மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள்Sample

ஏன், ஆண்டவரே ... ஏன்?
பவுல் ஆண்டவருக்காக பல அசாதாரண காரியங்களை சாதித்தார். அவர் கீழ்ப்படிதல், விசுவாசம் மற்றும் கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து நடந்தார். ஆனாலும்கூட, அவர் மனச்சோர்வை அனுபவித்தார்... ஆண்டவர் அவரது மாம்சத்தில், துன்பத்தின் பெரும் காரணியாக,ஒருமுள் அவரைத் துன்பப்படுத்த அனுமதித்தார். (வேதாகமத்தில் உள்ள 2 கொரிந்தியர் 12: 7-10என்றபத்தியைப் பார்க்கவும்)
இங்கே நியாயமான கேள்வி என்னவென்றால், "ஏன், ஆண்டவரே ... ஏன்?" மேலும் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காவிட்டால், நம்மால் புரிந்துகொள்ள இயலாத நிலைமையாக இருக்கலாம் அல்லது மாசோர்வாக இருக்கலாம். ஆம், வேதத்தின் பின்வரும் திறவுகோலை இன்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்...
"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்”. (ஏசாயா 55: 8ஐக்காண்க)
அவருடைய எண்ணங்கள் நம்முடையவை அல்ல…நம்மைப்போல ஆண்டவர் நினைப்பதுமில்லை செயல்படுவதுமில்லை; எனவே ஆண்டவர் உனக்குப் புரியாத வழியில் செயல்பட்டால்...
- மனச்சோர்வு தவிர்க்க முடியாததா ஒன்றா?
- நீ மனச்சோர்வுடன் வாழும்படி தள்ளப்படுகிறாயா?
தீர்வின் ஒரு பகுதியானது மனச்சோர்வை அப்படியே ஏற்றுக்கொள்வதிலும், இவையெல்லாம் நம்மை விட ஆண்டவருக்கு நன்றாகத் தெரியும், அவர் எப்போதும் நம் நலனுக்காகவே செயல்படுகிறார் என்று சொல்லிக் கொள்வதிலும் மறைந்திருந்தால் என்ன செய்வது?
சொல்வது எளிது, ஆனால் உண்மையில் வாழ்ந்துகாட்டுதல் மிகவும் கடினம். இருப்பினும், கிறிஸ்துவில் வாழ்வது என்பது மனச்சோர்வினால் கட்டுண்டவனாக இருக்கவேண்டும் என்று அர்த்தமில்லை என நான் நம்புகிறேன். சிருஷ்டிகருடைய கரங்களில் நாம் அதை விட்டுக்கொடுப்பது சாத்தியமாகும்; அதன்மூலம் அவருடைய சமாதானத்துடன் நாம் ஒவ்வொரு சூழ்நிலையையும் கடந்து செல்ல முடியும்.
இவ்வாறு, என்னுடைய திட்டத்தின்படி எதுவும் நடக்காதபோது கூட, என்னால் ...
- ஆண்டவரிடத்திற்குத் திரும்பவும்,
- சமாதானத்தைப் பெறவும்,
- என்னிடம் உள்ள எல்லாவற்றிற்காகவும் அவருக்கு நன்றி செலுத்தவும்,
- சாந்தமாக முன்னேறிச் செல்லவும்…முடியும்.
கிறிஸ்துவில் அன்பிற்குரியவரே, நாம் இணைந்து ஜெபிப்போமா... "கர்த்தாவே, நான் இன்று உம்மிடம் நன்றியுடன் திரும்பிவருகிறேன். நீர் என் வாழ்க்கையில் செய்த மற்றும் செய்யப்போகிற அனைத்து நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி. உம்முடைய ஆலோசனை மற்றும் போதனையைப் பெற என் இருதயம் திறந்து ஆவலுடன் இருப்பதாக. இயேசுவின் நாமத்தில், ஆமென்!
இந்த திட்டத்தை வெளியிடுபவர் : https://tamil.jesus.net/
Scripture
About this Plan

உன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்று நினைக்கிறாயா? உன்னை பற்றி நினைக்கவோ கண்டுகொள்ளவோ யாருமில்லை என்று உன் உள்ளத்தில் தோன்றுகிறதா? நீ வாழ்க்கையில் தோற்றுப்போனதாக எண்ணுகிறாயா? நீ என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடிவதுபோல் இருக்கிறதா? எதிர்பார்த்த நன்மை கிடைக்கவில்லையா? அல்லது தாமதமாகிறதா? இனி நான் வாழ இயலுமா அல்லது வாழ்ந்து என்ன அர்த்தம் என்று யோசிக்கிறாயா? இந்த திட்டம் உனக்கானது. ஆம் அன்பரே நான் குறிப்பிட்ட அனைத்தும் மன அழுத்தத்தின் (depression) விளைவுகள். ஆண்டவர் இயேசு ஒருவரால் மட்டுமே இந்த மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு பரிபூரண விடுதலை அளிக்க முடியும். மேலும் அவர் உங்களுக்கு விடுதலை அளித்து உங்களை மேன்மையாக வைக்க ஆவலாய் இருக்கிறார். வாருங்கள் வேதாகமத்தின் அடிப்படையில் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிகளை ஆராய்வோம்.
More
Related Plans

Prayer Altars: Embracing the Priestly Call to Prayer

Sickness Can Draw You and Others Closer to God, if You Let It – Here’s How

How Stuff Works: Prayer

Journey With Jesus: 3 Days of Spiritual Travel

Journey Through Jeremiah & Lamentations

Here Am I: Send Me!

The Way of St James (Camino De Santiago)

Journey Through Proverbs, Ecclesiastes & Job

The Making of a Biblical Leader: 10 Principles for Leading Others Well
