கைவிடப்படவில்லை: ஒரு சரியான தந்தையின் மகன்கள் மற்றும் மகள்களாக சுதந்திரத்தைக் கண்டறிதல்

தியானத்திற்கு

நாள் 1:

“அப்பா, என்னைப் பாருங்கள்!”

குழந்தையாக இந்த சொற்றொடரை - அல்லது இதே போன்ற ஒன்றை நீங்கள் கூறியிருக்கலாம். இது குழந்தைகளுக்கான ஒரு வகையான உலகளாவிய மொழியாகும், இது தன் அப்பவால் காணப்பட வேண்டும், அங்கீகரிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற குழந்தைகளின் உள்ளார்ந்த ஏக்கத்தின் வளிப்பாடு. அது டைவிங் போர்டு மூலம் பின்-டைவ் அடிப்பதாக இருந்தாலும், அல்லது அறிக்கை அட்டையின் முதல் மதிப்பெண் போன்றவையாக இருந்தாலும் சரி, "நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று அவர் சொல்வதைக் கேட்க குழந்தைகளாக நாம் ஏங்கினோம்.

டாக்டர். பெக்கி ட்ரெக்ஸ்லர் இந்த ஏக்கத்தைப் பற்றி ஒரு உளவியல் ஆய்வில், இன்றுள்ள 75 சாதிக்கும் பெண்களைப் பற்றி எழுதினார். "அவர்களின் வாழ்க்கை எவ்வளவு வெற்றிகரமாக இருந்தாலும், அவர்களின் திருமணங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும், அல்லது அவர்களி் வாழ்க்கையை எவ்வளவு நிறைவேற்றினாலும், பெண்கள் தங்கள் தந்தையின் எதிர்விளைவுகளின் வடிகட்டியைக் கடந்து தங்கள் மகிழ்ச்சியை என்னிடம் சொன்னார்கள் .... தந்தைகள் புறக்கணிக்கப்பட்டஅல்லது துஷ்பிரயோகம் செய்த பெண்களுக்கு கூட, அங்கீகரிக்கப்பட,ஒப்புதலுக்கான ஒரு பசி, இருக்க கண்டேன். ”என எழுதினார்.

மனிதன் போதும் (Man Enough) என்ற தனது புத்தகத்தில், டாக்டர் ஃபிராங்க் பிட்மேன் ஆண்களில் ஒப்புதலுக்கான இதே பசியை விவரிக்கிறார்: “பெரும்பாலான சிறுவர்களுக்கும் பல வளர்ந்த ஆண்களுக்கும் வாழ்க்கை என்பது பாதுகாப்பு, ஏற்பாடு, வளர்ப்பு, மாடலிங் அல்லது குறிப்பாக அபிஷேகம், ஆகிய இவற்றை, இழந்த தன் தகப்பன் விட்டு சென்றதை, வெறுப்புடன் தேடுதலே. ”

“அபிஷேகம்” என்ற சொல் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆசீர்வதக்கப்பட்ட… அங்கீகரிக்கப்பட்டதைக குறிக்கிறது. இது நம் உள்ளார்ந்த மனதில் உள்ள ஒன்றைக் குறிக்கிறது, இது ஒரு தந்தையின் ஒப்புதலையும் புகழையும் நாம் அனைவரும் பெற ஏங்கும் மனதின் தன்மையை உணர்த்துகிறது.உங்கள் வாழ்க்கையில் அந்த ஆசீர்வாதம் இருந்திருக்கலாம். அது இருந்தால், உங்கள் தந்தையிடம் நீங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக ருக்கிறீர்கள் என்று சொல்ல முடிந்தால் இன்று ஒரு கணம் எடுத்துக் கொள்ளுங்கள்! அது இல்லையென்றால், நீங்கள் தனியாக இல்லை. யு.எஸ். சென்சஸ் பீரோவின் கூற்றுப்படி, இன்று நான்கு அமெரிக்க குழந்தைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் தந்தை இல்லாமல் வாழ்கின்றனர். பல சந்தர்ப்பங்களில், ஒரு தந்தையை விவரிக்க நாம் தேர்ந்தெடுக்கும் கடைசி சொற்களாக “போற்றுதல்,” “ஒப்புதல்” அல்லது “உறுதிப்படுத்துதல்” இருக்கும். நம் மனதில் விரைந்து செல்லக்கூடிய சொற்கள்:

இல்லை.கோபம்.தவறு.தனிமை.

இந்த தலைமுறைக்கு “தந்தை இல்லாதவர்” என்று பெயரிடப்பட்டதில் ஆச்சரியமில்லை.

ஆனால் இன்று நம் அனைவருக்கும் நல்ல, நல்ல செய்தி உள்ளது. உங்கள் பூமிக்குரிய தந்தையின் தன்மை அல்லது அவருடனான உங்கள் உறவின் நிலை துவாக இருந்தாலும், உங்களுடன் ஒரு முழுமையான உறவில் இருக்க விரும்பும் ஒரு சரியான தந்தை இருக்கிறார். நீங்கள் ஏற்கனவே அவருடைய பாசங்களைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஏற்கனவே அவரது அன்பினை வைத்திருக்கிறீர்கள். அவர் தனது ஆசீர்வாதத்தால் உங்களை பொழிய காத்திருக்கிறார். உங்கள் பூமிக்குரிய அப்பா எவராக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்களோ அனைத்துமே அவர்தான்.

அடுத்த ஐந்து நாட்களில், அவருடைய அன்புக்குரிய மகன்கள் மற்றும் மகள்களாக நாம் எவ்வாறு சுதந்திரத்தைக் காணலாம் என்பதைக் காண்போம்.
 
நாள் 1