YouVersion Logo
Search Icon

உங்களது மிகச்சிறந்த முதலீடு!Sample

உங்களது மிகச்சிறந்த முதலீடு!

DAY 5 OF 5

“ஒவ்வொரு நாளும் தேவனுடைய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துங்கள்”

“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது”-சங்கீதம் 119:105

பலசமயங்களில், உலகம் இருளில் மூழ்கிவிடும்போது, தேவனுடைய   வார்த்தை ஒளிவீசும் சக்தியாய் ஆகிவிடுகிறது. நாம் வேதத்தின் சத்தியங்களுக்கு   உடன்பட்டு, அவை நமது வாழ்க்கையை ஆழமாக   ஊடுருவ அனுமதித்தால் மட்டுமே, தேவ வசனம் நமக்குத் தீபமாகச்   செயல்படமுடியும். மத்தேயு சுவிசேஷத்தில் இயேசு இந்தக்கருத்தை ஓர் உவமை மூலமாக   விளக்குகிறார்:

“விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்.அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப் போட்டது.சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது” – மத்தேயு 13:3-8

விதை வேதாகமத்தையும், நிலத்தின் பலவகையான இயல்புகள் தேவவார்த்தையை ஏற்றுக்கொள்வதற்கான நம் மனதின்   விருப்பத்தையும், ஆயத்தத்தையும் குறிக்கிறது. விதைப்பவன்   எதிர்பார்த்த பலனை எல்லா விதைகளும் கொடுக்கவில்லை என்பதைக்   குறித்துக்கொள்ளுங்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளே பூரணமான பலனைக்   கொடுத்தன. மத்த்தேயு 13:18-23-ஐ வாசித்து இந்தக்கதைக்கு இயேசு கொடுத்த விளக்கத்தைத்   தெர்ந்துகொள்ளுங்கள். நிலத்தைப் பண்படுத்துவது என்பது நமது சிந்தனைகளையும், இருதயத்தின்   நோக்கங்கள் மற்றும் அணுகுமுறைகளையும் வேதவசனம் உள்நுழைந்து மாற்றும்படியாக   ஒப்புக்கொடுப்பதுதான்.

“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது”-எபிரேயர் 4:12

About this Plan

உங்களது மிகச்சிறந்த முதலீடு!

சரியான முதலீடுதான் செழிப்பான வருவாயைக்கொண்டு வருவதற்கு   ஆதார காரணம். நீங்கள் கிறிஸ்தவராயிருந்தால், கிரமமாய்   தேவனுடைய வார்த்தையை உட்கொள்வது தவிர விசுவாசத்தில் சிறப்பான முதலீடு வேறெதுவும்   செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தையை தினசரி நன்றாய் வாசிக்க, புரிந்துகொள்ள, அப்பியாசிக்கத் தேவையான உதவியை   இங்கேயே பெற்றுக்கொள்ளுங்கள். . இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த   உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide   to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

More