சலிப்புற்ற உலகம் களிகூறுகிறது: 2020 வருகையின் தியானம்மாதிரி

நாள் 4: மேய்ப்பர்கள்
நள்ளிரவில் தன்னந்தனியான ஒரு கடற்கரையில் நீங்கள் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள்.
மென்மையான, குளிர்ச்சியான கடற்கரை மணலில் நடக்கிறீர்கள், உங்களைச் சுற்றியுள்ள இருளில் பார்ப்பதற்கேற்ப மாறிக்கொள்ள உங்கள் கண்களுக்கு சிறிது நேரம் தேவைப்படும். சுற்றிலும் தெருவிளக்குகள் இல்லை, எண்ணெய் விளக்குகள் இல்லை, மின்கல விளக்குகள் இல்லை. ஆனால் வானத்தை அண்ணாந்துபார்த்து பிரமித்து நிற்கிறீர்கள், எண்ணற்ற விண்மீன்களின் அழகும், பிரகாசமும் உங்களை மெய்மறக்கச்செய்கிறது. ஏனெனில் எந்தவொரு செயற்கை வெளிச்சமும் அவைகளை மங்கப்பண்ணுவதற்கு அங்கே இல்லை, அந்த விண்மீன்கள் இதற்குமுன் ஒருபோதும் நீங்கள் பார்த்திராத வகையில் பிரகாசமாகவும், தெளிவாகவும் இருப்பதாகத் தோன்றுகின்றன.
நம்மை சுற்றிலும் எப்பொழுதும் காணப்படும் வெளிச்சத்தைப் பார்ப்பதற்கு சில நேரங்களில் நாம் முழு இருளில் இருக்கவேண்டியதிருக்கும். அப்பொழுது தூரத்தில் இருப்பவைகளெல்லாம் தெள்ளத்தெளிவாகத் தெரியும்.
இப்பொழுது, கர்த்தருடைய தூதன் வந்த அந்த இராத்திரி வேளையில், காரிருளில் நின்றுகொண்டிருந்த மேய்ப்பர்களைக் கற்பனை செய்யுங்கள். அநேகமாக அவர்கள் கொட்டாவி விட்டுக்கொண்டு, தங்களுடைய மந்தையை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக இருண்டப் பகுதிகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்திருப்பார்கள். இரவுநேர வானம் மட்டுமே அவர்களுடைய ஒரே ஒளிமூலமாக இருந்ததினால், அவர்களுடைய கண்கள்கூட அந்த அடர்ந்த இருளில் பார்ப்பதற்கேற்ப மாறி இருந்திருக்கும்.
கர்த்தருடைய தூதன் வந்து நின்றபோது, “கர்த்தருடைய மகிமை அவர்களைச் [மேய்ப்பர்களை] சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்."(லூக். 2:9) என்று வேதம் சொல்லுகிறது. தேவதூதர்களுக்கும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்திற்கும் இடையில் மேய்ப்பர்கள் நின்றார்கள் என்று அறிகிறோம்.
பொதுவாக அந்நாட்களில் இந்த “சுத்தமில்லாத” கீழ்குலமக்கள் சமுதாயத்திலிருந்தே விலக்கிவைக்கப்பட்டிருந்தனர், ஆனால் இப்பொழுது அவர்கள் திடீரென முக்கியப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் பார்க்கப்பட்டார்கள். மேசியாவின் பிறப்பினைக் குறித்த செய்தி தங்களுக்கு வரும் என்பதை அவர்கள் அநேகமாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அல்லது தேவ ஆட்டுக்குட்டியானவரின் வருகையை அறிவிக்க தேவன் மேய்ப்பர்களை பயன்படுத்துவார் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
தேவன் சாமானிய மக்களோடு பேசினார். ஒரு அற்பமான கன்னிப்பெண்ணோடு பேசினார். அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கைத்தொழிலாளியோடு பேசினார். தீண்டத்தகாத மேய்ப்பர்களோடு பேசினார். இத்தகைய சாதாரண மக்களே யாரும் எதிர்பாரா விதத்தில் அவருடைய தூதரானார்கள்.
சில வருடங்களுக்குப் பின்பு, அந்நாட்களில் மிகச்சாதாரண மக்களாகக் கருதப்பட்டப் பெண்களே இயேசுவின் உயிர்ம்தெழுதல் செய்தியை அறிவிக்கத் தெரிந்தெடுக்கப்பட்டனர். நீங்கள் மிகச்சாதாரணமான ஒரு நபராய் இருக்கலாம், ஆனால் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நம்முடைய இரட்சகரை அறிவிக்க தேவன் உங்களைப் பயன்படுத்தமுடியும்! இந்த இருண்ட, சலிப்புற்ற உலகத்தினூடாக ஊடுறுவிச்செல்லும் ஒளியைக் கொண்டுவர தேவன் உங்களைப் பயன்படுத்த முடியும்.
சிந்தனைக்கான கேள்விகள்:
- நீங்கள் கடைசியாக எப்பொழுது தேவசெய்தியைக் கேட்டீர்கள்? யார் அந்த செய்தியை உங்களுக்குச் சொன்னார்கள்?
- நீங்கள் ஒரு பட்டணவாசியாய் இருந்து, இயேசுவின் பிறப்பை ஒரு மேய்ப்பன் மூலமாய்க் கேள்விப்பட்டிருந்தால், உங்கள் செயல்பாடு எப்படி இருந்திருக்கும்?
- தம்முடைய இராஜ்யத்தை இவ்வுலகிற்குக் கொண்டுவர தேவன் சாமானிய மக்களைப் பயன்படுத்துகிறார். இவ்வுண்மை இந்த வாரத்தில் உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

அட்வெந்து காலம் பொதுவாக மகிழ்ச்சியையும், கிறிஸ்துமஸ் பாடல்களையும் கொண்டுவரும், ஆனால் இந்த வருடம் உங்களுக்குக் கடினமானதாயிருக்கலாம். இந்த 5-நாள்திட்டத்தில், இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் காட்சியில் வரும் கதாபாத்திரங்கள் எவ்வாறு தங்களின் சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவசித்தம் செய்தனர் என்பதையும், அவர்களுடைய கதைகள் எவ்வாறு உங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.
More