சலிப்புற்ற உலகம் களிகூறுகிறது: 2020 வருகையின் தியானம்மாதிரி

The Weary World Rejoices: A 2020 Advent Devotional

5 ல் 1 நாள்

முன்னுரை: ஒரு வினோதமான காலம்

“ஓ தூய இரா,” என்ற ஒரு பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலில் வரும் “நல்நம்பிக்கையில் களிகூறுவோமே! அதோ தோன்றுதே விடியற்காலையே” என்ற வரி இந்த வருடம் உங்கள் காதுகளில் எதிரொலித்திருக்கும்.

அட்வெந்து காலத்தில் நாம் நுழையும் இவ்வேளையில், நீங்கள் சோர்வாய் இருக்கிறீர்களா? நீங்கள் தனிமையாக இல்லை.

அட்வெந்து காலத்தை நெருங்குகையில் சோர்வாகவும், அசதியாகவும் இருப்பதென்பது இயல்பானதே என்றுகூட நீங்கள் சொல்லலாம். ஏனெனில் இருள் நம்மை சூழ்ந்துகொள்ளும் போது, கஷ்டங்கள் வரும்போது, கிறிஸ்துமஸின் நம்பிக்கை வெகுதூரம் இல்லை என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காகவே அட்வெந்து காலம் வருகிறது. 

இந்த நம்பிக்கை தூரத்தில் இருப்பது போல் தோன்றலாம். இந்த வருடத்தில் நம்பிக்கையுடன் இருப்பதென்பது முடியாதது என்றுகூட உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில், நீங்கள் உங்கள் வேலையை இழந்திருக்கக்கூடும். அல்லது நீங்கள் நேசிப்பவர்களிடமிருந்து தனிமையாக்கப்பட்டது போல் உணரலாம். உங்களுடைய குடும்ப நபர் அல்லது நண்பருடைய மரணத்தினால் கூட நீங்கள் துக்கித்துக் கொண்டிருக்கலாம். 

சுற்றிலும் பார்த்தால், இப்பொழுது நீங்கள் பார்க்கக்கூடியதெல்லாமே இருள்தான். நீங்கள் உங்கள் கண்களை சரிசெய்து, பார்க்க முயன்றாலும், வெளிச்சமே இல்லாதது போல்தான் இருக்கிறது. வியாதி, மரணம், அநீதி, மற்றும் வேதனையின் பாரங்கள் மிகப்பெரிய சுமையாகத் தோன்றுகின்றன.

அல்லது நீங்கள் களைப்படைந்திருக்கலாம். மரத்துப் போயிருக்கலாம். இந்த முழு கிறிஸ்துமஸ் கால சந்தோஷத்தையும் மறுபடியும் அடுத்த வருடத்தில் வைத்துக்கொள்ள முயற்சிக்கலாம். குற்றவுணர்வு கொள்ளாதீர்கள். பதிலாக, இந்த உலகத்தின் உண்மையான இருளை ஒத்துக்கொள்ளுங்கள், அட்வெந்து காலத்தை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மேசியாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மக்களின் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கும் கண்களைப் பெறுவீர்கள்.

தங்களுடைய கடைசி தீர்க்கதரிசியான மல்கியாவிற்குப் பிறகு 500 வருடங்களாக, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய மீட்பரைக் குறித்து எதையுமே தேவனிடமிருந்து கேட்கவில்லை. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாகிய அவர்கள், தங்களுடைய நம்பிக்கை மற்றும் இரட்சிப்பு வருவதற்கு எவ்வளவு காலமாகும் எனக் கேட்டு, அவரை நோக்கிக் கூப்பிட்டிருந்திருக்க வேண்டும். அது மிகுந்த இருண்ட காலமாயிருந்தது, தேவன் மௌனமாயிருப்பது போல் தோன்றியது. அதேவிதமாக இந்த வருடம் தேவன் உங்களுக்கும் தோன்றுகிறாரா? 

அவர் தூரத்தில் இருப்பதுபோல அவர்களுக்குத் தோன்றினாலும், தேவன் அவருடைய ஜனங்கள் நினைப்பதைக் காட்டிலும் மிக அருகாமையிலேயே இருக்கிறார். எதிர்பாராத வேளையிலான இயேசுவின் வருகையை நிதானமாக திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார். 

அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு, இயேசுவின் பிறப்பு காட்சியில் வரும் கதாபாத்திரங்களை நான்கு விதமான கோணங்களில் நாம் தியானிப்போம். இந்த கதைகளின் மூலமாக, சில அற்புதமான ஆனால் வினாதமான மற்றும் அச்சம் நிறைந்த சூழ்நிலைகளின் மத்தியில் இந்த கதாபாத்திரங்கள் எவ்வாறு தேவசித்தம் செய்தார்கள் என்பதையும், அதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொள்ளலாம் என்பதையும் கண்டறியப் போகிறீர்கள்.

சிந்தனைக்கான கேள்விகள்:

  • இந்த அட்வெந்து காலம் கடந்த வருடங்களை விட எவ்வாறு வித்தியாசமானது?
  • தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்குக் காத்திருக்கையில் பொறுமையுடனிருப்பது கடினமாயிருக்கிறதா? ஏன் அப்படி இருக்கிறது?
  • இயேசுவின் பிறப்பு காட்சியை நினைக்கும்போது எந்தெந்த கதாபாத்திரங்கள் உங்கள் நினைவுக்கு வருகின்றன?


வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

The Weary World Rejoices: A 2020 Advent Devotional

அட்வெந்து காலம் பொதுவாக மகிழ்ச்சியையும், கிறிஸ்துமஸ் பாடல்களையும் கொண்டுவரும், ஆனால் இந்த வருடம் உங்களுக்குக் கடினமானதாயிருக்கலாம். இந்த 5-நாள்திட்டத்தில், இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் காட்சியில் வரும் கதாபாத்திரங்கள் எவ்வாறு தங்களின் சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவசித்தம் செய்தனர் என்பதையும், அவர்களுடைய கதைகள் எவ்வாறு உங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக வைகிளிப்ஃ மொழிபெயர்ப்பாளர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு, https://www.wycliffe.org/ என்ற இணையதளத்தை அணுகவும்.