைரியபடுத்தி அமைதிபடுத்தலாம் என்றும் பார்த்தோம். முதலில் இது சற்று வித்தியாசமாக தோன்றலாம். ஏன் தேவ சமூகத்தில் நம்மை நாமே தைரியப்படுத்த வேண்டும்? தேவ சமூகத்தில் நான் ஏன் என்னுடன் பேச வேண்டும்?! அடுத்ததாக யோவான் சொல்வது இந்த பிரச்சனை விவரிக்கிறது: “நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.”
தேவ சமூகத்தில் நம்முடைய இருதயங்கள் நம்மை குற்றவாளிகளாக தீர்க்கும் என்று யோவான் முன்னறிந்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். இது போன்ற கடிந்து கொள்ளுதலை நான் அறிவேன். இவ்விதமான அனுபவங்களால் நான் என் ஜெபத்தில் போராடி இருக்கிறேன். நம்மில் பெரும்பாலானார் போல, இப்பிரச்சினைகளை நான் எதிர்கொண்ட போது, என்னையும் அறியாமல் இந்த இரண்டு செயல்களை நான் செய்தேன்: முதலாவது தேவ செயலோட என்னுடைய உணர்வுகள் இணைந்து இருப்பதாக நினைத்தேன். என் இருதயம் என்னை குற்றவாளியாக தீர்த்த போது, தேவனே என்னை அப்படி தீர்ப்பதாக நினைத்தேன். இரண்டாவதாக, கிறிஸ்துவில் மட்டுமே நான் இந்த இடங்களில் நம்பிக்கையை அறிய முடியும் என்று நம்பி அவரிடம் இக்காரியங்களை கொண்டு வருவதற்குப் பதிலாக, நானே எனக்கு எதிராக மாறினேன். நான் போதுமான அளவு ஜெபிக்கவில்லை, அல்லது போதுமான அளவு கடினமாக ஜெபிக்கவில்லை, அல்லது என் வாழ்க்கை போதுமானதாக இல்லை என்று கருதினேன். எனக்கு ஜெபிக்கத் தெரியாது என்பதை தேவனுக்குத் தெரியும் என்பதையும், அவர் என் சார்பாக ஜெபிக்கிறார் என்பதையும் நான் மறந்துவிட்டேன்.
ஆனால் இந்த இடத்தில், யோவான் ஊக்குவிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். தேவன் பெரியவர். தேவன் அனைத்தையும் அறிந்திருக்கிறார். தேவன் உங்களுடைய இருதயங்களை காட்டிலும் பெரியவர். நம்முடைய இருதயங்கள் அநேக காரியங்களை தானாகவே செய்கிறது என்று யோவான் சொல்லுகிறார், ஆனால் அவைகள் தேவனைப் பற்றி உங்களுக்கு சொல்வதில்லை. யோவான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறார் உங்களுடைய இருதயம் உங்களை குற்றவாளிகளாக தீர்க்கும் போது, தேவன் உங்கள் இருதயங்களை காட்டிலும் பெரியவர் என்று, தேவன் உங்களை தனக்கு நேராக திரும்புகிறார். தேவன் அனைத்தையும் அறிவார் என்பதை உங்களுக்கு நினைவூட்ட யோவான் உதவுகிறார் – உங்கள் பாவங்களை உங்களை விட அதிகமாக அறிந்திருக்கிறார் – ஆனாலும் அவர் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்து முடித்ததினால் அவர் உங்களை தன்னிடத்திற்கு அழைக்கிறார். இதனாலேயே ஜெபம் எப்போதும் விசுவாசத்தினால் ஏறெடுக்கப்படுகிறது. நாம் சத்தியத்தைக் கேட்க வேண்டும், ஆனால் நாம் அதில் நடக்கவும் வேண்டும்.
நீங்கள் ஜெபிப்பதற்கு போராடி இருக்கிறீர்களா? உங்கள் இருதயம் சொன்னதே தேவன் சொன்னதாக நினைத்திருக்கிறீர்களா? அது என்னது? இவ்விடங்களில் தேவன் பெரியவர் என்பதை நீங்கள் எப்படி அறிகிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஜெபம் சில நேரங்களில் தனிமையாகத் தோன்றலாம். பெரும்பாலும், ஜெப நேரத்தில் நான் என் இதயத்தையும் ஆத்துமாவையும் அமைதிப்படுத்த முயற்சிக்கிறேன், என் மனம் எல்லா இடங்களுக்கும் ஓடுகிறது. சில நேரங்களில் நான் தூங்கிவிடுவேன். சில சமயங்களில் என் பிரார்த்தனைகள் உச்சவரம்பிலிருந்து குதிப்பது போல் உணர்கிறேன். அப்படியிருப்பினும், இந்த நேரங்களில் தான் தேவன் நற்செய்தியை வழங்குகிறார் என்பதை நாம் அடிக்கடி உணராமல் போகிறோம் ஜெபத்தைப் பற்றிய நற்செய்தியைக். அறிந்து கொள்ளும்படி சிறிது நேரம் செலவிடுவோம்.
More
