வாழ்க்கையின் புயல்களில் தேவனின் சத்தியத்தை கண்டுபிடித்தல்மாதிரி

Finding God's Truth In The Storms Of Life

10 ல் 4 நாள்

ஜெபத்தின் வல்லமை

நாம் சோதனைகளைச் சந்திக்கும் போது ஜெபம் செய்வதை ஒரு ஆபத்தானதாக உணரலாம். "நான் நினைக்கும் விதத்தில் கடவுள் என் ஜெபத்திற்கு பதிலளிக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்க நாம் ஆசைப்படலாம். "அவர் வந்து என் பிரச்சனைகளிலிருந்து என்னைக் காப்பாற்றவில்லை என்றால் எப்போது?" நம்முடைய இருண்ட தருணங்களில், ஜெபம் பயனற்றதாகத் தோன்றலாம், மேலும் கடவுள் கேட்கிறாரா என்று நாம் சந்தேகிக்க ஆரம்பிக்கலாம்.

ஆனால் 1 யோவான் 5:14-15 நாம் ஜெபிக்கும்போது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்ப்பார். அவருடைய சித்தத்தின்படி நாம் ஜெபித்தால், அவர் எப்பொழுதும் நம்முடைய நலன்களை மனதில் வைத்திருப்பதால் அவர் பதிலளிப்பார் என்பது நமக்குத் தெரியும்.

அந்த வசனங்களின் கடினமான பகுதி, கடவுளுடைய சித்தத்தின்படி ஜெபிப்பதற்கான விசுவாசத்தைக் கொண்டிருப்பதாகும். கடவுளுடைய சித்தம் என்னவென்று நமக்கு எப்போதும் தெரியாது, சில சமயங்களில் நமது சித்தம் நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் ஜெபம் என்பது அதுவல்ல. ஜெபம் நம்மை கடவுளுடன் இணைக்கிறது, மேலும் அந்த இணைப்பின் மூலம் சமாதானத்தைக் கண்டறிய உதவுகிறது. ஜெபம் நமது பிரச்சனைகளையும் போராட்டங்களையும் கடவுளிடம் ஒப்படைத்து, "இது இப்போது உங்களுடையது. என்னால் முடிந்ததை விட உங்களால் இதை சிறப்பாக கையாள முடியும்."என்று சொல்வதாகும்

நமது போராட்டங்களிலிருந்து விடுபடுவது கடவுளின் விருப்பத்தின் ஒரு பகுதி என்று நாம் அனைவரும் நம்புகிறோம், அது எப்போதும் அப்படி இருக்காது. நம்மைக் குணப்படுத்துவது அல்லது ஒரு சூழ்நிலையிலிருந்து நம்மைக் காப்பாற்றுவது என்பது கடவுளின் திட்டத்தில் இல்லாவிட்டாலும் கூட, ஜெபம் இன்னும் முக்கியமானது.

கடவுளிடம் நமது கவலைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்கும்போது, ​​​​அது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை கொண்டுவருகிறது மற்றும் நம் இதயங்களையும் சிந்தைகளையும் பாதுகாக்கிறது. எனவே இன்று, உங்கள் கவலைகளையும் கோரிக்கைகளையும் ஜெபத்தில் கடவுளிடம் கொட்டி விடுங்கள். மேலும் அவர் உங்களுக்கு பதில் அளிக்கும் சமாதானம் மற்றும் நம்பிக்கையில் மகிழ்ச்சி அடைக.

ஜெபம்: அன்புள்ள கடவுளே, ஜெபம் என்ற பரிசுக்கு நன்றி. எனது கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளுடன் நான் எப்போதும் உங்களிடம் வர முடியும் என்பதற்கு நன்றி. என் வாழ்க்கைக்கான உங்களின் நிறைவான திட்டத்திற்கு நன்றி. பயமும் சந்தேகமும் ஊடுருவும் போது என் இதயத்தையும் சிந்தையையும் பாதுகாப்பதாக நீங்கள் உறுதியளிக்கும் சமாதானத்திற்காக நான் ஜெபம் செய்கிறேன். எப்போதும் என்னைக் கவனித்துக்கொள்வதற்காக நன்றி. ஆமென்.

இந்த திட்டத்தைப் பற்றி

Finding God's Truth In The Storms Of Life

கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகின் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க படுவதில்லை. உண்மையில், பிரச்சனைகள் வரும் என்று யோவான் 16:33 உறுதியளிக்கிறது. நீங்கள் இப்போது வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த தியானம் உங்களுக்கானது. வாழ்க்கையின் புயல்களினுடாய் நமக்கு கிடைக்கும் நம்பிக்கையின் நினைவூட்டல் இது. இப்பொழுது நீங்கள் எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் வரும் சோதனைகளில் உங்களுக்கு உதவும் அடித்தளத்தை அது உங்களுக்கு வழங்கும்.

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக எலிசபெத் கிரேஸ் சாண்டர்ஸ்க்கு நன்றி செலுத்திக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு: https://www.worldhelp.net

சம்பந்தப்பட்ட திட்டங்கள்