சங்கீதம் 119:1-88

சங்கீதம் 119:1-88 TCV

குற்றமற்றவர்களாய் வாழ்ந்து, யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு, தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தவறு செய்யாமல் அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே நீர் அவைகளைக் கொடுத்தீர். ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி, என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும். உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது, நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன். நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்; என்னை முற்றிலும் கைவிடாதேயும். வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே. நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்; உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும். நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி, உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன். யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும் என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன். ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல், நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து, உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன். நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்; உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன். உமது அடியேனுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன். உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி, என் கண்களைத் திறந்தருளும். பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்; உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும். உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால், என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது. அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்; அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள். நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால், பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும். ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும், உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன். உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன; அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன. நான் தூசியில் வீழ்ந்து கிடக்கிறேன்; உமது வார்த்தையின்படி என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும். நான் என் வாழ்வின் வழிகளை உமக்கு விவரித்துச் சொன்னேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். உமது ஒழுங்குவிதிகளின் அர்த்தத்தை எனக்கு விளங்கச்செய்யும்; அப்பொழுது நான் உம்முடைய அற்புதமான போதனைகளைத் தியானிப்பேன். என் ஆத்துமா துயரத்தால் இளைத்துப் போயிருக்கிறது; உமது வார்த்தையின்படி என்னைப் பெலப்படுத்தும். என்னை ஏமாற்றும் வழிகளிலிருந்து காத்துக்கொள்ளும்; என்னில் கிருபையாயிருந்து, உமது சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். மெய்வழியை நான் தேர்ந்தெடுத்தேன்; நான் உமது சட்டங்களின்படி வாழத் தீர்மானித்திருக்கிறேன். யெகோவாவே, உமது நியமங்களை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்; என்னை வெட்கப்பட விடாதேயும். நீர் என் புரிந்துகொள்ளுதலை விரிவாக்கியிருக்கிறதினால், உமது கட்டளைகளின் பாதையிலேயே நான் ஓடுவேன். யெகோவாவே, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்; அப்பொழுது நான் அவைகளைக் கடைசிமட்டும் கைக்கொள்வேன். விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்; அதினால் நான் உமது சட்டத்தைக் கைக்கொள்வேன். என் முழு இருதயத்தோடும் அதற்குக் கீழ்ப்படிவேன். உமது கட்டளைகளின் பாதையில் என்னை நடத்தும்; ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன். என் இருதயத்தைச் சுயலாபத்தின் பக்கம் சாயவிடாமல், உமது நியமங்களின் பக்கமாய்த் திருப்பும். பயனற்ற காரியங்களிலிருந்து என் கண்களைத் திருப்பும்; உமது வார்த்தையின்படியே என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும். உமக்குப் பயந்து நடக்கும்படி நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தை உமது அடியேனாகிய எனக்கு நிறைவேற்றும். நான் பயப்படுகின்ற அவமானத்தை என்னைவிட்டு அகற்றும்; ஏனெனில், உமது சட்டங்கள் நல்லவை. நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் விரும்புகிறேன்! உமது நியாயத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பும், உம்முடைய வாக்குத்தத்தத்தின்படி உமது இரட்சிப்பும் எனக்குக் கிடைப்பதாக; அப்பொழுது நான் என்னை நிந்திக்கிறவனுக்குப் பதில் சொல்வேன்; ஏனெனில் நானோ உமது வார்த்தையிலேயே நம்பிக்கையை வைத்திருக்கிறேன். சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து பறித்துக் கொள்ளாதிரும்; ஏனெனில், நான் உமது சட்டங்களிலேயே என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். நான் எப்பொழுதும் உமது சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன். உமது ஒழுங்குவிதிகளில் நடப்பதினால், நான் சுதந்திரமாக நடந்துவருவேன். நான் அரசர்களுக்கு