YouVersion Logo
Search Icon

உங்களது மிகச்சிறந்த முதலீடு!Sample

உங்களது மிகச்சிறந்த முதலீடு!

DAY 2 OF 5

“வேதாகமத்தைப் பற்றி   ஒரு கண்ணோட்டம்”

காலங்களைக் கடந்த கோட்பாடுகளும், தெளிவான போதனைகளும், நிறைவான, சமன்பாடுள்ள, ஆசீர்வதிக்கப்பட்ட   கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்தோரின் ஏற்புடைய சரித்திரங்களும் வேதாகமத்தில்   நிறைந்துள்ளன. உண்மையில், காலங்களும் பருவங்களும்   மாறினாலும் தேவனுடைய வார்த்தை எக்காலத்துக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. தேவனது   நோக்கத்தை நம் வாழ்வில் நிறைவேற்றும்படி நம்மைத் தயாரிக்கவும்,   தகுதியுள்ளவர்களாய் மாற்றவும் அது எப்பொழுதும் கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது.

“வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்   பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது”-2 தீமோத்தேயு 3:16-17

வேதப்புத்தகம் தேவனுடைய உள்ளார்ந்த எழுத்து   வடிவிலான வெளிப்பாடு; அவர் மனுக்குலத்துக்கு எப்படியெல்லாம் இருக்கிறாரென்று முழுமையாய்   விவரிக்கும் புத்தகம். இந்தக்கருத்தை விளக்கும்படியாக கீழே சில குறிப்புகளைத்   தருகிறோம்:

1. வேதப்புத்தகம் தேவனுடைய அன்பின்   தொடக்கூடிய வெளிப்பாடு. அது அவரது குணநலன்களையும், அம்சங்களையும்   சொல்லுகிறது; அவரது கட்டளைகளையும், எண்ணங்களையும், எல்லாவற்றிற்கும்   மேலாக எல்லாக்காலத்திலும் வாழுகின்ற ஒவ்வொரு மனிதன் மேலும் அவர் கொண்டுள்ள   அன்பின் வெளிப்பாடு.

2. தேவனது சுவாசத்தை உடையது வேதம்.   வேதத்தின் 66 புத்தகங்களும் பல மனிதக்கரங்களால் எழுதப்பட்டாலும், ஒவ்வொரு ஆசிரியரும்   தாங்கள் எழுதியதைப் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டே எழுதினர்.

3. நமது வாழ்வின்மேல் வேதமே   அதிகாரம் செலுத்துகிறது. கடைசியாக, வேதப்புத்தகம் தேவன்   மனுக்குலத்துக்கு எழுதிய கடிதமாக, ஆவியானவரே   எழுதப்பட்டிருக்கிறபடியால், தேவனுக்கு நம் வாழ்வின்மேல்   எவ்வளவு அதிகாரம் இருக்கிறதோ, அவ்வளவு அதிகாரம்   வேதப்புத்தகத்துக்கும் இருக்கிறது.

தேவனுக்குள்ளான நமது முதிர்ச்சிக்கும், ஆவிக்குரிய   வளர்ச்சிக்கும் தேவனுடைய வார்த்தை முக்கியமான அஸ்திபாரமாயிருக்கிறது. தேவவார்த்தை என்னும்   விதைகள் நம் வாழ்வில் விழுந்து செழித்து வளரவேண்டுமானால், நாம் அந்த விதைகளை –   வாசிப்பதன் மூலமாக, மேலும் மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ளுவதன் மூலமாக, பின்பு அவற்றை   வாழ்வில் அப்பியாசிப்பதன் மூலமாக – விதைக்க வேண்டும்.

About this Plan

உங்களது மிகச்சிறந்த முதலீடு!

சரியான முதலீடுதான் செழிப்பான வருவாயைக்கொண்டு வருவதற்கு   ஆதார காரணம். நீங்கள் கிறிஸ்தவராயிருந்தால், கிரமமாய்   தேவனுடைய வார்த்தையை உட்கொள்வது தவிர விசுவாசத்தில் சிறப்பான முதலீடு வேறெதுவும்   செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தையை தினசரி நன்றாய் வாசிக்க, புரிந்துகொள்ள, அப்பியாசிக்கத் தேவையான உதவியை   இங்கேயே பெற்றுக்கொள்ளுங்கள். . இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த   உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide   to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

More