திட்ட விவரம்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்மாதிரி

Chosen: Remind Yourself Of The Gospel Everyday

7 ல் 2 நாள்

என்னுடைய நண்பர் ரையன் “சீனாவின் ஹார்வர்டு” எனப்படும் பீய்ஜிங் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய திரு. பீ்ய் என்பவருடைய கதையைப் பகிர்ந்துகொள்கிறார். அவர் ஒருமுறை பொதுவுடைமைக் கட்சியைப் பற்றி வகுப்பறையில் மாணவர்களிடம் ஒரு நகைச்சவை பண்ணினார். மாணவர்களில் ஒருவன் இதைக் காவல்துறையினரிடம் சொல்லிவிட்டான். மறுநாள் அதிகாரிகள் திரு. பீய் அவர்களுடைய அலுவலகத்திற்குள் சரமாரியாக நுழைந்து, எந்த ஒரு எச்சரிக்கையோ, விசாரணையோ இல்லாமல் அவரை வெகுதூரத்திலுள்ள, மிகக்குளிரான ஒரு கம்யூனிசச் சிறைக்கு கொண்டு சென்றனர். 



அவர் அன்று காலையில் எழும்பும்போது உலகில் மிகவும் மதிப்பிற்குரிய கல்வித் துறைப் பதவிகளில் ஒன்றான விரிவுரையாளர் என்ற பதவியில் இருந்தார். சூரியன் அஸ்தமிப்பதற்குள் ஒரு சிறைக் கைதியானார். சீனாவிலுள்ள சிறைகள் அந்த சமயத்தில் உலகிலுள்ள மிக மோசமான இடங்களில் சிலவாக இருந்தன. திரு. பீய் மிக விரைவில் மனச்சோர்வடைந்தார், விரக்தியில் மூழ்கினார். வாரங்கள் செல்லச் செல்ல அவருடைய மனச்சோர்வு தற்கொலை பற்றிய சிந்தனைகளுக்கு வழியூட்டியது. ஒரு நாள் மத்தியான வேளையில், சோகத்தில் மூழ்கினவராய், எட்டாவது மாடியிலுள்ளத் தன்னுடைய சிறைச்சாலை அறையின் ஐன்னலுக்கு வந்தார். சீனர்கள் சிறைச்சாலை அறைகளின் மேல்த்தளங்களில் ஐன்னல்கள் வைப்பதில்லை. சிறைக்கைதி கீழே குதித்துத் தன்னை மாய்த்துக் கொள்ள எண்ணினால், அதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது. 



வெளியே எட்டிப் பார்த்து, குதிக்க நினைத்த போது திரு. பீய் அவர்களுடைய இருதயம் வேகமாக ஓட ஆரம்பித்தது. அப்பொழுதுதான் இது நடந்தது. “போகாதே”, “போகாதே”, “போகாதே” என்று சொல்லுகிற ஒரு மெல்லிய சத்தத்தை அவர் கேட்டார். தன்னுடைய சிறைச்சாலை அறையின் நடுவில் நம்பிக்கை இழந்தவராய் உட்கார்ந்தார். 



அங்கே அந்த கடினமான கான்கிரீட் தளத்தின் மேலே, நினைவலைகள் அவர் உள்ளத்தில் ஓட ஆரம்பித்தது. ஒருமுறை அவருடைய நண்பர்களில் ஒருவரான, ஒரு கிறிஸ்தவ வெளிநாட்டு விரிவுரையாளர் சுவிசேஷத்தைப் பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டார். திரு. பீய், "இயேசுவே, நீர் உண்மையானால், தயவுசெய்து நீ்ர் வாக்குத்தத்தம் பண்ணினதாக என்னுடைய நண்பர் சொன்ன மன்னிப்பு மற்றும் சமாதானத்தை எனக்குத் தருவீராக. நீர் அப்படி செய்வீராகில், நான் என் வாழ்க்கையை உமக்கு அர்ப்பணித்து, உம்மை சேவிப்பேன்" என்று ஜெபம் பண்ணினார். 



அவர் மேலே பார்த்தவராய் சொன்னார், "வானம் ஒருபோதும் நீல நிறமாய் இருந்ததில்லை, சூரியன் ஜன்னலின் திறந்த துவாரத்தின் வழியாக ஒருபோதும் பிரகாசமாய் இருந்ததில்லை, ஆனால் என் இருதயத்திற்குள் நான் இதற்கு முன் ஒருபோதும் உணர்ந்திராத சந்தோஷம் பொங்க ஆரம்பித்தது." 



