YouVersion Logo
Search Icon

உங்களது மிகச்சிறந்த முதலீடு!Sample

உங்களது மிகச்சிறந்த முதலீடு!

DAY 3 OF 5

“ வேதத்தைத் தொடர்ந்தேர்ச்சியாக வாசியுங்கள்”

வேதத்தில் நிறைய வாசிக்க   வேண்டியதுள்ளதென்றும், சில வேளைகளில் திக்குமுக்காடச்   செய்யும் அளவு அதிகமாகவும் அர்த்தம் புரியாமலும் இருக்கிறது என்றும் நம்மில்   அநேகர் கண்டிருக்கிறோம். நீங்கள் அதிகமான புரிதலோடு, திட்டமிட்டு   படிப்படியாக வேதத்தை வாசிக்கும்படியாக, வேதத்தைக் குறித்த சில   உண்மைகளைக் கீழே தருகிறோம்:

முதலாவதாக, வேதப்புத்தகம் இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள்:

பழைய ஏற்பாடு,  உலகம் படைக்கப்பட்ட   நாள் முதற்கொண்டு இஸ்ரேல் ஜனங்களின் வரலாற்றை – அவர்கள் தேசம்   தோற்கடிக்கப்பட்டது, எதிரிகளால் சிறைப்பிடிக்கப்பட்டது, கிறிஸ்துவின்   பிறப்புக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் திரும்பவும் எருசலேமுக்குத்   திரும்பவும் குடிவந்தது எல்லாம் உட்பட – தொகுத்தளிக்கிறது. பழைய ஏற்பாடு, இஸ்ரேல் ஜனங்களுக்கு   அளித்த சட்டப்புத்தகமும் கூட.

புதிய ஏற்பாடு, இயேசு பிறப்பதற்கு சிலநாட்களுக்கு முன்னரிலிருந்து, அவரது வாழ்க்கை, ஊழியம், மரணம் மற்றும்   உயிர்த்தெழுதல் உட்பட உலகம் முழுதும் அவரது திருச்சபை, பரவி நிறுவப்பட்டது வரை எழுதப்பட்ட தேவ வார்த்தைகளின்   தொகுப்பாகும். புதிய ஏற்பாட்டில் வெளிப்பட்ட கிருபையினால் கிடைத்த   கிறிஸ்துவுக்குள்ளான சுதந்திரத்தைப் பற்றிய செய்தி, பழைய ஏற்பாட்டில் போதிக்கப்பட்ட மதச்சடங்குகளின் அவசியத்தை நிறைவேற்றி, அவைகளின் இடத்தைப் பிடித்துக்கொண்டது.

இரண்டாவது, பொதுவாகச் சொன்னால், பழைய – புதிய ஏற்பாடுகளில்   மூன்றுவகையான எழுத்துக்களைப் பார்க்கலாம்.

சரித்திரப் புத்தகங்கள் – நடந்த உண்மைச் சம்பவங்களைச் சித்தரிக்கின்றன.   ஜனங்களைப் பற்றியும், முக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் சரித்திரக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை.

போதனைப் புத்தகங்கள் – கிறிஸ்தவ வாழ்வின் பல அம்சங்கள், திருச்சபை நிர்வாகம், மற்றும் தனிமனித, குடும்பக்   காரியங்களைப் பற்றி நிகழ்ச்சிகளின் சரித்திரக்குறிப்புகள் எதுவுமின்றி   எழுதப்பட்ட புத்தகங்களும், வசனங்களும்.

ஊக்கமளிக்கும் எழுத்துக்கள் – ஆசிரியரின் உணர்வுகளை வாசகருக்குத் தெரியப்படுத்தவும், வாசிப்போரை உற்சாகப்படுத்தி, உயர்த்துவற்காக கவிதை வடிவிலும், கலை வடிவிலும் எழுதப்பட்டவை. 

இயேசுவின் வாழ்வைப்பற்றியும், ஊழியத்தைப்பற்றியும் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள், மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான். இந்த   நான்கு புத்தகங்களும் ‘சுவிசேஷம்’ என்றும் அழைக்கப்படும். இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் திருச்சபை நிறுவப்பட்டதையும், பரவியதையும் காலக்கிரமமாக எடுத்துரைக்கும் சரித்திரப்புத்தகம், அப்போஸ்தலர் நடபடிகள். 

ரோமரிலிருந்து யூதாவின் நிருபம்   வரையிலும் உள்ளவை புதிய ஏற்பாட்டின் போதனைப் புத்தகங்கள். இவையனைத்தும்   கிறிஸ்தவர்களுக்கும், உலகெங்கிலுமுள்ள திருச்சபைக்கும் சபைத்தலைவர்கள்   எழுதிய போதனைகளும் அறிவுறுத்தல்களும் அடங்கிய கடிதங்கள்.

பழைய ஏற்பாட்டிலுள்ள சங்கீதப்   புத்தகம், ஊக்கமளிக்கும் எழுத்துக்கு நல்ல உதாரணம். தொடந்து   தேவனின் வார்த்தைகளை தனது வாழ்வில் முதலீடு செய்யும் ஒருவருக்கு தேவன் அருளும்   ஆசீர்வாதங்களை உறுதி செய்யும் கீழ்க்கண்ட வார்த்தைகளை ஒரு சங்கீதத்திலிருந்து   தருகிறோம்:

“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”- சங்கீதம் 1:2-3.

தேவ வார்த்தைகளை விதையாக நம் வாழ்வில் ஊன்றவேண்டுமானால், வேதவாசிப்பை நமது தினசரிக் கடமையாகக் கொள்ளவேண்டும். தேவ வார்த்தையாகிய   விதை உங்கள் வாழ்வில் செழித்து வளரும் போது, அவரது   ஆசீர்வாதங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியவரும். வறட்சியின் காலத்திலும், கஷ்டமான வேளைகளிலும் கூட உங்களைக் காக்கும் வல்லமையை நீங்கள் பெற்றுக்   கொள்வீர்கள்.

Scripture

About this Plan

உங்களது மிகச்சிறந்த முதலீடு!

சரியான முதலீடுதான் செழிப்பான வருவாயைக்கொண்டு வருவதற்கு   ஆதார காரணம். நீங்கள் கிறிஸ்தவராயிருந்தால், கிரமமாய்   தேவனுடைய வார்த்தையை உட்கொள்வது தவிர விசுவாசத்தில் சிறப்பான முதலீடு வேறெதுவும்   செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தையை தினசரி நன்றாய் வாசிக்க, புரிந்துகொள்ள, அப்பியாசிக்கத் தேவையான உதவியை   இங்கேயே பெற்றுக்கொள்ளுங்கள். . இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த   உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide   to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

More