திட்ட விவரம்

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்மாதிரி

Finding Peace

17 ல் 10 நாள்

மன நிறைவுடன் வாழ கற்றுக்கொள்வோம்


உங்கள் வாழ்வின் நோக்கம் யேசு கிருஸ்துவாக இருந்தால் மட்டுமே உங்களால் முழுமையான மன நிறைவுடன் வாழ முடியும்.



குறிப்பிட்ட பிரச்சனைகளும் சூழ்நிலைகளும் என் தூக்கத்தை கெடுத்த சில நாட்கள் என் வாழ்விலும் உண்டு. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையையோ உரையாடலையோ விமர்சனத்தையோ பற்றி நினைப்பதிலிருந்து வெளிவர இயலாத சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் கண்டுப்பிடித்தும் இருக்கிறேன், அது என்னவெனில் படுக்கையிலிருந்து எழுந்து, முழங்கால்களில் நின்று, கர்த்தரை நோக்கி "கர்த்தாவே தயவாய் எனக்கு இதைக்கடக்க உதவும். உம்மை மட்டுமே நோக்கி பார்க்க எனக்கு உதவும்” என்று ஜெபிப்பது தான்.



நான் தேவனையும் இச்சூழ்நிலையில் அவர் விரும்பும் காரியத்தை செய்வதைப்பற்றியும் நினைக்கும் போது எனக்கு நிம்மதியும் தூக்கமும் வரும். மற்றவர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள், என்னவெல்லாம் நடக்க கூடும் அல்லது வரவிருக்கும் சோதனைகளை பற்றின சிந்தனைகளுக்கு நேராய் என் கவனத்தை திருப்பும் போது என் தூக்கம் கெடும். ஒன்று, தேவனையும் அவரது அளவற்ற ஆசீர்வாதங்களையும், பாதுகாப்பையும், அன்பையும் எண்ணி பாருங்கள் அல்லது உங்கள் நன்மைகளை கெடுக்கவும் உங்கள் வாழ்வை அழிக்கவும் முயலும் சூழ்நிலைகளையும் மக்களையும் எண்ணிப்பார்த்து உங்கள் உள்ளங்களை வெறுப்பினால் நிறைத்துக்கொள்ளுங்கள்.



தேவனை பற்றிய எண்ணங்கள் ஒரு மனிதனுக்கு சமாதானத்தை தரும். மற்ற எண்ணங்கள் பொதுவாக பதற்றத்தையும் பயத்தையும் கவலையையும் தருபனவாகவே அமையும்.



நீங்கள் தேவனை நோக்கும்போது, அவர் அச்சூழலில் உங்களோடு அந்த நிமிடம் இருக்கிறார் என்பதை நீங்கள் உணர்த்துவதும் அவசியம். அநேக மக்கள் தேவன் வெகு தூரத்தில் இருப்பதாக எண்ணுகின்றனர். அவர்கள் வாழ்வின் தற்போதய தேவைகளுக்கு அணுகத்தக்க ஒருவராக தேவனை காண்பதில்லை. உண்மை என்னவெனில், அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நம்மோடு இருக்கிறார் என்பதுதான்.



கலிலேய கடல் தான் நான் கண்டதிலேயே மிகவும் அமைதியான இடம். சில வருடங்களுக்கு முன்பு, சமாதானம் மற்றும் அமைதியின் அர்த்தமாக எனக்கு தோன்றிய அக்கடலிற்கு அருகில் இருந்தேன். எப்படியும் இன்றைய உலகில், அநேகர் அவ்விடத்தை அமைதலான இடமாக காண்பதில்லை. அங்கிருந்து சில மைல் தூரத்தில் தன் சிரியா தேசமும் லெபனானும் அமைந்திருக்கின்றன. பொதுவாக மக்கள் இஸ்ரேல் தேசத்தை கிட்டத்தட்ட சமாதானமே இல்லாத ஒரு இடமாக காண்கிறார்கள்.



ஆனால் நான் அங்கு அதீத சமாதானத்தை உணர்ந்தேன், ஏனெனில் நான் அங்கு தேவனை உணர்ந்தேன், அவரது பிரசன்னத்தை அங்கு உணர்ந்தேன்.



என் கண்களை மூடிக்கொண்டு, கலிலேய கரையில் தேவன் என்னோடு நடப்பதை காண்பது சுலபம். அத்தோடு, உலகில் நான் கண்ட அணைத்து அழகிய இயற்கை சூழலிலும் தேவன் என்னோடு நடப்பதைக்கற்பனை செய்வதும் சுலபமான காரியம் தான்.



சமாதானத்தை தருவது இச்சூழல்கள் அல்லவே. இச்சூழல்களில் இருக்கும் போது தேவன் என்னோடு இருக்கிறார் என்ற என் இருதயத்தின் நினைவே எனக்கு சமாதானத்தை தருகிறது. "என்னோடிருக்கும் தேவன்" என்பதை என் வாழ்வின்இன்னல்களுக்கு மத்தியில் காட்சிப்படுத்திப்பார்ப்பது அவசியமாகிறது.



நண்பர்களே, நீங்கள் எங்கு இருந்தாலும் எச்சூழலில் நின்றாலும் எந்நேரத்திலும் கிறிஸ்துவே உங்கள் சமாதானத்தின் மூலதனம். தேவன் உங்களோடு நடப்பதை காணுங்கள். அவரின் பிரசன்னத்தை உணருங்கள். அவரின் மகத்துவத்தையும் உங்கள் வாழ்வின் மீது அவருக்கு இருக்கும் அதிகாரத்தையும் அறியுங்கள். நீங்கள் விசுவாசத்தினால் யேசுவோடு ஒரு தனிப்பட்ட உறவைத்தொடங்கி அவரின் பிரசன்னத்தை உணர்ந்து அவர் உங்களுக்கு தர கூடிய நன்மைகளை நம்பி வாழும் போது, நீங்கள் மெய்யான சமாதானத்தை உணருவது நிச்சயம்.






நீங்கள் இந்த நிலையில்லாத உலகின் போராட்டங்களோடு போராடிக்கொண்டு இருக்கிறீர்களா? இங்கு கிளிக் செய்து சமாதானத்தோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.




நாள் 9நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

Finding Peace

உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முட...

More

இந்த திட்டத்தை வழங்கிய "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://intouch.cc/peace-yv

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்