முன்பாக உமது நியமங்களைக் குறித்துப்பேசுவேன்; நான் வெட்கத்திற்கு உள்ளாகமாட்டேன். ஏனெனில், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன், அவற்றில் மகிழ்ச்சியடைகிறேன். நான் நேசிக்கும் உம்முடைய கட்டளைகளை மதிக்கிறேன்; உம்முடைய விதிமுறைகளைத் தியானிப்பேன். உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வார்த்தையை நினைவிற்கொள்ளும்; அதினால் எனக்கு நம்பிக்கையை தந்திருக்கிறீர். இதுவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல்: உம்முடைய வாக்குத்தத்தம் என் வாழ்வைக் காத்துக்கொள்வது. அகங்காரம் கொண்டவர்கள் தயக்கமின்றி என்னை ஏளனம் செய்கிறார்கள்; ஆனாலும் நான் உமது சட்டத்திலிருந்து விலகுவதில்லை. யெகோவாவே, உமது பூர்வகாலத்து சட்டங்களை நான் நினைவிற்கொள்கிறேன்; நான் அவைகளில் ஆறுதல் பெறுகிறேன். உமது சட்டத்தைக் கைவிட்டுவிட்ட கொடியவர்களின் நிமித்தம், கடுங்கோபம் என்னைப் பற்றிக்கொள்கிறது. நான் எங்கு தங்கினாலும், உமது விதிமுறைகளே எனது பாடலின் கருப்பொருளாயிற்று. யெகோவாவே, இரவிலே நான் உமது பெயரை நினைவிற்கொண்டு, உமது சட்டத்தைக் கைக்கொள்வேன். உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதே என் வழக்கமாயிற்று. யெகோவாவே, நீரே என் பங்கு; உமது வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படிவதாக வாக்களித்திருக்கிறேன். நான் என் முழு இருதயத்தோடும் உமது முகத்தைத் தேடியிருக்கிறேன்; உமது வாக்குத்தத்தத்தின்படி என்மீது கிருபையாயிரும். நான் என் வாழ்வின் பாதையை சிந்தித்து, உம்முடைய நியமங்களைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன். உமது கட்டளைகளுக்கு விரைவாய்க் கீழ்ப்படிவேன், தாமதிக்கமாட்டேன். கொடியவர்கள் என்னைக் கயிறுகளினால் கட்டினாலும், நான் உமது சட்டத்தை மறவேன். உமது நியாயமான சட்டங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தும்படி, நான் நள்ளிரவில் விழித்தெழுகிறேன். உமக்குப் பயந்து நடக்கிற, உமது ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் நான் நண்பனாய் இருக்கிறேன். யெகோவாவே, பூமி உமது அன்பினால் நிறைந்திருக்கிறது; உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். யெகோவாவே, உம்முடைய வார்த்தையின்படி உமது அடியேனுக்கு நன்மை செய்யும். உம்முடைய கட்டளைகளை நான் நம்புவதால், அறிவையும் நல்ல நிதானிப்பையும் எனக்குப் போதியும். நான் துன்பப்படுவதற்கு முன்பு வழிவிலகிப் போனேன், ஆனால் இப்பொழுதோ உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன். நீர் நல்லவர், நீர் நன்மையானதையே செய்கிறீர்; உம்முடைய விதிமுறைகளை எனக்குப் போதியும். அகங்காரம் கொண்டவர்கள் என்னைப்பற்றிப் பொய்களைப் பரப்பினார்கள், ஆனாலும் நான் முழு இருதயத்தோடும், உம்முடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்கிறேன். அவர்களுடைய இருதயங்கள் கடினமானவைகளும், உணர்வற்றவைகளுமாய் இருக்கின்றன; நானோ உம்முடைய சட்டத்தில் மகிழ்கிறேன். நான் துன்பப்பட்டது எனக்கு நன்மையாகவே இருந்தது; அதினால் நான் உம்முடைய விதிமுறைகளைக் கற்றுக்கொள்கிறேன். ஆயிரமாயிரமான பொன் வெள்ளியைப் பார்க்கிலும், உம்முடைய வாயிலிருந்து வருகிற சட்டம் எனக்கு அதிக விலையேறப்பெற்றது. உம்முடைய கரங்கள் என்னைப் படைத்து உருவாக்கின; உம்முடைய கட்டளைகளைக் கற்று விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும். நான் உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்து நடப்பவர்கள் என்னைக் காணும்போது, மகிழ்ச்சியடைவார்களாக. யெகோவாவே, உமது சட்டங்கள் நியாயமானவை என்பதை நான் அறிவேன்; நீர் என்னைத் துன்பப்படுத்தியது சரிதான். நீர் உம்முடைய அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, உம்முடைய உடன்படிக்கையின் அன்பு என்னைத் தேற்றுவதாக. நான் வாழ்வடையும்படி உம்முடைய கருணை எனக்குக் கிடைக்கட்டும்; உமது சட்டம் என் மனமகிழ்ச்சி. காரணமின்றி எனக்கு அநியாயம் செய்யும் அகங்காரம் கொண்டவர்கள் வெட்கம் அடைவார்களாக; நானோ, உம்முடைய ஒழுங்குவிதிகளைத் தியானிப்பேன். உமது நியமங்களை விளங்கிக்கொண்டு, உமக்குப் பயந்து நடக்கிறவர்கள் என் பக்கம் திரும்பட்டும். நான் வெட்கப்பட்டுப் போகாதபடி என் இருதயம் உம்முடைய விதிமுறைகளைக் குறித்து குற்றமற்றதாய் இருக்கட்டும். உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது; நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன; “நீர் என்னை எப்பொழுது தேற்றுவீர்?” என்று கேட்க விரும்புகிறேன். நான் புகைக்குள்ளிருந்து சுருங்கிப்போகும் திராட்சைக் குடுவையைப்போல் இருந்தாலும், உமது விதிமுறைகளை மறவாமல் இருக்கிறேன். உமது அடியேன் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கவேண்டும்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நீர் எப்பொழுது தண்டிப்பீர்? அகங்காரம் கொண்டவர்கள் நான் விழுவதற்குக் குழி தோண்டுகிறார்கள்; அது உமது சட்டத்திற்கு முரணானது. உம்முடைய கட்டளைகளெல்லாம் நம்பத்தகுந்தவை; காரணமின்றி மனிதர் என்னைத் துன்பப்படுத்துவதால், எனக்கு உதவிசெய்யும். அவர்கள் என்னைப் பூமியிலிருந்து ஏறக்குறைய அழித்துவிட்டார்கள்; ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைவிடவில்லை. உம்முடைய உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும், அதினால் நான் உமது வாயின் நியமங்களுக்குக் கீழ்ப்படிவேன்.

