யாக்கோபே, ஒருநாளில் உங்கள் எல்லோரையும்
நிச்சயமாகவே நான் ஒன்றுசேர்ப்பேன்,
இஸ்ரயேலில் எஞ்சியோரை நிச்சயமாகவே நான் ஒன்றுகூட்டுவேன்.
தொழுவத்தின் செம்மறியாடுகளைப் போலவும்,
மேய்ச்சல் நிலத்தின் மந்தைகளைப் போலவும் நான் அவர்களை ஒன்றாகக் கொண்டுவருவேன்.
அந்த இடம் மக்களால் நிறைந்திருக்கும்.