YouVersion Logo
Search Icon

உங்களது மிகச்சிறந்த முதலீடு!Sample

உங்களது மிகச்சிறந்த முதலீடு!

DAY 1 OF 5

“உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானம்!”

இன்றைய உலகில், இந்தக் கூற்று சந்தேகத்துக்குரியதாய் இருக்கலாம். ஆனால், வாழ்வின்   எல்லாப்பகுதிகளுக்கும் பொருந்தும் ஒரு பொதுச்சட்டம் உண்டு. “விதைப்பும்   அறுப்பும்”. இன்னும் எளிதாய்ச் சொல்லவேண்டுமானால், “எதை விதைக்கிறாயோ, அதையே அறுப்பாய்”   என்று சொல்லலாம்.

நீங்கள் முதலாவது விதை ஊன்றாமல்  ஒன்றும் அறுவடை   செய்யமுடியாது. அப்படியே, முதலாவது முதலீடு செய்யாமல்   வருமானம் ஒன்றும் எதிர்பார்க்கமுடியாது. நீங்கள் கிரயம் கொடுத்து வாங்காமல் ஒரு   பொருளையோ, சேவையையோ அனுபவிக்க முடியாது. ஆரோக்கியமான உணவும், ஒழுங்கான   உடற்பயிற்சியுமில்லாமல், உடல் ஆரோக்கியத்தைக் காத்துக்   கொள்ள முடியாது. இந்த உதாரணங்களிலெல்லாம் நாம் புரிந்துகொள்வது, உங்களது விதையின்   அல்லது முதலீட்டின் அளவுக்கும் தரத்துக்கும் தக்கதாகவே அறுவடை அல்லது   வருமானத்தின் அளவும் அமையும் என்பதே.

தேவனோடுள்ள நமது உறவிலும் இதே சட்டத்தின் விதிதான் செயல்படுகிறது. நாம் விதை விதைக்காமல், தேவனோடு கூட நிறைவான, ஆசீர்வாதமான நடையை நாம் அனுபவிக்க முடியாது. ஒரு நல்ல செய்தி என்னவென்றால் தேவன் நம் கையில் நல்ல விதைகளைக் கொடுத்துள்ளார் – வேதாகமம் என்னும் அவருடைய வார்த்தையே அந்த விதை. நமது வாழ்வில் எவ்வளவு தாராளமாய்த் தேவனுடைய வார்த்தையை விதைக்கிறோமோ அதற்குத் தக்கதாக நாம் திரளான அறுவடையைக் காணமுடியும்.

About this Plan

உங்களது மிகச்சிறந்த முதலீடு!

சரியான முதலீடுதான் செழிப்பான வருவாயைக்கொண்டு வருவதற்கு   ஆதார காரணம். நீங்கள் கிறிஸ்தவராயிருந்தால், கிரமமாய்   தேவனுடைய வார்த்தையை உட்கொள்வது தவிர விசுவாசத்தில் சிறப்பான முதலீடு வேறெதுவும்   செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தையை தினசரி நன்றாய் வாசிக்க, புரிந்துகொள்ள, அப்பியாசிக்கத் தேவையான உதவியை   இங்கேயே பெற்றுக்கொள்ளுங்கள். . இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த   உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide   to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

More