திட்ட விவரம்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்மாதிரி

Chosen: Remind Yourself Of The Gospel Everyday

7 ல் 3 நாள்

தேவனை நேசிக்கும்படி நம்முடைய ஆத்துமாக்களைப் பயிற்றுவிப்பதில் மிகப்பிரதான வழிகளில் ஒன்று நம்முடைய ஆத்துமாக்களுக்கு தேவசெய்தியைப் பிரசங்கிப்பதேயாகும். உங்கள் ஆத்துமா இயேசுவின் சிலுவைப்பாடுகளை அதிகம் பார்க்கப் பார்க்க, நன்றியுணர்வும், பயபக்தியும் உங்களுக்குள் அதிகமதிகமாய் பெருகுகிறதாய் இருக்கிறது. நீங்களும் அதைப்போல் தியாகம் செய்யும்படியாக மாற்றப்படுகிறீர்கள். இயேசு செய்த தியாகத்திலும் மேலான ஒன்றைக் கற்பனை செய்வதென்பது கடினமானது. 



நீங்கள் உலகப்பயணம் மேற்கொள்வீர்களானால், அநேகமாக உலகளாவில் எல்லாக் கலாச்சாரங்களிலும் எதிரொலிக்கும் ஒரு சொற்றொடர் சங்கீதம் 103:1 இலுள்ள எல்லோரும் அறிந்த ஒரு வரியான “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி.” என்பதாகும்.



இந்த சொற்றொடரைப் புரிந்து கொள்வோம். தாவீது தன்னுடைய ஆத்துமாவுக்குப் பிரசங்கிப்பதன் மூலம் அதற்குப் பயிற்சி அளிக்கிறான். தாவீது தேவசெய்தியை எவ்வாறு உணர்வது, அதை எவ்வாறு பிரதிபலிப்பது என்பதைத் தன் ஆத்துமாவுக்கு இவ்வாறு சொன்னான்: "ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி". அவன் இந்த அருமையான வரியை வெறுமனே பாட மட்டும் செய்யவில்லை; அவன் தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தான், செயல்படும்படிக்குத் தன் ஆத்துமாவுக்கு அறை கூவல் இடுகிறான். வேதம் இந்தப் பழக்கத்தை இவ்வாறாக விவரித்துச் சொல்கிறது, “தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்” என்று (1 சாமுவேல் 30:6). 



இது ஒரு அருமையான ஒழுங்குமுறை, ஆனால் இது உண்மையாகவே கிறிஸ்தவத்தில் இல்லாமல் போய்விட்ட ஒன்றாகிவிட்டது. உங்களுடைய தற்போதைய மனநிலை, மாறுகின்ற கலாச்சாரம், உங்களை சுற்றியுள்ள மக்கள், அல்லது, இன்னும் படுமோசமாக, சமூக ஊடகங்கள் இவைகளில் சிக்கி உழல்வதற்குப் பதிலாக, சிலுவையையும், உயிர்த்தெழுதலுதலையும் நோக்கிப்பார்க்கும்படிக்கு உங்கள் ஆத்துமாவுக்குச் சொல்லுங்கள். உங்கள் பாவத்தின் பாரத்தை தம்முடைய காயப்பட்ட, நொறுக்கப்பட்ட தோள்களில் சுமந்து சென்ற கிறிஸ்துவின் அளவற்ற அன்பினைப் பருகும்படிக்கு உங்கள் ஆத்துமாவுக்குக் கட்டளையிடுங்கள். 



சிலநேரங்களில் தேவனை நோக்கிப் பார்க்கும்படிக்கு நீங்கள் உங்கள் ஆத்துமாவை உண்மையாகவேக் கட்டாயப்படுத்த வேண்டியிருக்கும். யோவான்ஸ்நானன் இப்பிரபஞ்ச மக்களைப் பார்த்து "இதோ!" அல்லது "நோக்கிப் பாருங்கள்!" என்று சத்தமிட்டுக் கூப்பிடுகிறான். “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” (யோவான் 1:29) என்று சொல்கிறான். இது ஒரு அனுதின கட்டளை. நாம் கட்டாயம் பார்க்க வேண்டும்! உங்களுக்குத் தகுதியே இல்லாத நீதியில் நீங்கள் மகிழ்ந்து களிகூரும்படிக்கு, தாம் ஒருபோதும் செய்திராத பாவத்திற்காக வெகுபாடுபட்ட இயேசுவின் சிலுவையை நோக்கிப் பாருங்கள். 



அவ்வாறு செய்யும்போது தேவசெய்தி நம்டைய ஆத்துமாக்களுக்கு அனுதின உணவாகிறது, நம்முடைய இருதயங்களைப் பலப்படுத்துகிறது. நம்முடைய ஆத்துமாக்கள் முட்காயமடைந்த இயேசுவின் முகத்திலிருந்து வழிந்தோடும் இரத்தத்தைப் பார்க்கும்போது குற்றம் காண்பது, சுய பரிதாபப்படுவது, அல்லது பயத்தினால் நிறைந்திருப்பது போன்றவைகள் நமக்குத் தூரமான காரியங்களாகின்றன. இதை நாம் நாள் முழுவதும் செய்யும்போது நன்றியுணர்வு தானாகவே நம்முடைய இருதயங்களை நிரப்புகிறது. 


நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Chosen: Remind Yourself Of The Gospel Everyday

ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழ...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக Think Eternity க்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு https://www.thinke.org என்ற இணைய தளத்தை அணுகவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்