இந்த புகழ்பெற்ற விரிவுரையாளர் தன்னுடைய எல்லாக் கட்டுபாடுகளையும் உதறித் தள்ளி விட்டு "இயேசு கிறிஸ்துவுக்குள் எனக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு!" என்று மிகுந்த சத்தமிட்டு சொன்னார். காவலாளிகள் இதைக் கேட்டதும் அமைதியாய் இருக்கும்படி கடினமாக உத்தரவிட்டனர். ஆனால் அவருடைய சந்தோஷத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. காவலாளிகள் அறைக்குள் வந்து அவரை அடிக்கும் வரைக்கும் அவர் திரும்பத் திரும்பத் தொடர்ந்து இப்படி சத்தமிட்டுக் கொண்டேயிரு்தார். 



இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை விசுவாசித்ததினால் விடுதலையாக்கப்பட்ட ஒரு சிறைக்கைதி, நற்செய்தியை அறியாமல் சிறைக்கு வெளியே இருக்கும் ஒருவனை விட விடுதலையுள்ளவனாய் இருக்கிறான். 



இறுதியாக திரு. பீய் விடுதலை செய்யப் பட்டார், சீனாவின் உட்புறப் பகுதிகளில் அநேக அனாதை இல்லங்களைத் தொடங்கினார், ஏழைகளைப் பராமரித்தார், அநேகரைக் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார். இயேசு கிறிஸ்துவுக்குள் பிரகாசமான எதிர்காலம் அவருக்கு இருந்தது. இன்றும் நீங்கள் அவரை சந்திக்கும் போது அவருடைய சந்தோஷம் உங்களுக்கும் தொற்றுகிறதாய் இருக்கிறது. சிறையிலிருந்த நாட்களில் அவரிடம் இருந்த அதே சந்தோஷம் இந்நாள் மட்டும் இருப்பதாக அவர் உங்களிடம் சொல்லுவார். 



மனிதர்கள் அனைவருமே சில சமயங்களில் தங்களுடைய சுய சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், செயல்கள், விடாமல் தொடருகின்ற கடந்தகாலத் தவறுகள் போன்றவைகளில் சிக்குண்டு சிறையிலிருப்பது போல் உணருகிறார்கள். 



நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் சிறையே எல்லா சிறைகளிலும் மிகவும் மோசமானது என்று நற்செய்தி போதிக்கிறது. இந்த சிறையின் அறைகளெல்லாம் நம்முடைய பயங்கள், தெரிந்தே நாம் செய்யும் தவறுகள், ஏதோ ஒன்றைக் குறித்ததான தீராத மனஉளைச்சல் போன்றவைகளால் மூடப்பட்டிருக்கின்றன. நாம் இவைகளை நம்முடைய கழுத்துகளைச் சுற்றியுள்ள சங்கிலிகளைப் போல சுமந்து செல்கிறோம். இதுவே மனிதனின் நிலையாகும். 



ஏதாவது ஒன்று அதிரடியாக நடந்தால் மட்டுமே இந்த நிலை மாறும். 



நற்செய்தியே எல்லா வகையிலும் மிக அதிரடியானதாகும். இது இரத்தம் தோய்ந்த சிலுவை. இது நம் நிமித்தம் தேவனுக்கு ஏற்பட்ட மரணம். இது சர்வலோகத்துக்கும் தேவனுடைய அன்பையும் வல்லமையையும் காண்பிக்கும் பொருட்டு, மகிமையான உயிர்த்தெழுதலினாலே மரணத்திற்கே ஏற்பட்ட படுதோல்வி. 



ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். (எபி 2:1), விசேஷமாக நற்செய்தி குறித்தக் காரியங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வேதம் நமக்கு நினைவூட்டுகிறது. நீங்கள் பிரசங்கிக்கப் போகிற பிரசங்கங்களிலேயே மிக முக்கியமானது, "இயேசு கிறிஸ்துவுக்குள் எனக்குப் பிரகாசமான எதிர்காலம் உண்டு" என்பதை உங்கள் இருதயத்திற்கு தினமும் நினைவூட்டுவதே ஆகும். 


வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Chosen: Remind Yourself Of The Gospel Everyday

ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுந்ததும், தேவசெய்தியை உங்களுக்கு நினைவூட்டினால் என்ன நடக்கும்? இந்த 7- நாள் தியானம் அதைத்தான் செய்து உங்களுக்கு உதவ முயற்சிக்கிறது! நற்செய்தி நம்மை இரட்சிக்கிறது மாத்திரமல்ல, அது நம் வாழ்நாள் முழ...

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக Think Eternity க்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு https://www.thinke.org என்ற இணைய தளத்தை அணுகவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்