ஜெபம் மெய்யாகும் போதுமாதிரி

நாள் நான்கு
குற்றப்படுத்துதல் இல்லாமல் ஜெபித்தல்
நாம் மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியும் போது, நம்மால் நம்பமுடியாத சுதந்திரம் நம் இதயத்தில் எழுகிறது. நாம் சுதந்திரத்தை, உயிர்ப்பை உணர்கிறோம். ஆனால் நாம் எளிதாக அந்த இடத்தை விட்டு வெளியேறி ஒரு புதிய வகையான அடிமைத்தனத்தில் மாட்டிக் கொள்ளலாம். தேவன் நம்மை மன்னித்தார் என்று நாம் நம்பும் அதே வேளையில், அவர் நம்மில் ஆழ்ந்த ஏமாற்றம் அடைகிறார் என்று நம்மில் பலர் கருதுகிறோம். மீண்டும், குற்ற உணர்வும் அவமானமும் நம் இதயங்களில் எழுகின்றது, மேலும் நாம் உண்மையாக இருக்க முயற்சிக்கும் அதே வேளையில் பயத்துடனும் கவலையுடனும் போராடுகிறோம்.
இந்த இடத்தில்தான் நாம் ரோமர் 8:1 ஐக் கேட்க வேண்டும்: “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” ஆக்கினைத்தீர்ப்பில்லை. மன்னிக்கப்ட்டோம் என்றறிவதே சுதந்திரத்திற்கு வழிவகுக்குமென்றால், இனி ஆக்கினைத்தீர்ப்பு இல்லை என்றும் உணரும்போது எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் இது நம்மை எதிர்மறையான சுதந்திரத்திற்கு வழி நடத்துகிறது. இது நாம் என்ன வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரம் அல்ல. இது சட்டமில்லாத சுதந்திரம் அல்ல. இதுவே நம்மை நேர்மையாக வழிநடத்தும் சுதந்திரம்.
நம்முடைய ஜெபங்கள் நேர்மையற்றதாக இருந்தாலும், நாம் எவரும் நம்முடைய ஜெபங்களில் நேர்மையற்றவர்களாக இருக்க முயற்சிப்பதில்லை என்று நான் கருதுகிறேன். நாம் நமது எங்கள் பாவம், நமது எதிரப்புகள், நமது உடைந்த நிலை மற்றும் நமது போராட்டத்தைப் அறிந்திருக்கிறோம், அதன் உண்மையை நாம் பெயரிடவில்லை, ஆனால் அதை போக்க அல்லது அதை சரிசெய்ய தேவனிடம் கேட்கிறோம். அப்படி நாம் நம்முடைய பாவத்தைப் பார்க்கும்போது, நாம் எவ்வளவு உண்மையாக மன்னிப்பு கேட்கிறோம் என்பதை தேவனிடம் காட்டினால், ஒருவேளை அவர் நம்முடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில் மன்னிப்பு கேட்கிறோம். கிறிஸ்து இயேசுவில் இருப்பவர்களுக்கு இப்போது எந்த ஆக்கினைத் தீர்ப்பு இல்லை என்பதை மறந்துவிடுகிறோம், அதை ஏற்றுக்கொண்டு நம்மைப் பற்றிய உண்மையை அவருக்கு முன் கொண்டு வருவதற்குப் பதிலாக, அவருடைய கோபப் பார்வையில் இருந்து தப்ப நம்மை நாமே அடித்துக்கொள்கிறோம்.
இயேசு கிறிஸ்துவிற்குள் நமக்கு ஆக்கினைத் தீர்ப்பு இல்லை – இதனை உண்மையாகவே விசுவாசிக்க – நம்மை ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படுத்தும் அனைத்தையும் அவர் முன் கொண்டுவந்து அவருடைய பாதத்தில் வைப்பதே தீர்வு. இது போன்ற உண்மைகளை நாம் வெறுமனே உறுதிப்படுத்த முடியாது, அவற்றை நாம் சோதிக்க வேண்டும். இரட்சிப்பு என்பது கிறிஸ்துவில் மட்டுமே உள்ள விசுவாசத்தால் மட்டுமே என்று நாம் உண்மையிலேயே நம்புகிறோமா என்று சோதிக்க வேண்டும். உண்மையில் ஆக்கினைத் தீர்ப்பு இல்லை என்பதை நாம் சோதிக்க வேண்டும். நம்மை முழுவதுமாக தேவனிடம் சமர்ப்பித்து இவற்றை நம்புகிறோமா என்று சோதிக்க வேண்டும்.
தேவனிடம் எந்த உண்மையைக் கொண்டு வர நீங்கள் போராடுகிறீர்கள்? தேவன் உங்களிடமிருந்து இதை நீக்க முடியாது என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்? உங்கள் கோபம், காமம், பொறாமை அல்லது உங்கள் அசுத்தமான உணர்வு, கண்டனம் அல்லது பயம் இவற்றில் எது? இயேசு உங்களுக்காக ஜெபிப்பதை நீங்கள் பார்த்தால் எப்படி இருக்கும், கடந்த காலத்தில் அல்ல, ஆனால் இவற்றை நீங்கள் அனுபவிக்கும் நிகழ்காலத்தில்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஜெபம் சில நேரங்களில் தனிமையாகத் தோன்றலாம். பெரும்பாலும், ஜெப நேரத்தில் நான் என் இதயத்தையும் ஆத்துமாவையும் அமைதிப்படுத்த முயற்சிக்கிறேன், என் மனம் எல்லா இடங்களுக்கும் ஓடுகிறது. சில நேரங்களில் நான் தூங்கிவிடுவேன். சில சமயங்களில் என் பிரார்த்தனைகள் உச்சவரம்பிலிருந்து குதிப்பது போல் உணர்கிறேன். அப்படியிருப்பினும், இந்த நேரங்களில் தான் தேவன் நற்செய்தியை வழங்குகிறார் என்பதை நாம் அடிக்கடி உணராமல் போகிறோம் ஜெபத்தைப் பற்றிய நற்செய்தியைக். அறிந்து கொள்ளும்படி சிறிது நேரம் செலவிடுவோம்.
More
