திட்ட விவரம்

உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம்மாதிரி

God’s Plan For Your Life

6 ல் 4 நாள்

திட்டங்களைக் குறித்து எழுதப்படாத மூன்று விதிமுறைகள் 



இதை கற்பனை செய்யுங்கள்: நீங்கள் ஒரு புது சட்டை வாங்கியுள்ளீர்கள், அதை அணிந்துகொண்டு பள்ளி செல்லவேண்டும் என மிக ஆவலாக உள்ளீர்கள், ஏனெனில் உங்களுக்கு இப்பொழுதுதான் தெரிந்துள்ளது, இதுவே அந்த அழகான பையனோ அல்லது பெண்ணோ கடைசியாக உங்களைக் கவனிக்கும்படி செய்யும் காரியம் என்று. நீங்கள் அணியப்போகிற ஆடையைப் முடிவுசெய்து, எல்லாம் மிகச்சரியாகப் பொருந்துகிறதா என்று உறுதிசெய்து கொள்கிறீர்கள். நீங்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சோதனை இடியாய் தாக்குகிறது:—நீங்கள் நீண்டநாட்களாக ஆசை வைத்திருந்த அந்த நபர் உங்கள் மேஜையை நோக்கி வரும் வேளையில் பார்த்து நீங்கள் உங்கள் புது சட்டை முழுவதும் தக்காளி ஆணத்தை சிந்திவிடுகிறீர்கள்.



சிலநேரங்களில், வாழ்க்கை நாம் திட்டமிட்டபடி செல்வதில்லை.



வேதாகமத்தில், கிதியோன் என்னும் ஒரு மனிதனைப் பற்றி ஒரு கதையுள்ளது. கிதியோன் மனாசே கோத்திரத்திலுள்ள மிகஎளிய வம்சத்திலிருந்து வந்தவன் மாத்திரமல்ல, அவன் தன்னுடைய குடும்பத்திலேயே மிகவும் அற்பமாய் எண்ணப்பட்டவனாயும் இருந்தான். அவன் நிச்சயமாகவே தேவனால் தெரிந்தெடுக்கப்படும் சாத்தியமில்லாத மனிதன்தான். பிற்பாடு, தேவன் கிதியோனை, 38,000 பேர்களோடு, பகைஞர் கோத்திரமாகிய, மீதியானியர்களுக்கு எதிரான யுத்தத்தில் வழிநடத்துகிறார். அப்போது, தேவன் கிதியோனை நோக்கி அவனிடம் மிகுதியான போர்வீர்ர்கள் இருப்பதாகவும், அவர்கள் மீதியானியரை முறியடித்தால், தங்கள் கைகளே தங்களை இரட்சித்தது என இஸ்ரவேல் வீம்பு பேசுவதற்கு இடமாகும் என்றும் சொல்கிறார். ஆகையால், கிதியோன் 20,000 வீரர்களை திருப்பி அனுப்பிவிடுகிறான். ஜனங்கள் இன்னும் அதிகமாயிருப்பதாக தேவன் சொல்கிறார், ஆக இறுதியில், கிதியோனிடம் வெறும் 300 பேர் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள். வெறும் 300 வீரர்களைக் கொண்டு கர்த்தர் கிதியோனுக்கும், இஸ்ரவேலருக்கும் மீதியானியர் மேல் ஜெயத்தைக் கட்டளையிடுகிறார்—இது நிச்சயமாகவே கிதியோன் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தது அல்ல.



நம்முடைய எதிர்காலம் மற்றும் தேவன் நமக்காக வைத்திருப்பவைகளைக் குறித்து நாம் எண்ணிப் பார்க்கும்போது, அந்தக் காரியங்களெல்லாம் அவைகளைநாம் திட்டமிடுவதுபோல் எப்பொழுதும் நடக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். 



உண்மையில் சொன்னால், திட்டங்களைக் குறித்து நீங்கள் பின்பற்ற வேண்டிய எழுதப்படாத, மூன்று விதிமுறைகள் உள்ளன: 



1.) மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடுங்கள். வாழ்க்கையில் ஆரம்பம் என்பது ஒரு தொடர்கதையாகும். நீங்கள் நடுநிலைப்பள்ளியை முடித்தவுடன், உயர்நிலைப்பள்ளியை ஆரம்பிப்பதற்கான நேரம் வருகிறது. சரி, உயர்நிலைப்பள்ளியினுடைய சவால்களையும், சோதனைகளையும் நீங்கள் வென்றுவிட்டீர்கள் என்று நினைக்கும்வேளையில், கல்லூரிக்கு செல்வதற்கான ஆயத்தவேலைகளை ஆரம்பிப்பதற்கான நேரம் மற்றும் ஒரு உண்மையான முழுவளர்ச்சியடைந்தவர்ஆக இருப்பதற்கான நேரம் வருகிறது. உண்மை என்னவென்றால், இது ஒருபோதும் முடிவடைவதில்லை. மீண்டும் ஆரம்பிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். திட்டங்கள் மாறும்போது, அவைகளோடு இணைந்து செல்லுங்கள். தேவன் என்ன வைத்திருக்கிறார் என்பது ஒருபோதும் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் இப்போது இருக்கும் காலகட்டத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள்.



2.) இல்லையென சொல்லத் திட்டமிடுங்கள். சிலநேரங்களில், மிகச்சிறந்த காரியங்களுக்கு "ஆம்" என்று சொல்லும்படிக்குச் சிறந்தகாரியங்களுக்கு நாம் “இல்லை” என்று சொல்லவேண்டியிருக்கும். எல்லாக் காரியங்களையும் நாம் செய்ய முடியாது. தேவனுடைய இராஜ்யத்திற்காக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தம்பொருட்டு உங்கள் நேரத்தை எங்கே முதலீடு செய்யவேண்டும் என அறிந்துகொள்ளும் ஞானத்திற்காக ஜெபியுங்கள்.



3.) படைப்புத்திறனுடையவர்களாய் இருக்கும்படி திட்டமிடுங்கள். தேவனுடையத் திட்டங்கள் சிலசமயங்களில் நம்மை, நாம் எதிர்பாராத பாதைகளுக்குள்ளாக எடுத்துச்செல்கின்றன. கிதியோனுடைய விஷயத்தில் இது, இயல்பான போர்-ஆயத்த ஆயுதங்களுக்குப் பதிலாக அவனிடம் இருந்த வெறும்பானைகளையும், தீவட்டிகளையும் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. தேவன் உங்களுக்குக் கொடுத்த வரங்களை இன்றே பயன்படுத்துங்கள். மற்றவர்களிடம் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். தேவன் உங்களுக்குக் கொடுத்த வரங்களை அவருடைய ஒத்தாசையோடு பயன்படுத்தும்போது நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் மேலானவைகளை சாதிக்கமுடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

God’s Plan For Your Life

உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் என்ன? கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நம் அனைவரின் பொதுவான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால், நாம் நேர்மையாக இருந்தால், நம் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் மற்றும் நம்மைக் குறித்த அ...

More

இந்த திட்டத்தை வழங்கும் LifeChurch.tv க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்