Verse Images for சங்கீதம் 119:1-88

சங்கீதம் 119:1-88 - குற்றமற்றவர்களாய் வாழ்ந்து,
யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு,
தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தவறு செய்யாமல்
அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே
நீர் அவைகளைக் கொடுத்தீர்.
ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி,
என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும்.
உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது,
நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது,
நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன்.
நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்;
என்னை முற்றிலும் கைவிடாதேயும்.

வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்?
உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே.
நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்;
உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும்.
நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி,
உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன்.
யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும்
என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன்.
ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல்,
நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து,
உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன்.
நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்;
உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன்.

உமது அடியேனுக்கு நன்மை செய்யும்;
அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன்.
உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி,
என் கண்களைத் திறந்தருளும்.
பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்;
உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும்.
உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால்,
என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது.
அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்;
அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள்.
நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால்,
பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும்.
ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும்,
உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன்.
உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன;
அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன.

நான் தூசியில் வீழ்ந்து கிடக்கிறேன்;
உமது வார்த்தையின்படி என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும்.
நான் என் வாழ்வின் வழிகளை உமக்கு விவரித்துச் சொன்னேன்,
நீர் எனக்குப் பதிலளித்தீர்;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
உமது ஒழுங்குவிதிகளின் அர்த்தத்தை எனக்கு விளங்கச்செய்யும்;
அப்பொழுது நான் உம்முடைய அற்புதமான போதனைகளைத் தியானிப்பேன்.
என் ஆத்துமா துயரத்தால் இளைத்துப் போயிருக்கிறது;
உமது வார்த்தையின்படி என்னைப் பெலப்படுத்தும்.
என்னை ஏமாற்றும் வழிகளிலிருந்து காத்துக்கொள்ளும்;
என்னில் கிருபையாயிருந்து, உமது சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.
மெய்வழியை நான் தேர்ந்தெடுத்தேன்;
நான் உமது சட்டங்களின்படி வாழத் தீர்மானித்திருக்கிறேன்.
யெகோவாவே, உமது நியமங்களை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்;
என்னை வெட்கப்பட விடாதேயும்.
நீர் என் புரிந்துகொள்ளுதலை விரிவாக்கியிருக்கிறதினால்,
உமது கட்டளைகளின் பாதையிலேயே நான் ஓடுவேன்.

