உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

Devotions for Lent from Holy Bible: Mosaic

46 ல் 8 நாள்

வெற்று தியாகம் (எலீன் பட்டன்)

பல கத்தோலிக்க பிள்ளைகளைப் போல் நானும் அந்த தவக்காலத்தில் நாற்பதுக்கு சற்று கூடுதல் நாட்கள் இனிப்பு சாப்பிடாமல் இருப்பேன். ஈஸ்டர் அன்று காலையில் கீழ் தளத்திற்கு மெதுவாக இறங்கி சென்றது நினைவிருக்கிறது. அங்கே ஒரு அற்புதமான திட சாக்லேட்டால் செய்யப்பட்ட ஒரு முயல் தின்பண்டம் என்னை வரவேற்கப்போகிறது என்று எதிர்பார்த்தேன். அந்த கடினமான தவக்கால நாட்களை கடந்த பின், அந்த முயல்குட்டியின் ருசியான காதுகளை ருசிக்க என்னால் காத்திருக்க முடியவில்லை.

சில நேரங்களில், கூடையில் எனக்கு பிடித்தமான முயலிற்கு பதிலாக சிலுவை வடிவிலான போலான சாக்லெட்டை கண்டெடுக்கும்போது ஏமாற்றமாய் இருக்கும். என் இரட்சகரின் சித்திரவதை பொருள் ஒரு சாக்லேட் பதிப்பாக வெளிர் ஜெல்லி பீன்ஸ் மிட்டாயால் சூழப்பட்டு, பச்சை செயற்கை புல்லில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். கிறிஸ்துவின் உடைந்த உடல் இருக்க வேண்டிய அந்த சிலுவையில், சர்க்கரையால் செய்யப்பட்ட ஒரு இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த மலர் வைக்கப்பட்டிருக்கும். என்னால் அதை சாப்பிட முடியவில்லை. அப்படி சாப்பிடுவது ஆண்டவரை இழிவுபடுத்துவது போல கருதினேன். இனிப்பு இல்லா அந்த நீண்ட, தாங்க இயலாத தவக்காலாத்தை தாக்குப்பிடிக்க முடியாதது போல் தெரிந்த எனக்கு, அந்த ஈஸ்டர் காலை வேளையில் அந்த சாக்லேட் சிலுவையை எதிர்கொள்ளும்போது என்னுடைய அற்ப "தியாகம்" குறித்து எப்போதும் அதிர்ச்சி அடைவேன். ஒரு குழந்தை கூட கிறிஸ்துவின் மேன்மையான தியாகத்தை குறித்து போராடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், தவக்காலம் பலருக்கு ஒரு புதிராகவே உள்ளது. குறைந்த காலமேயானாலும்கூட, நமக்கு பிடித்த ஒரு காரியத்தை செய்யமாலோ, அல்லது பிடித்த உணவை உட்கொள்ளாமல் இருந்தாலோ - அது 'எனக்கு இப்போதே வேண்டும்' என்று சொல்லும் இக்கால கலாச்சாரத்திற்கு தேவையற்ற ஒன்றாகவும், தொன்மையானதாகவும் பார்க்கப்படுகிறது. மெதுவான, உறுதியான இசையாகிய தவக்காலம் இரைச்சலிடும் சத்தமாகிய பெரிய வெள்ளிக்கும், இனிமையான தனிப்பாடலாகிய ஈஸ்டர் ஞாயிற்றிற்கு வழிவகுக்கிறது. திட்டமிட்டு வேண்டுமென்றே செயல்படும் காலம் இது.

ஆனால் நமது நல்ல நோக்கங்களை நாமே தடுத்து விடுகிறோம். நாம் உணவிலிருந்தோ, நவீன சாதனங்களிலிருந்தோ, நம் இதயங்களை ஆட்கொண்டு தேவன் மட்டுமே நிரப்பக்கூடிய இடத்தை அபகரிக்க முயற்சிக்கும் ஒன்றிலிருந்து நாம் உபவாசம் செய்யும் போது, நம் தியாகத்தை பற்றி நாம் பெருமையாகவோ கர்வமாகவோ உணரக்கூடும். நாம் கைவிட வேண்டும் என்று நினைக்கிற அதே காரியம் நமக்கு நிறைவேற வேண்டிய "தேவை"யாக நமக்குள்ளாக ஆரவாரமிடக்கூடும். நமது நோக்கத்தை இயேசு கிறிஸ்துவின் மேல் செலுத்துவதற்கு பதிலாக, நாம் ஒப்புவித்த அதே காரியத்திற்கு நேராக ஆபத்தான விதத்தில் நம் கவனம் செல்லக் கூடும்.

