திட்ட விவரம்

உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம்மாதிரி

God’s Plan For Your Life

6 ல் 6 நாள்

பயம் உங்களைத் தடைசெய்யாதிருப்பதாக.



உங்கள் வாழ்க்கையில் நிறைய முக்கியமான காரியங்கள் வரவிருக்கலாம். பட்டமளிப்பு, கல்லூரி, வாழ்க்கைப்பணி போன்ற பெரியவர்களுக்கான காரியங்கள் பல இருக்கலாம். இவைகளினால் நீங்கள் திணறுகிறதைப்போல் உணர்வது எளிதாயிருக்கிறது —உண்மையில், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்களே உணர முடியாதபடி இருப்பீர்கள்! 



யோசுவா இதே நிலைமையில்தான் இருந்தான். வேதாகமத்தில், மோசேதான் இஸ்ரவேலர்களுக்கு இருந்த ஒரே உண்மையான தலைவன். உண்மையிலேயே, அவன் எக்காலத்திற்கும் சிறந்தவன். யோசுவா மோசேயினுடைய உதவியாளனாயிருந்தான். பிறகு, மோசே இறக்கிறான், இஸ்ரவேலரை வழிநடத்திச்செல்லுகிற எல்லாப் பொறுப்பும் யோசுவாவின் மேல் விழுகிறது. ஏகப்பட்ட பிரச்சனை போல் தோன்றுகிறது, இல்லையா?



தேவன் யோசுவாவுக்குக் கட்டளையிடுகையில், அவர் இதை மூன்று வேறுவேறு சமயங்களில் சொல்கிறார்: 



“பலங்கொண்டு திடமனதாயிரு.”



யோசுவாவுக்கு முன்பதாக மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பது தேவனுக்குத் தெரியும். யோசுவா தன் மனதில் அநேகமாக பயத்தோடிருப்பான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், யோசுவாவோடுகூட தாம் இருக்கும்படியாக தனக்கு ஒரு திட்டம் இருப்பதும் தேவனுக்குத் தெரியும். அதனால்தான் யோசுவா பலங்கொண்டு திடமனதாயிருந்திருப்பான்—அவனுக்குத் தெரியும் தேவன் தன்னோடுகூட இருக்கிறார் என்பது. 



மிகவும் அருமையான செய்தி இதுவே: தேவன் உங்களோடு கூடவும் இருக்கிறார். வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்குள் நீங்கள் நுழையும்போது, யோசுவாவைப் போலவே நீங்களும் பலங்கொண்டு திடமனதாயிருக்கும்படி தேவன் விரும்புகிறார். 



படிப்பை முடிப்பது குறித்ததான பயமோ, கல்லூரிக்குப்போவது குறித்ததான பயமோ, அல்லது வாழ்க்கைப்பணியைத் தொடங்குவது குறித்ததான பயமோ, எதிர்பாராத ஒரு பிரச்சனையை சமாளிப்பது குறித்ததான பயமோ, அல்லது வெறுமனே எதிர்காலத்தைக் குறித்ததான பயமோ உங்கள் மனதிலே தோன்றும் பயங்கள் எதுவாயினும், தேவன் உங்களோடுகூட இருக்கிறார். நாம் நாள் 1 இல் பேசியது போல, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முழு திட்டவரைபடத்தையும் பெறமுடியாது. எப்படியிருப்பினும், அவருடைய திட்டங்கள் எப்பொழுதும் நம்முடைய சொந்தத் திட்டங்களைக் காட்டிலும் சிறந்தவைகள் என்பதை அறிந்திருப்பதால் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து தேவன்மேல் நம்பிக்கையாயிருக்க முடியும். 



இறுதியாக, தேவன் உங்கள்மேல் அக்கறையுள்ளவராயிருக்கிறார் மற்றும் நீங்கள் கிரகிப்பதற்கும் மேலாய் அவர் உங்களை நேசிக்கிறார் என்பதை அறிந்திருங்கள். நீங்கள் வாழ்க்கையில் என்ன நிலைமையிலிருந்தாலும், தேவன் உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை. வாழ்க்கை மாறும், ஆனால் தேவன் ஒருபோதும் மாறார், அவர் நம்மேல் வைத்த அன்பும் ஒருபோதும் மாறாது. ஆகையால் இதை நினைவில் கொள்ளுங்கள்: தேவனுடைய திட்டங்கள் எப்பொழுதும் தெளிவாக இல்லாமலிருக்கலாம், ஆனால் அது எப்பொழுதுமே நீங்கள் நினைப்பதற்கும், வேண்டிகொள்வதற்கும் மேலானதாயிருக்கும். இதை நீங்கள் உண்மையிலேயே அறிந்து, விசுவாசிக்கும்போது—நீங்கள் எதற்கும் ஆயத்தமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். 



மேலும் இதுபோன்ற தலைப்புகளைப் பற்றிய இலவச மூலாதாரங்களுக்கு, www.finds.life.churchஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

God’s Plan For Your Life

உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் என்ன? கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நம் அனைவரின் பொதுவான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால், நாம் நேர்மையாக இருந்தால், நம் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் மற்றும் நம்மைக் குறித்த அ...

More

இந்த திட்டத்தை வழங்கும் LifeChurch.tv க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்