மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள்Sample

விலகி ஓடாதே!
எப்போதாவது இதை கவனித்திருக்கிறீர்களா? நாம் கஷ்டங்களின் வழியாகக் கடந்து செல்லும்போது நம்மை முதலில் ஆட்கொள்வது மனச்சோர்வேயாகும்.
நீங்கள் பேசுவதை மிகவும் கவனமாக செவிகொடுத்துக் கேட்க வேண்டிய நேரங்களில், உங்கள் மனைவியோ அல்லது கணவரோ தன் கையில் செல்போனை வைத்து அதையே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ஏன் என்று இதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் நமது உடன் வேலையாட்கள் சுலபமாய் செய்ய வேண்டியதை கடினமான ஒன்றாக மாற்றி விடுகிறார்கள்? ஏன் நமது போதகர்கள் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கூறி உதவி செய்வதில்லை?
இதனால், களத்தில் நின்று போராடுவதா அல்லது தூரமாய்ப் பறந்து செல்வதா என்ற எண்ணம் நம் வாழ்க்கையில் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, நாம் விலகி ஓடுகிறோம்.
நாம் இவைகளை மாற்றுகிறோம்...
- சபையை
- கணவன் அல்லது மனைவியை
- வேலையை
- அண்டை அயலகத்தாரை
- நண்பர்களை
- இது போன்ற பல விஷயங்கள்....
கஷ்டங்கள் நமக்கு அடிக்கடி வரும் போது அவைகளை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. நாம் கண்களை மூடிக் கொள்கிறோம்.
எப்படியாயினும், இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்து நீங்கள் விடுபட்டு, விலகி ஓடுவதை ஒருபோதும் நினையாமல், ஆண்டவர் அளிக்கும் சந்தோசத்தை அடையவும், மகிழ்ச்சியைப் பெறவும் அவர் உங்களுக்கு அறிவுறுத்துகிறார்.
“அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.” (வேதாகமம் 2 கொரிந்தியர் 12:10)
ஏன் தெரியுமா? இப்படிப்பட்ட சோதனைகள் எப்போதும் உங்களுக்கு ஒரு செய்தியை வைத்திருக்கின்றன.
கிறிஸ்துவில் பிரியமானவரே, உங்களுக்கான ஆண்டவருடைய செய்தி என்ன?
உங்களது பரமபிதா உங்களுக்காக யாவற்றையும் ஏற்கனவே செய்து முடித்து விட்டபடியால், நீங்களும் அவருடன் ஜெயம் பெற்ற வாழ்க்கையில் நடக்க வேண்டும் என விரும்புகிறார். அவரது கிருபை மட்டும் நமக்குப் போதுமானது. உங்களது கசப்பை, மன்னிக்கும் மனப்பான்மையாக மாற்ற உங்களால் கூடும். உங்களால் கூடாது என்று தோன்றும் காரியங்கள் எல்லாம் அவரால் கூடும். ஒருவேளை நீங்கள் இசைந்து கொடுக்கிற விஷயத்தில் இன்னும் வளர வேண்டிய சூழ்நிலையில் இருக்கலாம், உங்களுக்கான முன்னுரிமைகளை மீண்டும் அலசி ஆராய்ந்து, சிறந்த முறையில் தொடர்பு கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நம்பிக்கையின் செய்தியை மிகுந்த அன்புடன் ஆண்டவர் உங்களுக்கு அனுப்புகிறார். “நீ இருக்கிற வண்ணமே நான் உன்னை நேசிக்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிற படியால், நீ இருக்கிற இந்த இடத்திலேயே உன்னை விட்டு விட மாட்டேன். நான் உன்னை மேலான இடத்திற்குக் கொண்டு செல்வேன். முன்னேறிச் செல்... உன் பலவீனத்திலே என் பலம் வல்லமையாய் வெளிப்படுத்தப்படும். நான் உன்னோடு கூட இருக்கிறேன். பயப்படாதே!"
Scripture
About this Plan

உன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்று நினைக்கிறாயா? உன்னை பற்றி நினைக்கவோ கண்டுகொள்ளவோ யாருமில்லை என்று உன் உள்ளத்தில் தோன்றுகிறதா? நீ வாழ்க்கையில் தோற்றுப்போனதாக எண்ணுகிறாயா? நீ என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடிவதுபோல் இருக்கிறதா? எதிர்பார்த்த நன்மை கிடைக்கவில்லையா? அல்லது தாமதமாகிறதா? இனி நான் வாழ இயலுமா அல்லது வாழ்ந்து என்ன அர்த்தம் என்று யோசிக்கிறாயா? இந்த திட்டம் உனக்கானது. ஆம் அன்பரே நான் குறிப்பிட்ட அனைத்தும் மன அழுத்தத்தின் (depression) விளைவுகள். ஆண்டவர் இயேசு ஒருவரால் மட்டுமே இந்த மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு பரிபூரண விடுதலை அளிக்க முடியும். மேலும் அவர் உங்களுக்கு விடுதலை அளித்து உங்களை மேன்மையாக வைக்க ஆவலாய் இருக்கிறார். வாருங்கள் வேதாகமத்தின் அடிப்படையில் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிகளை ஆராய்வோம்.
More
Related Plans

Jesus Is Our "Light of the World"

Walk With God: 3 Days of Pilgrimage

Let's Pray About It

Moments of Grace for Sisters | Devotional for Women

Fresh Start

Connect With God Through Movement | 7-Day Devotional

Sporting Life - God in 60 Seconds

God in 60 Seconds: God's Artist Heart

Psalm 102 - Honest Lament
