ஆதியாகமம் 14:22-23
ஆதியாகமம் 14:22-23 TRV
ஆனால் ஆபிராம் சோதோமின் அரசனிடம், “நான் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய அதிஉன்னதமான இறைவனாகிய கர்த்தரை நோக்கி கைகளை உயர்த்தி சத்தியம் செய்து சொல்கின்றது என்னவெனில், ‘ஆபிராமை நானே செல்வந்தன் ஆக்கினேன்’ என்று நீர் சொல்லாதபடி, உம்மிடமிருந்து ஒரு நூலையோ, காலணியின் வாரையோ அல்லது உமக்குச் சொந்தமான பொருள் எதையுமோ நான் எடுத்துக்கொள்ள மாட்டேன்.