என்றாலும், தவக்காலத்தின் வழக்கம் ஒரு விலையுயர்ந்த ஒழுக்கமாக இருக்க முடியும். எனக்கு எல்லாவற்றிற்கும் உரிமை இருக்கிறது என்ற நமது உணர்வால் நம் உடலுக்கும் மனதிற்கும் என்ன நேர்கிறது என்று புரிந்துக்கொள்வது நமக்கு கடினம். இன்பத்தின் பாதப்படியில் தொழுகை செய்யும் நமது கலாச்சரம், அதன் ருசியான சலுகைகளுக்கும் அடிபணிகிறது. நாம் அவற்றை வாரி போடுகையில், நம் வாழ்க்கையில் உள்ள உண்மையான ஏக்கங்களுக்கு உணர்வில்லாதவர்களாகிவிடுகிறோம். தவக்காலத்தை கடைப்பிடிப்பது நாம் தொடர்ந்து நுகர்ந்துக்கொண்டிருப்பதன் காரணங்களை ஆராய்வதில் உதவுகிறது. நம்மை உண்மையாக திருப்த்திப்படுத்த முடியாத காரியத்தை நாம் கைவிட எண்ணும் போது, சில கடினமான கேள்விகளை நாம் முக முகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்று இயேசு சொல்வதை நம்மால் நம்ப முடிகிறதா? மூழ்கிப்போன பாரமான நமது வாழ்க்கையில் இயேசுவுக்கு நாம் எப்படி இடம் கொடுப்பது? பெரிய வெள்ளியின் உண்மையை நாம் அறிந்தும், அதற்க்கு முரணாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கும் மற்ற உள்ளத்தை ஆராயும் கேள்விகளுக்கும் நேர்மையான பதில்களை யோசிக்க தவக்காலம் நமக்கு சவால் கொடுக்கிறது. நுகர்ந்துக்கொண்டிருக்கும் சக்கரத்திலிருந்து சற்று வெளியே குதித்து தொடர்ந்து யோசிக்காமல் நம்மை திருப்திப்படுத்திக்கொண்டிருப்பதிலிருந்த்து விலகியிருப்பதன் கஷ்டத்தை அனுபவிக்க நம்மை அழைக்கிறது. பரபரப்பாக பொருட்களை நாடும் நமக்கு மிகவும் அவசியமான ஒரு இடைவேளை கொடுப்பதற்கான ஆற்றல் அதற்கு உள்ளது.

அநேக விசுவாசிகளைப் போல, நானும் ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, நான் நுகரும் ஏதாவது ஒன்றை கைவிடுவதையும் தொடர்கின்றேன். விலகியிருத்தல், தேடுதல், மற்றும் வெளிப்பாடுகளின் இந்த காலத்தை நான் அதிக மதிப்புடன் கருதுகிறேன். ஒவ்வொரு ஆண்டும், புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்கின்றேன்.

முன்பு இருந்தது போல இப்போதும், நான் சிலுவையால் செய்யப்பட்ட வேற்று சாக்லெட்டால் புண்படுத்தப் படுகிறேன், ஏனென்றால் நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் உள்ள உண்மையை அது அநேக நேரங்களில் குறிக்கிறது: வெளியே பார்ப்பது அழகாக இருக்கலாம், ஆனால், உள்ளே பரிதாபமாக காலியாக இருக்கலாம். அவ்வப்போது, இயேசு கிறிஸ்துவின் தியாகமும் அவர் அன்பின் வல்லமையும் நம் கடின இருதயங்களின் மூலம் ஊடுருவுகிறன்றன. சோர்ந்துப்போன முகங்களின் மேல் குளிர்ந்த நீர் தெளிப்பதுப்போல, இந்த உணர்வு நம்மை திக்கு முக்காட செய்கிறது. நம் ஆன்மாக்களின் வேற்று இடங்கள் நிரப்பப்படலாம்.

இந்த திட்டத்தைப் பற்றி

Devotions for Lent from Holy Bible: Mosaic

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்

More

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்