யெகோவாவே, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்;
அப்பொழுது நான் அவைகளைக் கடைசிமட்டும் கைக்கொள்வேன்.
விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்;
அதினால் நான் உமது சட்டத்தைக் கைக்கொள்வேன்.
என் முழு இருதயத்தோடும் அதற்குக் கீழ்ப்படிவேன்.
உமது கட்டளைகளின் பாதையில் என்னை நடத்தும்;
ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.
என் இருதயத்தைச் சுயலாபத்தின் பக்கம் சாயவிடாமல்,
உமது நியமங்களின் பக்கமாய்த் திருப்பும்.
பயனற்ற காரியங்களிலிருந்து என் கண்களைத் திருப்பும்;
உமது வார்த்தையின்படியே என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமக்குப் பயந்து நடக்கும்படி நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தை
உமது அடியேனாகிய எனக்கு நிறைவேற்றும்.
நான் பயப்படுகின்ற அவமானத்தை என்னைவிட்டு அகற்றும்;
ஏனெனில், உமது சட்டங்கள் நல்லவை.
நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் விரும்புகிறேன்!
உமது நியாயத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.

யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பும்,
உம்முடைய வாக்குத்தத்தத்தின்படி உமது இரட்சிப்பும் எனக்குக் கிடைப்பதாக;
அப்பொழுது நான் என்னை நிந்திக்கிறவனுக்குப் பதில் சொல்வேன்;
ஏனெனில் நானோ உமது வார்த்தையிலேயே நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து பறித்துக் கொள்ளாதிரும்;
ஏனெனில், நான் உமது சட்டங்களிலேயே என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
நான் எப்பொழுதும்
உமது சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன்.
உமது ஒழுங்குவிதிகளில் நடப்பதினால்,
நான் சுதந்திரமாக நடந்துவருவேன்.
நான் அரசர்களுக்கு முன்பாக உமது நியமங்களைக் குறித்துப்பேசுவேன்;
நான் வெட்கத்திற்கு உள்ளாகமாட்டேன்.
ஏனெனில், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்,
அவற்றில் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் நேசிக்கும் உம்முடைய கட்டளைகளை மதிக்கிறேன்;
உம்முடைய விதிமுறைகளைத் தியானிப்பேன்.

உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வார்த்தையை நினைவிற்கொள்ளும்;
அதினால் எனக்கு நம்பிக்கையை தந்திருக்கிறீர்.
இதுவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல்:
உம்முடைய வாக்குத்தத்தம் என் வாழ்வைக் காத்துக்கொள்வது.
அகங்காரம் கொண்டவர்கள் தயக்கமின்றி என்னை ஏளனம் செய்கிறார்கள்;
ஆனாலும் நான் உமது சட்டத்திலிருந்து விலகுவதில்லை.
யெகோவாவே, உமது பூர்வகாலத்து சட்டங்களை நான் நினைவிற்கொள்கிறேன்;
நான் அவைகளில் ஆறுதல் பெறுகிறேன்.
உமது சட்டத்தைக் கைவிட்டுவிட்ட கொடியவர்களின் நிமித்தம்,
கடுங்கோபம் என்னைப் பற்றிக்கொள்கிறது.
நான் எங்கு தங்கினாலும்,
உமது விதிமுறைகளே எனது பாடலின் கருப்பொருளாயிற்று.
யெகோவாவே, இரவிலே நான் உமது பெயரை நினைவிற்கொண்டு,
உமது சட்டத்தைக் கைக்கொள்வேன்.
உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதே
என் வழக்கமாயிற்று.

யெகோவாவே, நீரே என் பங்கு;
உமது வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படிவதாக வாக்களித்திருக்கிறேன்.
நான் என் முழு இருதயத்தோடும் உமது முகத்தைத் தேடியிருக்கிறேன்;
உமது வாக்குத்தத்தத்தின்படி என்மீது கிருபையாயிரும்.
நான் என் வாழ்வின் பாதையை சிந்தித்து,
உம்முடைய நியமங்களைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.
உமது கட்டளைகளுக்கு விரைவாய்க் கீழ்ப்படிவேன்,
தாமதிக்கமாட்டேன்.
கொடியவர்கள் என்னைக் கயிறுகளினால் கட்டினாலும்,
நான் உமது சட்டத்தை மறவேன்.
உமது நியாயமான சட்டங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தும்படி,
நான் நள்ளிரவில் விழித்தெழுகிறேன்.
உமக்குப் பயந்து நடக்கிற,
உமது ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் நான் நண்பனாய் இருக்கிறேன்.
யெகோவாவே, பூமி உமது அன்பினால் நிறைந்திருக்கிறது;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.

