யாத்திராகமம் 27
27
தகனபலிபீடம்
1“சித்தீம் மரத்தினால் மூன்று முழம்#27:1 மூன்று முழம் – சுமார் 7 1/2 அடி அல்லது 2.3 மீற்றர் உயரமான ஒரு பலிபீடத்தைச் செய். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமும் உள்ள சதுரமாய் இருக்கவேண்டும். 2அதன் நான்கு மூலைகளிலும் மூலைக்கொன்றாய் நான்கு கொம்புகளைச் செய். கொம்புகளும், பலிபீடமும் ஒரே அமைப்பாய் இருக்கவேண்டும். பலிபீடத்தை வெண்கலத் தகட்டினால் மூட வேண்டும். 3அதன் எல்லாப் பொருட்களையும், வெண்கலத்தினால் செய். சாம்பலை அகற்றுவதற்கான பானைகளும், வாரிகளும், தெளிப்பதற்கான கிண்ணங்களும், இறைச்சி குத்தும் முட்கரண்டிகளும், நெருப்புச் சட்டிகளும் வெண்கலத்தால் செய்யப்பட வேண்டும். 4வெண்கல பின்னல் வேலைப்பாடான ஒரு சல்லடையைச்#27:4 சல்லடையை – தீத்தட்டு செய். அதன் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு வெண்கல வளையத்தை அமைக்க வேண்டும். 5பலிபீடத்தின் விளிம்பின் கீழ் அந்தக் கிராதியை வைப்பாயாக. அது பலிபீடத்தின் அடியிலிருந்து பாதி உயரத்தில் இருக்கும். 6சித்தீம் மரத்தினால் பலிபீடத்துக்குத் தடிகளைச் செய்து, அவற்றை வெண்கலத் தகடுகளால் மூடு. 7பலிபீடத்தைக் கொண்டு செல்லும்போது, அதன் இரு பக்கங்களிலும் இருக்கத்தக்கதாக அத்தடிகள் வளையங்களில் கொழுவப்பட வேண்டும். 8பலிபீடத்தை மரப் பலகைகளினால் செய். அதன் உட்புறம் குழிவாக இருக்கவேண்டும். உனக்கு மலையில் காட்டப்பட்டபடியே அது செய்யப்பட வேண்டும்.
முற்றம்
9“இறைபிரசன்னக் கூடாரத்துக்கு ஒரு முற்றத்தை அமைத்துக்கொள். முற்றத்தின் தென்பக்கம் நூறு முழம்#27:9 நூறு முழம் – சுமார் 150 அடி அல்லது 45 மீற்றர் நீளமாய் இருக்கவேண்டும். திரிக்கப்பட்ட மென்பட்டினாலான திரைகள் அங்கு போடப்பட வேண்டும். 10அங்கே இருபது தூண்களும், அவற்றுக்கான இருபது வெண்கல அடித்தளங்களும் அமைக்கப்பட வேண்டும். அத்தூண்களில் வெள்ளிக் கொழுக்கிகளும், பட்டிகளும் இருக்கவேண்டும். 11அவ்வாறே வட பக்கமும் நூறு முழம் நீளமாய் இருக்கவேண்டும். அங்கேயும் திரைகள் இருக்கவேண்டும். அவற்றுடன் இருபது தூண்களும், அவற்றுக்கான இருபது வெண்கல அடித்தளங்களும் அமைக்கப்பட வேண்டும். அக்கம்பங்களில் வெள்ளிக் கொழுக்கிகளும், பட்டிகளும் இருக்கவேண்டும்.
12“முற்றத்தின் மேற்குப் பக்கமும் ஐம்பது முழம்#27:12 ஐம்பது முழம் – சுமார் 75 அடி அல்லது 23 மீற்றர் அகலமாய் இருக்கவேண்டும். அங்கே பத்து தூண்களுடனும், பத்து அடித்தளங்களுடனும் திரைகள் இருக்கவேண்டும். 13சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கும் அதன் கிழக்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும். 14வாசலின் ஒரு பக்கத்தில் பதினைந்து முழம்#27:14 பதினைந்து முழம் – சுமார் 23 அடி அல்லது 6.8 மீற்றர் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றுடன் மூன்று தூண்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும். 15வாசலின் மறுபக்கத்திலும், பதினைந்து முழம் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றுக்கும் மூன்று தூண்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும்.
16“முற்றத்தின் வாசலுக்கு இருபது முழம்#27:16 இருபது முழம் – சுமார் 30 அடி அல்லது 9 மீற்றர் நீளமான ஒரு திரையைச் செய்யவேண்டும். அது நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல், திரிக்கப்பட்ட மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு ஊசியால் செய்யப்பட்ட பூத் தையல் வேலையாக இருக்கவேண்டும். அதற்கு நான்கு தூண்களும், நான்கு அடித்தளங்களும் இருக்கவேண்டும். 17முற்றத்தைச் சுற்றியுள்ள கம்பங்களெல்லாம் வெள்ளிப் பட்டிகளும், கொழுக்கிகளும் வெண்கல அடித்தளங்களும் உடையனவாய் இருக்கவேண்டும். 18முற்றத்தின் நீளம் நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும்#27:18 நீளம் நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும் – சுமார் 150 அடி நீளம் 75 அடி அகலம் அல்லது 45 மீற்றர் நீளம் 23 மீற்றர் அகலம் இருக்கவேண்டும். அதைச் சுற்றிலும் திரித்த மென்பட்டினாலான ஐந்து முழம்#27:18 ஐந்து முழம் – சுமார் 7 1/2 அடி அல்லது 2.3 மீற்றர் உயரமான திரைகளும் அவற்றின் வெண்கல அடித்தளங்களும் இருக்கவேண்டும். 19இறைபிரசன்னக் கூடாரத்தின் கூடார ஆப்புகளும், முற்றத்துக்கான ஆப்புகளும், உபயோகத்துக்காக அங்கு பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் வெண்கலமாக இருக்கவேண்டும்.
விளக்குக்குரிய எண்ணெய்
20“விளக்குகள் தொடர்ந்து எரிந்து ஒளி கொடுக்கும்படியாக, ஒலிவ விதைகளை இடித்துப் பிழிந்தெடுத்த தெளிந்த எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலருக்குக் கட்டளையிடு. 21இறைபிரசன்னக் கூடாரத்தில், சாட்சிப் பெட்டியின் முன்னால் இருக்கும் திரைச்சீலைக்கு வெளியே, ஆரோனும் அவன் மகன்மாரும் அந்த விளக்குகளை மாலை தொடக்கம் விடியும்வரை கர்த்தருக்கு முன்னால் எரிந்து கொண்டிருக்கும்படி செய்யவேண்டும். இது தலைமுறை தோறும் இஸ்ரயேலர் மத்தியில் நிரந்தர நியமமாய் இருக்கும்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
யாத்திராகமம் 27: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.