யெகோவாவே, உம்முடைய வார்த்தையின்படி
உமது அடியேனுக்கு நன்மை செய்யும்.
உம்முடைய கட்டளைகளை நான் நம்புவதால்,
அறிவையும் நல்ல நிதானிப்பையும் எனக்குப் போதியும்.
நான் துன்பப்படுவதற்கு முன்பு வழிவிலகிப் போனேன்,
ஆனால் இப்பொழுதோ உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன்.
நீர் நல்லவர், நீர் நன்மையானதையே செய்கிறீர்;
உம்முடைய விதிமுறைகளை எனக்குப் போதியும்.
அகங்காரம் கொண்டவர்கள் என்னைப்பற்றிப் பொய்களைப் பரப்பினார்கள்,
ஆனாலும் நான் முழு இருதயத்தோடும், உம்முடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்கிறேன்.
அவர்களுடைய இருதயங்கள் கடினமானவைகளும், உணர்வற்றவைகளுமாய் இருக்கின்றன;
நானோ உம்முடைய சட்டத்தில் மகிழ்கிறேன்.
நான் துன்பப்பட்டது எனக்கு நன்மையாகவே இருந்தது;
அதினால் நான் உம்முடைய விதிமுறைகளைக் கற்றுக்கொள்கிறேன்.
ஆயிரமாயிரமான பொன் வெள்ளியைப் பார்க்கிலும்,
உம்முடைய வாயிலிருந்து வருகிற சட்டம் எனக்கு அதிக விலையேறப்பெற்றது.

உம்முடைய கரங்கள் என்னைப் படைத்து உருவாக்கின;
உம்முடைய கட்டளைகளைக் கற்று விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்.
நான் உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறபடியால்,
உமக்குப் பயந்து நடப்பவர்கள் என்னைக் காணும்போது, மகிழ்ச்சியடைவார்களாக.
யெகோவாவே, உமது சட்டங்கள் நியாயமானவை என்பதை நான் அறிவேன்;
நீர் என்னைத் துன்பப்படுத்தியது சரிதான்.
நீர் உம்முடைய அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி,
உம்முடைய உடன்படிக்கையின் அன்பு என்னைத் தேற்றுவதாக.
நான் வாழ்வடையும்படி உம்முடைய கருணை எனக்குக் கிடைக்கட்டும்;
உமது சட்டம் என் மனமகிழ்ச்சி.
காரணமின்றி எனக்கு அநியாயம் செய்யும்
அகங்காரம் கொண்டவர்கள் வெட்கம் அடைவார்களாக;
நானோ, உம்முடைய ஒழுங்குவிதிகளைத் தியானிப்பேன்.
உமது நியமங்களை விளங்கிக்கொண்டு,
உமக்குப் பயந்து நடக்கிறவர்கள் என் பக்கம் திரும்பட்டும்.
நான் வெட்கப்பட்டுப் போகாதபடி என் இருதயம்
உம்முடைய விதிமுறைகளைக் குறித்து குற்றமற்றதாய் இருக்கட்டும்.

உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது;
நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன;
“நீர் என்னை எப்பொழுது தேற்றுவீர்?” என்று கேட்க விரும்புகிறேன்.
நான் புகைக்குள்ளிருந்து சுருங்கிப்போகும்
திராட்சைக் குடுவையைப்போல் இருந்தாலும்,
உமது விதிமுறைகளை மறவாமல் இருக்கிறேன்.
உமது அடியேன் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கவேண்டும்?
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நீர் எப்பொழுது தண்டிப்பீர்?
அகங்காரம் கொண்டவர்கள் நான் விழுவதற்குக் குழி தோண்டுகிறார்கள்;
அது உமது சட்டத்திற்கு முரணானது.
உம்முடைய கட்டளைகளெல்லாம் நம்பத்தகுந்தவை;
காரணமின்றி மனிதர் என்னைத் துன்பப்படுத்துவதால், எனக்கு உதவிசெய்யும்.
அவர்கள் என்னைப் பூமியிலிருந்து ஏறக்குறைய அழித்துவிட்டார்கள்;
ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைவிடவில்லை.
உம்முடைய உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்,
அதினால் நான் உமது வாயின் நியமங்களுக்குக் கீழ்ப்படிவேன்.சங்கீதம் 119:1-88 - குற்றமற்றவர்களாய் வாழ்ந்து,

அதினால் நான் உமது வாயின் நியமங்களுக்குக் கீழ்ப்படிவேன்.

சங்கீதம் 119:1-88 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்